Rev.Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் தன் பிரசங்கத்தில் அடிக்கடி கூறும் ஒரு உதாரணம்.
தன் கூட்டத்தில் மிஷனரி பணிக்கு ஒப்புக்கொடுத்த ஒரு படித்த வாலிபன் ஒருநாள் திடீரென்று சகோ.தியோடர் அவர்களைப்பார்த்து அண்ணே, எனக்கு அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்ல விசாவும், வேலையும் கிடைக்க ஜெபியுங்கள் என்றான்.
அதற்கு அவர் நீ செய்த மிஷனரி தீர்மானம் என்ன ஆயிற்று தம்பி? என்றார். அதற்கு அவன் அண்ணே மிஷனரியாகபோனால் நான் மட்டுமே வடஇந்திய காடுகளுக்குள் ஊழியம் செய்யபோவேன். ஆனால் எனக்கு அரபு நாடுகளில் வேலை கிடைத்தால் பெரும்தொகை சம்பளமாக எனக்கு கிடைக்கும். அதைக்கொண்டு 20 மிஷனரிகளை நான் ஒருவனே தாங்கி அந்த 20 மிஷனரிகளையும் வடஇந்தியா அனுப்பமுடியுமே! என்றான்.
தம்பி!, நீ சொல்வது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது!. ஆனால் ஆண்டவர் அழைத்தது உன்னைதானே! உன் பணத்தை அல்ல! நீ பணம் அனுப்பி ஆண்டவருக்கு உதவி செய்ய வேண்டாம்!. உன் உதவி ஆண்டவருக்கு அவசியம் இல்லை. அவருக்கு வேண்டியது நீ! நீதான் எனக்கு வேண்டும் என்கிறார்.
நீயும் அதைத்தானே அன்று மேடையேறி சாட்சி சொன்னாய்!. அவன் மாற்கு சுவிசேஷத்தில் 10 அதிகாரத்தில் இயேசுவிடம் நித்திய ஜீவன் பெறவந்த அந்த பணக்கார வாலிபனைப் போல் துக்கமுகமாய் திரும்பிபோய்விட்டான். அதன்பின் அவன் திரும்பவேயில்லை!.
நித்திய ஜீவன் நித்திய வாழ்வை ஆசைப்பட்ட அவன் இன்று எங்கோ போய்விட்டான்!.
------------------------------------------நன்றி ..“Jesus Imchristian“---------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..