நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

இன்றைய ஆராதனையும் நாமும்

அன்று இயேசு சொன்னார் 'நீங்கள் அப்பம் கேட்டால் பிதா கல்லைக் கொடுக்க மாட்டார்' அனால் இன்று நாம் செய்கிறோம். தகப்பன் அப்பம் கேட்கிறார் நாம் கல்லைக் கொடுக்கிறோம். 

புரியும்படி சொல்கிறேன்: நமக்கெல்லாருக்கும் தகப்பன் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆராதனை வேறு. நாம் அவருக்கு கொடுக்கும் ஆராதனை வேறு. 

வாழ்வே ஆராதனையாகிறதா?

வாழ்க்கையையே ஆராதனையாக கேட்கும் அவருக்கு வாரத்தின் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தை மட்டுமே கொடுத்துவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கிறோம். 

உபாகமம்-18:5 சொல்கிறது எந்நாளும் தேவனை ஆராதிக்கும்படிக்கே தேவன் லேவி கோத்திரத்தை தெரிந்து கொண்டாராம். 

மற்றும் தானியேல்-06:16 இல் தரியு ராஜா தானியேலை பார்த்து 'நீ இடை விடாமல் ஆராதிக்கும் தேவன் உன்னைத் தப்புவிப்பார்' என்று கூறுகிறார். 

என்னது? இடைவிடாமல் ஆராதிப்பதா? வேறு வேலைகள் செய்வதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அப்படியல்ல. ஆராதனை என்பது சபையாக கூடி, பாடல்கள் பாடி, பற்பல பாஷைகளைப் பேசி, இசைக்கருவிகளால் ஒலியெழுப்புவது மட்டுமல்ல. நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்கள் மூலமும் தேவனை மகிமைப்படுத்துவதேயாகும். 

வேதத்தில் 1கொரி-10:31 சொல்கிறது 'நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்' ஆம் அதுதான் தேவன் விரும்பும் ஆராதனை. அவரை நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் மகிமைப்படுத்துவதே நாம் அவருக்கு செய்யும் சிறப்பான அராதனையாகும்.

அனால் இன்று நாம் என்ன செய்கிறோம்? திங்கட்கிழமை திருட்டுத்தனம், செவ்வாய்க்கிழமை செவித்தினவு(2தீமோ-4:3), புதன்கிழமை புழுகுத்தனம், வியாழக்கிழமை விக்கிரகாராதனை, வெள்ளிக்கிழமை வெகுளித்தனம், சனிக்கிழமை சகடைத்தனம். இவ்வாறு வாரநாள் முழுவதும் விளங்கிப்போகாத பல்வகைமைப் பாவங்களையும் கலந்து பருகிவிட்டு ஞாயிற்றுக் கிழமையானதும் பரிசுத்தக் குஞ்சுகள் போல பரிசுத்த தேவனை ஆராதிக்க பகட்டாக கூடி வருகிறோம். யாரை ஏமாற்றுகிறோம் தேவனையா? நம்மையேயல்லவா? தேவன் எதிர் பார்ப்பதில் கொஞ்சத்தைக் கூட நம்மால் கொடுக்க முடியாதுள்ளது.


தேவன் மகிமைப்படுகிறாரா?

ஆராதனையில் தேவன் மகிமைப்பட வேண்டும் என்பதே தேவனுடைய எதிர்பார்ப்பாகும். ஆனால் நாம் காணும் பல ஆராதனைகளில் புகை இருக்கிறது கூடவே பகையும் இருக்கிறது, சத்தம் இருக்கிறது தேவனுடைய சித்தம் இல்லை, பல வர்ண விளக்குகள் ஒளிர்கிறது ஆனால் தேவ வெளிச்சம் இல்லை. ஆராதனையாளன் எனப்படுபவன் இருக்கிறான் ஆனால் நிஜமான ஆராதனையாளன் இல்லை.

மொத்தத்தில் ஆராதனை நடத்துபவனுக்கும் பாடகனுக்குமே மகிமை போய்ச் சேருகிறது. தேவனுக்கு அதினால் எந்த மகிமையும் இல்லை. தேவன் பார்வையாளனாக காணப்படுகிறார். 

மனிதனின் மகிமைக்காகவும் புகழ்ச்சிக்காகவும் ஆராதனைகள் நடத்தப்பட்டு அழகான எடிட் பண்ணப்பட்ட புகைப்படங்களுடன் ஒளி இறுவட்டுகளாக ஆராதனைகள் வெளிவருகின்றன. அதை வீடுகளில் போட்டு பார்த்துவிட்டு ஆராதித்து மகிழ்ந்தது போன்ற திருப்தியில் நாம் மூழ்கி விடுகிறோம். இதைக்குறித்து வசனம் இவ்வாறு கூறுகிறது. சங்-4:2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். 

ஆராதனைகள் 'தேவனுக்கு மகிமையை கொடுக்கிறோம்' என்னும் பேரில் தான் நடக்கிறது. ஆனால் மகிமை போய்ச் சேருவதெல்லாம் நடத்துனருக்கே. தாங்கள் இயற்றும் பாடல்களையே தங்கள் ஆராதனைகளில் பாடுவார்கள். இதுக்கு என்ன காரணம். அவர்கள் இயற்றுவது மட்டும் தான் பாடலா? தெளிவாக  தெரிகிறதல்லவா? தங்களை பிரசித்தம் பண்ணவும் புகழ் தேடவும் அராதனை நடத்துவது வாடிக்கையாகி விட்டடது.


தேவன் எதிர்பார்க்கிற படி அமைகிறதா?

தேவன் ஆவியோடும் உண்மையோடும் நாம் அவரை ஆராதிப்பதை விரும்புகிறார் என்று யோவான்-4:23 கூறுகிறது. 

இன்று நாம் ஆவியோடு ஆராதிப்பதாக கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல ஆவிகள் புகுந்து நம்முடைய ஆவியுடன் விளையாடிக்கொ ண்டிருக்கின்றன. நம்முடைய ஆவியை அலைய விட்டுவிட்டு வாயினால் ஆராதிக்கிறோம். இதைத்தான் தேவன் இவ்வாறு கூறுகிறார். ஏசா-29:13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்ளூ அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறதுளூ அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.

சரி ஆவியோடு ஆராதிக்கவில்லை உண்மையோடாவது ஆராதிக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆண்டவர் பொய்களை துருத்தியில் சேர்த்து வைப்பதாக சொல்லியிருந்தால் இன்நேரம் நம்முடைய துருத்திகள் நிரம்பி வழிந்திருக்கும்.

ஆராதனைகளில் பாடும் பாடல்களில் பல பாடுபவர்களுக்கு உண்மையில்லை. 'உம்மையல்லாமல் வேறே விருப்பம் உள்ளத்தில் இல்லையே என்று பாடுபவன் 'ஆண்டவரே என் மனவிருப்பத்தை நிறைவேற்றுவேன் என்று சொன்னீரே எனக்கு ஒரு அழகான வீடு கட்டித் தாருமையா' என்று ஜெபிக்கிறான். 'நீரே எல்லாம்' என்று பாடுபவன் வெளியே போனவுடன் 'கட்டினா அவள கட்டணும்டா' என்று அடம் பிடிக்கிறான். பாடும் போது, துதிக்கும் போது அது உண்மையா என்று ஆராய வேண்டும்.

இன்றைய ஆராதனைகள் பலவற்றில் ஆவியும் இல்லை உண்மையும் இல்லை. இதுதான் 'நாமும் நம்முடைய ஆராதனையும்' என்ற நோக்கில் பார்க்கும் போது புலப்படும் காரியம்.

  • முதலாவது நம்மடைய வாழ்வு ஆராதனையாகவுமில்லை
  • நாம் கூடி ஆராதிக்கும் போது அதில் தேவனுக்கு மகிமை கொடுப்பதும் இல்லை.
  • தேவன் விரும்பும் ஆராதனை செலுத்துவதுமில்லை.


இதற்கெல்லாம் விதிவிலக்காக உண்மையாய் ஆராதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

by- Roberrt Dinesh

Continue Reading | கருத்துகள்

இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா?

வேதாகமக் கோட்பாடுகள் முரண்பட்டவையா?

ஒரு இஸ்லாமிய நண்பர் எங்கோ கொப்பி செய்து முகநூலில் பகிர்ந்து கொண்ட வேதாகமத்துக்கெதிரான சில கேள்விகளுக்கு இக்கட்டுரையில் பதில் தருகிறேன்.

அவர் எழுதியவை சிவப்பு எழுத்திலும் ஹைலைட் பண்ணப்பட்டும் உள்ளன. என்னுடைய பதில்கள் கறுப்பு எழுத்தில் இங்கே தரப்படுகிறது.

எல்லோரையும் மீட்கும் பொருட்டாக ஏசு சிலுவையில் மறித்தார் என கிருத்துவர்கள் கூறுகிறார்கள்....! பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்திய ஏசுவின் துன்பம் மரணம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிருத்துவம் போதிக்கப்படுகிறது..!! .!!இக்கோட்பாடு ஏசுவின் கோட்பாட்டிற்கு முறன்பட்டதேயாகும்..!!

/////////எல்லோரையும் மீட்கும் பொருட்டாக ஏசு சிலுவையில் மறித்தார்     என கிருத்துவர்கள் கூறுகிறார்கள்.!////////
இயேசு எல்லாரின் பாவங்களுக்காக மரித்தார் என்று கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பத்தின் படி கூறுவதில்லை. அது வேதாகமம் சொல்லும் கருத்தாகும். மரித்தார் என்பது மட்டுமல்ல மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்தார் என்றும் வேதாகமம் கூறுகின்றது.

//////// பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்திய ஏசுவின் துன்பம் மரணம் பற்றிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே கிருத்துவம் போதிக்கப்படுகிறது..!! /////////
இயேசுவின் துன்பம் மரணம் என்னும் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமல்ல இயேசுவின்  உயிர்தத்தெழுதல் என்னும் உண்மை நிகழ்வின் அடிப்படையிலும்தான் கிறிஸ்தவம் போதிக்கப்படுகிறது.

அது மட்டுமல்ல இக்கோட்பாடுகள் பவுலும் பேதுருவும் அறிமுகப்படுத்தியது என்று யார் சொன்னது? இஸ்லாமிய அறிஞர்கள் இப்படி பொய்களை புனைவதை அப்படியே உண்மை என்று  நம்பி அதை கொப்பி பேஸ்ட் செய்யும் இஸ்லாமிய அப்பாவிகள் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள். தம்முடைய துன்பம் மரணம் பற்றி இயேசுவே பல தடவைகள் முன்னறிவித்தார். அது மட்டுமல்ல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூட மீட்பரின் பாடுகள் மரணம் பற்றி அதிகமாக கூறியுள்ளார்கள். பைபிளை நன்கு படியுங்கள்.

 ////////இக்கோட்பாடு ஏசுவின் கோட்பாட்டிற்கு முறன்பட்டதேயாகும்..!! //////////
இது மகா பெரும் பொய்யாகும். இயேசுவின் கோட்பாட்டுக்கு இது முரண்பட்டது என்றால் இயேசுவின் கோட்பாடு எது என்பதை உங்களால் கூற முடியுமா? தன்னுடைய பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றின் மூலம் உலக மக்களுக்கு மீட்பு உண்டாகும் என்பதே இயேசுவின் கோட்பாடு. இதைத்தான் பவுலும் பேதுருவும் மற்ற அனைத்து சீடர்களும் போதித்தனர்.
இயேசு தன்னுடைய கோட்பாட்டை தம்முடைய வாயாலே சொல்கிறார். கீழே நான் பதியும் வேத வசனங்களை வாசியுங்கள். இவை இயேசு தம்முடைய சொந்த வாயாலே சொன்னது.
· மாற்-10:45/மத்-20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
·         (மத் 26:28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
· மத்-17:23 அவா்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்ததெழுந் திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
·  மாற்-8:31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவா்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
· மாற்-9:31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷா் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவா்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவா்; தம்முடைய சீஷா்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
·        லூக்-9:22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

அது மட்டுமன்றி இது தீர்க்கதரிசிகளால் கூட முன்னறிவிக்கப்பட்டிருந்த விடயமாகும். எசாயா 53ம் அதிகாரம் முழுவதையும் படிக்கவும்.
  • ஏசா 53:11 அவா் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரா் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவா்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் ஏசு சிலுவையில் மறிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது அவனவன் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப அவனவன் பாவங்கள் மன்னிக்கபடும் என்றே பைபில் கூறுகிறது..!!

///////// மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் ஏசு சிலுவையில் மறிப்பதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது //////////
இது உங்களுடைய சொந்த கருத்து. எந்த ஆதாரமும் அற்றது. ஆனால் வேதாகமம் இவை இரண்டுக்குமிடையில் மிகவும் தொடர்பு இருப்பதாக கூறுகிறது.
  • மாற்-10:45/மத்-20:28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்
  • (மத் 26:28) இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

//////அவனவன் செய்யும் நற்காரியங்களுக்கு ஏற்ப அவனவன் பாவங்கள் மன்னிக்க படும் என்றே பைபில் கூறுகிறது..!! ////////
இப்படி வேதாகமம் ஒரு தடவை கூட சொல்லவில்லை. இப்படி வேதாகமத்தில் எங்கே இருக்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா? நீங்கள் எப்படிப்பட்ட பொய்யர் என்பது உங்களுக்கு விளங்குகிறதா? பைபிள் சொல்லாத ஒன்றை அது சொல்வதாக இவ்வளளவு தெளிவாக பொய் கூறுகின்றீர்களே. நற்கிரியைகளால் பாவமன்னிப்பு கிடைக்காது.

//////////ஆதாம் செய்த பாவத்திற்காக ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழித்து ஏசுவை பிடித்து தன்டிப்பது நீதியா ?? /////////
எது நீதி என்று கடவுளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. மேலும் இயேசு தம்மைத் தாமே அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தார். அவரை யாரும் துரத்திப் பிடிக்க வேண்டியிருக்கவில்லை. தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.

/////////ஏசு சிலுவையில் துன்பப்பட்டது மனித குலத்தின் பாவத்திற்காக என்றால் ஆதத்தின் ஆதிபாவத்திற்காக ஆயிரம் ஆண்டுகள் கழித்தா கடவுளுக்கு கருனை வரவேண்டும்..!! /////////
அதற்கு முன்பு கடவுளுக்கு கருணை இல்லாமலா இருந்தது?. ஆதியிலிருந்தே தேவன் அன்பானவர்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் அவர் நியமித்த காலங்களும் சமயமும் ஏற்பட வேண்டும்.


பாவம் எவ்வகையில் நீக்கப்பட்டது? ஏசுவின் காலம்வரையுள்ள மக்களின் பாவம் நீக்கப்பட்டதா?? இல்லை சமகாலத்திய மக்களின் எல்லா பாவமும் நீக்கப்பட்டதா?? இஸ்ரவேலர்களுக்கு மட்டுக் நீக்கப்பட்டதா?? இல்லை கிருத்துவர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டதா?? இக்கேள்விக்கு தெளிவான பதில்  எந்த சுவிசேசங்களிலும் இல்லை.!!

/////பாவம் எவ்வகையில் நீக்கப்பட்டது? ஏசுவின் காலம்வரையுள்ள மக்களின் பாவம் நீக்கப்பட்டதா?? இல்லை சமகாலத்திய மக்களின் எல்லா பாவமும் நீக்கப்பட்டதா?? இஸ்ரவேலர்களுக்கு மட்டுக் நீக்கப்பட்டதா?? இல்லை கிருத்துவர்களுக்கு மட்டும் நீக்கப்பட்டதா?? ////////
இது சரியாக சிந்திக்கும் ஒருவர் கேட்கக் கூடிய கேள்வி அல்ல.
இயேசுவின் மரணத்தின் மூலம் யாருடைய பாவமும் நீக்கப்படவில்லை. மாறாக இதுவரை வாழ்ந்த, இப்போது வாழுகிற, இனிமேல் வாழப் போகிற யாவருடைய பாவங்களுக்காகவும் பரிகாரம் செய்யப்பட்டுள்ளது. அதுவே பலி என்று சொல்லப்படுகின்றது..யாரெல்லாம் அந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு அந்த பரிகாரம் தனக்காகவும் செலுத்தப்பட்டது என்று நம்புகிறானோ அவனுக்கு அந்த பரிகாரத்தில் உரிமை கிடைக்கிறது. பங்கும் கிடைக்கிறது. அதன்பின் அந்த மனிதன் தான் அந்த பரிகாரத்தை பெறுமுன்னர் செய்த பாவங்கள் அனைத்தையும் கடவுளிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்கும் போது மன்னிப்பு பெற்றுக் கொள்வான். அதன் பின்பு பாவம் செய்யாமல் இருக்க பரிசுத்தாவியானவரின் உதவியை பெறுகிறான். அவரின் உதவியை உதாசீனம் செய்யாமல் வாழ்ந்தால் பாவமின்றி வாழலாம். பாவம்செய்து வாழ்ந்தால் அவனுக்கு தண்டணை உண்டு.
  • 1யோவா-1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகாிப்பதற்கு அவா் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
  • 1யோவா-1:7 அவா் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவா் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
  • அப்-16:31 அதற்கு அவா்கள்: கா்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் ……

/////இக்கேள்விக்கு தெளிவான பதில் எந்த சுவிசேசங்களிலும் இல்லை.!! /////////
சுவிசேஷம்தான் பதில் தர வேண்டும் என்று ஏன் ஒற்றைக்காலில்நிற்கிறீர்கள் சகோதரரே? வேதம் பதில் சொல்லாமல்  இல்லையே? மேலே உள்ளவசனங்களை வாசியுங்கள்.

///////// ஏசு கூறுகிறார் இஸ்ரவேலரின் வீட்டாருக்கு அனுப்பபட்டேனேயின்றி மற்றபடியல்ல என்று (மத்-15.24) இஸ்ரவேலருக்கு தூதராக வந்த ஏசு எப்படி உலக மக்களின் அல்லது கிருத்துவரல்லாத மக்களின் பாவங்களை துடைக்க முடியும்?? ஏசு அனுப்பப்பட்டது குறிப்பிட்ட இனத்திற்கு ஆனால் சிலுவையில் மறித்ததோ..! மனிதகுல அனைத்திற்க்கும் என்றால் இது முரண்பாடு அல்லவா ??

!! ஒரு தேசிய தூதர் எப்படி அகில உலகத்திற்கு இரச்சகராக முடிந்தது ?? //////////

இந்த கேள்விக்கு தெளிவான பதிலை நான் வேறொரு கட்டுரையாக ஏற்கனவே எழுதியுள்ளேன். “இயேசு முழு உலகத்தாருக்கும் அனுப்பபட்டவரா..???’ என்னும் தலைப்பில் அந்த கட்டுரையை எழுதியுள்ளேன். இன்னொரு இஸ்லாமிய நண்பருக்கு பதில் கட்டுரையாக அதை எழுதினேன். விரும்பினால் இந்த லிங்குக்கு சென்று வாசித்துகொள்ளுங்கள். http://www.siluvai.com/2016/09/blog-post.html

நீங்கள் எல்லாரும் அதே கேள்விகளைத்தான் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

////////தடுக்கப்பட்ட கனியைதின்றவர் ஒருவர் (ஆதாம்) அதன் சுவையரியாத (ஏசு) இன்னொருவரை தன்டிப்பது நீதியா ?? //////////

மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசு தன்மேல் அதற்கான தண்டணையை ஏற்றுக் கொண்டார் என்று வேதம் சொல்வதை புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறீர்கள். தேவனுடைய நீதி உங்களுக்கு பைத்தியமாக தோன்றுகிறது. சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாமய் தோன்றும் என்பதை வேதம் சொல்லி விட்டது.
Continue Reading | கருத்துகள் (2)

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.