லீபனோன் என்றால் வெண்மலை எனபது பொருள். பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும். எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளது. இதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் ‘வெள்ளை மலை’ என்ற பேர் ஏற்பட்டது.
ஆதி காலத்தில் இம்மலைசரிவுகளில் கேதுரு மரங்கள் நிறைய நின்றன. இங்கிருந்துதான் சாலமோன் தேவாலயத்திற்குத் தேவையான கேதுரு மரங்களைக் கொண்டுவந்தான்.
நன்கு வளர்ச்சி பெற்ற ஒருகேதுருமரத்தின் அடியில் ஐயாயிரம் பேர் தங்கலாம். ஆகவே தான் நீதிமானின் செழிப்பை லீபனோனின் கேதுருக்கு இணையாக வேதம் சொல்கிறது,
“நீதிமான் செழித்து லீபனோனில் உள்ள கேதுருவைப்போல் வளருவான்” (சங் 92:12).
கேதுரு மரங்களின் வேர் வெகுதூரம் படர்ந்து வளரும். இவைகள் பாறைகளை இறுகப்பற்றிப் பிடித்துக்கொள்வதால் கடும்புயலானாலும் இம்மரங்கள் அசைக்கப்படுவதில்லை. கற்பாறையாம் இயேசுவைப்பற்றிக் கொள்வோமானால் எந்தச் சோதனைகளும் நம்மை அசைக்கமுடியாது.
இம்மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உராய்ந்து பிசின் போன்ற கசிவு ஏற்படுகிறது.
கேதுருவின் பிசின் நறுமணம் மிக்கது. பூச்சிகள் இம்மரத்தை அழிக்காதபடி, நறுமணம் நிறைந்த பிசின் மரத்தைப் பாதுகாக்கிறது.
லீபனோனின் கடற்கரைக்கு 25 மைல்களுக்கு அப்பால் ஒரு கப்பல் வருப்போதே கேதுருக்களின் நறுமணம் இன்ப நுகர்வாயிருக்கும். காடுகளினூடே ஊற்றுத் தண்ணீரானது கேதுரு மரங்களின் வேர்களினால் சுதந்தரிக்கப்பட்டு பருகுவதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இம்மலைச்சரிவுகளில் மக்கள் வசிக்க விரும்புவர்.
கேதுரு மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள் நீண்ட காலம் உழைக்கும். பிசின் தைல வாசனையால் பூச்சிகள் சேதப்படுத்துவதில்லை. சாலமோனின் ரதம் கேதுரு மரத்தால் செய்யப்பட்டது. (உன் 3:9)
சாலமோன் ஞானி இம்மரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்:
“என் மணவாளியே, உன் வஸ்திரங்களின் வாசனை லிபனோனின் வாசனைக்கு ஒப்பாயிருக்கிறது” (உன் 4:11).
பிரிட்டனிலுள்ள பொருட்காட்சி நிலையத்தில் ஒரு கேதுரு மரத்துண்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தட்பவெட்ப மாற்றங்களால் லிபனோனில் கேதுரு மரங்கள் அரிதாகி வருகின்றன.
நன்றி : கதம்பம்
நன்றி : ஜீவ ஊற்று
நன்றி : ஜீவ ஊற்று
1 கருத்துகள்:
Want to actively participate in whatsup Christian group? Join us.
https://chat.whatsapp.com/BWM6twKXfC8LYsvTvMkzP0
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..