நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » பைபிள்;பரிசுத்த வேதாகமம்

பைபிள்;பரிசுத்த வேதாகமம்


பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது."(யோவான் 20:31).
"தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது."(ரோமர் 15:4). —

சிறு குறிப்புகள்

பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260

கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்

பழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்

புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.

பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.

பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.

பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன.

-தொகுக்கப்பட்டது

பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில புஸ்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழையேற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது. பழையேற்பட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை. பழையேற்பாட்டின் முதல் 5 புஸ்தகங்கள் பஞ்ச ஆகமம் என்று அழைக்கப்படுகின்றது. இப்புஸ்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டவையாகும். நாற்பது ஆண்டு வனாந்தர ஜாத்திரையில் எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. எழுதப்பட்ட காலம் 1446- 1406 வரை ஆகும். பஞ்ச ஆகமங்களை தோரா என்று எபிரேய மொழியில் அழைப்பார்கள். வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 ஆசிரியர்களினால் ( ஏறக்குறைய ) எழுதப்பட்டது. இவர்களில் இடையர்கள், இராஜாக்கள், மீனவர்கள், நீதிபதிகள், பிரதம மந்திரி, தீர்க்கதரிசிகள், அரசியல் தலைவர்கள், வரி வசூலித்தவர்கள், மருத்துவர்கள் போன்ற பலநிலைப்பட்டவர்களும் இருந்தனர்.
அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு 
உலகிலேயே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ள புஸ்தகம் வேதாகமம். இதன் முதல் மொழி பெயர்ப்பு கி.மு 250ல் ஆரம்பமானாது. இன்று நூற்றக்கணக்கான மொழிகளில் வேதாகமும், அதன் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து மொழி பெயர்த்து வருகின்றனர். உலகில் இதுபோல் இன்னொரு புஸ்தகம் இல்லை
வேதாகமத்தை அழிக்க முயன்றவர்கள் 
1. வால்டர் எனும் பிரெஞ்சு நாஸ்திகன்: இன்னும் 100 வருடத்தில் வேதாகமம் இருக்காது, எல்லாரும் கல்வி கற்று அறிவடைந்துவிடுவார்கள். வேதாகமத்தை ஒருவரும் வாசிக்க மாட்டார்கள். வேதாகமத்தை பார்க்க வேண்டுமானால் பண்டைக்கால மியூசியத்திற்கு தான் சென்று பார்க்க வேண்டும், கிறிஸ்தவ மார்க்கமே இருக்காது என்றான். இவன் இப்படி கூறிய ஆண்டு கி.பி 1750ல். கி.பி 1778ல் வால்டர் மரித்தாhன். அவன் இறந்து சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஜெனிவா வோதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
வால்டரின் நாஸ்திக புஸ்தகங்கள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் வேதாகமங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன. வால்டர் வசித்த வீட்டிலேயே இந்த வேதாகமங்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன. வால்டர் போய் சேர்ந்துவிட்டான். ஆனால் இன்றும் உலகில் மிகச்சிறந்த புஸ்தகமாக விற்பனையாவது வேதாகமமே.

2. வேதாகம நூல்கள் யாவையும் சேகரித்து அழித்துவிடவும், கிறிஸ்தவ ஆராதனைகளை உடனே நிறுத்திவிடவும், ரோமப்பேரரசனான டயக்ளீசியன் கி.பி 303ல் ஒரு கட்டளை பிறப்பித்தான். கிறிஸ்தவ ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வேதாகம நகல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ அதிகாரிகளாக இருந்தவர்களின் உயர் பதவிகள் பறிக்கப்பட்டன. சாதாரண குடிமகனுக்கிருந்த உரிமைகளையும் இழந்தார்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25 ஆண்டுகளுக்குப்பின் கொன்ஸ்டான்டைன் ரோமப்பேரரசன் ஆனான். இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானான். வேதாகமத்தின் 50 நகல்களை அரசாங்க செலவில் உடனே ஆயத்தப்படுத்தும்படி கட்டளை பிறப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்க்கதரிசனங்கள் 
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டுள்ளபடியே நிறைவேறிவருகின்றது என்பது வேதாகமத்தின் தனிச்சிறப்பு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, ஊழியம், மரணம், உயிர்த்தெழுதல் போன்றவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மிக துல்லியமாக முன்னுரைக்கப்பட்டன. அதன்படியே ஒவ்வொன்றும் நிறைவேறின. பல்வேறு நாடுகளின் அரசர்களைக்குறித்தும் ஆட்சியைக்குறித்தும் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டவைகள் எல்லாம் நிறைவேறின. இன்றும் நிறைவேறி வருகின்றன. இதற்கு இணையான எந்தப்புஸ்தகமும் உலகில் இல்லை.
சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம் 
இந்த உலக்திற்கு வெளியே வானவெளியில் சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம் வேதாகமமே. மைக்ரோபிலிம் என்ற முறையில் முழுவேதாகமமும் சிறிய அளவில் அச்சிடப்பட்டு சந்திரனில் வைக்கபட்டுள்ளது. சந்திரனில் ஆராய்சிபண்ண சென்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை ஆரம்பிக்குமுன் பூமி உருவாக்கப்பட்ட விதத்தை வேதத்திலிருந்து வாசித்தார்கள். அதாவது ஆதி1:1 " ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். என்ற பகுதியை வாசித்த பின்பே சந்திரனில் தங்கள் ஆராய்ச்சியை துவங்கினர்.

வேதாகமம் எழுத உபயோகிக்கப்பட்ட பொருட்கள் 
ஆதாம் முதல் மோசேயினுடைய காலம் வரை வேதாகமம் எழுதபட்டிருக்கவில்லை. தேவனுடைய வார்த்தைகள் ஒருவர் வழியாக மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதி நாட்களில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை மனிதர்கள் வாழ்ந்ததினால் ஏராளமான தகவல்களை அறிந்திருந்தார்கள். தங்கள் பின் வரும் சந்ததியினருக்கும் அறிவித்தார்கள். உதாரணமாக ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்திருந்தான். அவனுடைய நாட்களில் ஏராளமான சந்ததிகளை கண்டிருப்பான். ஏராளமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்திருப்பாhன். நோவா 950 வருடங்கள் வாழ்ந்தான். ஜலப்பிரளயத்திற்கு பின்பு மனிதனுடைய வாழ்நாள் மிகவும் குறைந்து விட்டது. இந்த நாட்களில் தான் பரிசுத்த ஆவியானவர் மோசே போன்ற தலைவர்களை பரிசுத்த எழுத்துக்களை எழுதும்படி ஏவினார். வேதாகமத்தின் ஆக்கியோன் பரிசுத்த ஆவியானவரே. அவர் அந்தந்தக்காலத்தில் பல்வேறு மனிதர்களை கருவியாகப்பாவித்தார். எனவே தான் வேதாகமம் சுமார் 1600 வருட இடைவெளியில் பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் அதின் கருப்பொருள் ஒன்றாகவே இருக்கிறது. கருத்தொற்றுமையும் ஆச்சரியமானது.
வேதாகமம் எழுதப்பட பல பொருட்கள் உபயோகிக்கப்பட்டன. 
பப்பைரஸ்:

ஆதி நாட்களில் எழுத அதிகமாய் உபயோகிக்கப்பட்டது பப்பைரஸ். இது ஏரிகள், ஆறுகள் அருகே வளரும் ஒரு வித நாணற்செடி. எகிப்திலும், சீரியாவிலும் இது அதிகமாய் காணப்படுகின்றது. இந்த நாணற்செடியை வெட்டி, தோலுரித்து, பதப்படுத்தி, காயவைத்து எழுத பயன்படுத்தினார்கள். இது எழிதில் கெடாது. கி.மு 2400 - கி.பி 300 வரை இது அதிகமாக புழக்கத்தில் இருந்தது. சிரியாவிலிருந்து பைப்லோஸ் என்ற துறைமுகம் வழியாக இந்த பப்பைரஸ் பல இடங்களுக்கும் அனுப்பப்பட்டது. புத்தகம் என்பதற்கு கிரேக்க வார்த்தை பிப்லோஸ். எனவே இந்த ஊருக்கு புத்தகம் என்ற பொருளுள்ள பைப்லோஸ் என்ற பெயர் வந்தது. பேப்பர் என்ற ஆங்கில வார்த்தை இதன் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது.

பார்ச்மென்ட்:

ஆடு, மாடு மற்றும் மிருகங்களின் தோல்களை பதப்படுத்தி பக்குவப்படுத்தி பயன்படுத்த ஆரம்பித்தனர். இதற்கு பார்ச்மென்ட் (தோற்சுருள்) என்று பெயர். பார்ச்மென்ட் என்ற வார்த்தை பெர்கமஸ் (பெர்கமு) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள பெர்கமு என்ற ஊரில் இந்த தோல் பதனிடும் தொழில் மிக பிரசித்தி பெற்றதாக இருந்தது.

வெலம்:

இது கன்றுக்குட்டியின் தோலில் இருந்து தயாரிக்கப்பட்ட மெல்லிய தோல்சுருள். இது பதப்படுத்தப்பட்டபின் கருஞ்சிவப்பு சாயம் பூசப்பட்டு இதில் பொன், வெள்ளி, ஆகிய உலோகங்களை உருக்கி எழுதினார்கள்.
எழுத உபயோகிக்கப்பட்ட மற்ற பொருட்கள்:
மண் தகடுகள், கல், களிமண் தகடுகள், மெழுகால் மூடப்பட்ட மரத்தகடுகள் போன்றவைகளும் எழுத பயன்படுத்தப்பட்டன.

எழுதுகோல்கள்:

சிறிய உளி, முப்பட்டை உருவிலான உலோகப்பேனா, கூர்மையான நாணற்குச்சி, ஆகியவை எழுதுகோலாக பயன்படுத்தப்பட்டன. அடுப்புக்கரி, பசை, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட மை எழுதுவதற்கு பயன்படுத்தினார்கள்.


வேதாகமம்
பிப்லோஸ் என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் புத்தகம். இதிலிருந்து தான் பைபிள் என்ற ஆங்கில வார்த்தை உருவாகிற்று. அதாவது இது ஒன்று தான் உண்மையான புத்தகம் என்று பொருள். இது எவ்வளவு ஆச்சரியமானது. கி.மு 132ல் இந்த வார்த்தை முதன் முதலாக பழைய ஏற்பாட்டை குறிக்க பயன்பட்டது.

சார் வால்டர் ஸ்காட் என்ற பெரியவர் தன் மரணப்படுக்கையில் புத்தகத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்டார். என்ன புத்தகம் என்று கேட்ட பொளுது, இருப்பது ஒரு புத்தகம் தானே என்று கூறினார்.









பரிசுத்த வேதாகமத்தை எமக்குத் தந்தவர்...,

பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பரிசுத்த வேதாகமம்.

பரிசுத்த வேதாகமம் கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தின் பயங்கரமும் பரிசுத்தத்தின் மேன்மையும் விளககப் பட்டிருக்கிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க தேவன் வகுத்த திட்டத்தை பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது.

ஆதாம் முதல் மோசேயினுடைய காலம் வரை வேதாகமம் எழுத பட்டிருக்கவில்லை. தேவனுடைய வார்த்தைகள் ஒருவர் வழியாக மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதி நாட்களில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை மனிதர்கள் வாழ்ந்ததினால் ஏராளமானதகவல்களை அறிந்திருந்தார்கள். தங்கள்பின் வரும் சந்ததியினருக்கும் அறிவித்தார்கள். உதாரணமாக ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்திருந்தான். அவனுடையநாட்களில் ஏராளமான சந்ததிகளை கண்டிருப்பான். ஏராளமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்திருப்பான். நோவா950 வருடங்கள் வாழ்ந்தான். ஜலப்பிரளயத்திற்கு பின்பு மனிதனுடைய வாழ்நாள் மிகவும் குறைந்து விட்டது. இந்த நாட்களில் தான் பரிசுத்த ஆவியானவர் மோசே போன்ற தலைவர்களை பரிசுத்த எழுத்துக்களை எழுதும்படி ஏவினார். வேதாகமத்தின் ஆக்கியோன் பரிசுத்த ஆவியானவரே. அவர் அந்தந்தக்காலத்தில் பல்வேறு மனிதர்களை கருவியாகப்பாவித்தார். எனவே தான் வேதாகமம் சுமார் 1600 வருடஇடைவெளியில் பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் அதின் கருப்பொருள் ஒன்றாகவே இருக்கிறது. கருத்தொற்றுமையும் ஆச்சரியமானது.

பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில புத்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது. பழையேறபாட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை. பழையேற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள் பஞ்ச ஆகமம் என்று அழைக்கப்படுகின்றது. இப்புத்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டவையாகும். எழுதப்பட்ட காலம் 1446- 1406 வரை ஆகும். பஞ்ச ஆகமங்களை தோரா என்று எபிரேய மொழியில் அழைப்பார்கள்.

வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 ஆசிரியர்களினால்(ஏறக்குறைய)எழுதப்பட்டது. இவர்களில் இடையர்கள், இராஜாக்கள், மீனவர்கள், நீதிபதிகள், பிரதம மந்திரி, தீர்க்கதரிசிகள், அரசியல் தலைவர்கள், வரி வசூலித்தவர்கள், மருத்துவர்கள் போன்றபலநிலைப்பட்டவர்களும் இருந்தனர்.




பரிசுத்த வேதாகமத்தை அழிக்க முயன்றவர்களில் சிலர்;





 
(1). வால்டர் எனும் பிரெஞ்சு நாஸ்திகன்: இன்னும் 100 வருடத்தில் வேதாகமம் இருக்காது, எல்லாரும் கல்வி கற்று அறிவடைந்துவிடுவார்கள். வேதாகமத்தை ஒருவரும் வாசிக்க மாட்டார்கள். வேதாகமத்தை பார்க்க வேண்டுமானால் பண்டைக்கால மியூசியத்திற்கு தான் சென்று பார்க்க வேண்டும், கிறிஸ்தவ மார்க்கமே இருக்காது என்றான். இவன் இப்படி கூறிய ஆண்டு கி.பி 1750ல
். கி.பி 1778ல் வால்டர் மரித்தான். அவன்இறந்து சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஜெனிவா வோதாகம சங்கம்ஆரம்பிக்கப்பட்டது. வால்டரின் நாஸ்திக புஸ்தகங்கள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் வேதாகமங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன. வால்டர் வசித்த வீட்டிலேயே இந்த வேதாகமங்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன. வால்டர் போய் சேர்ந்துவிட்டான். ஆனால், இன்று பரிசுத்த வேதாகமம் இல்லாத நாடே கிடையாது.

(2). வேதாகம நூல்கள் யாவையும்சேகரித்துஅழித்துவிடவும், கிறிஸ்தவ ஆராதனைகளை உடனே நிறுத்திவிடவும், ரோமப்பேரரசனான டயக்ளீசியன் கி.பி 303ல் ஒரு கட்டளை பிறப்பித்தான். கிறிஸ்தவ ஆலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வேதாகமநகல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ அதிகாரிகளாக இருந்தவர்களின் உயர் பதவிகள் பறிக்கப்பட்டன. சாதாரண குடிமகனுக்கிருந்த உரிமைகளையும் இழந்தார்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25 ஆண்டுகளுக்குப்பின் கொன்ஸ்டான்டைன் ரோமப்பேரரசன் ஆனான். இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானான். வேதாகமத்தின் 50 நகல்களை அரசாங்க செலவில் உடனே ஆயத்தப்படுத்தும்படி கட்டளை பிறப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.









Share this article :

2 கருத்துகள்:

Jayaseelan Samuel சொன்னது…

இந்த ப்ருன்ஸ்டாட் போலி கிறிஸ்தவ சபை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

brunstadchristianchurchreview.blogspot.in

பெயரில்லா சொன்னது…

நல்ல தொகுப்புரை அருமை பாராட்டுக்கள்.
Anbudan,
Rathnaswamy Allwin
E-mail: rsallwin@yahoo.com

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்