ஒரு முறை அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் அவர்களிடம், 'மிகவும் தைரியமாக அரசியல் வாதிகளை பற்றியும், மற்ற காரியங்களை குறித்தும் பயப்படாமல் பேசுகிறீர்களே, உங்களை தாக்குவார்கள், கொலை மிரட்டல்கள் எல்லாம் செய்வார்களே' என்று கேட்டபோது, 'எனக்கு அதிகமுறை கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது, என் மனைவியிடம் டெலிபோனிலும் மிரட்டி இருக்கிறார்கள், மனைவி சொல்வார்களாம், உங்களால் முடிந்தால் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி போனை வைத்து விடுவார்களாம்,
என் காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது, என் காலம் முடியும்வரை என்னை இரயில் தண்டவாளத்தில் போட்டாலும் மரிக்க மாட்டேன்' என்று சிரித்து கொண்டே சொன்னார்கள்.
ஆம், கர்த்தர் உங்களை கொண்டு துவங்கியதை உங்ளை கொண்டு தான் முடிப்பார். அதுவரை மரணமோ, பிசாசோ ஒன்றும் உங்களை எதுவும் செய்ய முடியாது, கொள்ளை நோய்களோ, பிசாசின் தந்திரங்களோ நம்மை ஒன்றும் அணுக முடியாது. ஏனென்றால் நம்முடைய காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவர்கள்தான் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலைப்பட்டு, தங்கள் கைகளை ஜோசியரிடமும், சபைக்கு வருகிற ஊழியக்காரர்களிடமும் போய், 'ஐயா எனக்காக, என் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்' என்று கேட்பார்கள்.
ஆனால் நாமோ அப்படியல்ல, நம்முடைய காலங்கள் கர்த்தரின் கரத்தில் இருப்பதால் எந்த கவலையும் இல்லாதவர்களாக கர்த்தர் கொடுக்கும் காலம் வரைக்கும் அவருக்காக வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!
--------------------------------------------------------------------------------நன்றி...Jesus Imchristian--------------------------------------------------------
2 கருத்துகள்:
unmaiyave kalam kartharin karathil irukirathu yanbathai thelivu paduthineergal,
azhagu
thank u verymuch brother
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..