நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

அன்புள்ள அப்பா

தன்னுடைய மகனை மிகவும் அதிகமாய் நேசித்தார் ஒரு தகப்பன். அவனோ ஒரு கீழ்ப்படியாத மகன். அவனுடைய ஒவ்வொரு செயல்களினாலும் தனது பாசமிகுந்த தகப்பனை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான். அந்த அப்பா மிகவும் வேதனை அடைந்தார். இருந்தாலும் அவன் மேல் வைத்த அதீத அன்பின் நிமித்தமாக தன்னுடைய மனதை கல்லாக்கிக் கொண்டு பொறுமையாய் அவனை மன்னித்து வந்தார்.அவருடைய அன்பையும் மன்னிக்கும் குணத்தையும் சாதகமாக பயன்படுத்திய அந்த மகன் இன்னும் அதிகமாய் கேடான காரியங்களை செய்தான்.


ஒரு நாள் வந்தது.... தன் மனதுக்கு பிடித்த வேலையை ஒன்றையும், தன் மனதைக் கவர்ந்த துனணயையும் அவன் தேடிக் கொண்டான்.

அந்த அன்பு நிறைந்த அப்பா அவனுக்காக தேடி தேடி தெரிவு செய்து வைத்திருந்ததும், அவனது எதிர் காலத்துக்கு பொருத்தமானதுமான வேலையை அவன் உதறிதள்ளினான். அது போலவே அந்த மகனின் உள்ளத்துக்கேற்ற வகையில் அவர் பேசி வைத்திருந்த துனணயையும் உதறினான். இதனால் அந்த தகப்பன் தன் மகனின் வாழ்க்கையில் தலையிடுவதை நிறுத்த வேண்டி ஏற்பட்டது.

இதுவரை அந்த தகப்பனின் கட்டுப்பாட்டிலும் பாசத்திலும் இருந்த மகன் அவற்றை விட்டு தன் துனணயுடனும், தொழிலுடனும் சொந்தக்காலில் நிற்கப்போவதாக கூறிக் கொண்டு புறப்பட்டான். அவனது சுதந்திரத்தில் தகப்பன் தலையிடவில்லை.

நாட்கள் கடந்தன அவன் தேர்ந்தெடுத்த தொழில் கைவிட்டது. மனதார விரும்பியவளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது. வாழவும் முடியவில்லை சாகவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை விழுங்கவும் முடியவில்லை.

அப்போதுதான் அப்பாவை நினைத்தது மனது. கதவு தட்டும் ஒசை கேட்டது வேண்டாவெறுப்பாய் கதவைத் திறந்தவன் கண்கள் அகல விரிந்தன. நீரில் நீந்த தெரியாமல் தத்தளித்தவனுக்கு மரக்கட்டை அகப்பட்டது போன்ற உணர்வு. அவனை அவனுடைய அப்பா தேடி வந்திருந்தார்.

மகனை கட்டித் தழுவினார். இடையில் ஒன்றுமே நடக்காதது போலவும், தன் மகன் தவறே செய்யவில்லை என்பது போலவும் அவனோடு பேசினார். தன் தவறை அப்பா மன்னித்துவிட தயாராக இருப்தை அவன் புரிந்து கொண்டான். அவரிடம் மன்னிப்பு கேட்டு பெற்றுக் கொண்டான்.

அந்த அப்பாவுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன.

1). இவன் என்னடைய சொல்லுக்கு கீழ்ப்படியாத படியால் தண்டனண அனுபவிக்கட்டும். இனி அவனை சேர்த்துக் கொள்ளமாட்டேன் என அவர் அவனை புறக்கணிக்கலாம்.

2).சரி ஏதோ தெரியாமல் செய்து விட்டான். மனம் திரும்பி வரும் போது ஏற்றுக் கொள்வேன் என அவர் இருக்கலாம்.

இவை இரண்டில் எதையாவது செய்ய அவருக்கு உரிமை இருந்தது. ஆனால் இவை இரண்டையும் அவர் செய்யவில்லை. அவனை புறக்கணிக்கவுமில்லை, அவன் வரட்டும் என இருந்துவிடவுமில்லை. அவரே அவனை தேடிப்போனார். அவனை மன்னிக்க தயாராக இருப்பதை அவனுக்கு உணர்த்தினார். அந்த மகன் மன்னிப்பை பெற்றுக் கொண்டான். நல்ல எதிர்காலத்தை அடைந்தான்.

நம்முடைய வாழ்வில் நடப்பது இதுதான். தேவன் நம்முடைய அப்பா. தம்முடைய அன்பின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வாழ வேண்டுமென விரும்புகிறார். அப்படி வாழ்வது நமக்குத்தான் நல்லது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமது தந்தையாய் இருக்கும் கடவுள் நமக்கென்று வைத்திருக்கும் நல்ல ஈவுகளையும், நன்மைகளையும், வாழ்க்கையையும் உதறி விட்டு நாம் விரும்பும் காரியங்களை தேடிக் கொண்டு மனம் போன போக்கிலே வாழ்கிறோம்.

நம்முடைய நாளாந்த வாழ்வில் கடவுளை நினைப்பதே இல்லை. நமது தேவைகளில் மட்டும்தான் கடவுளை கூப்பிடுகிறோம். மற்றப்படி அவரை துன்பப் படுத்தி வாழ்கிறோம். இதனால் காலப்போக்கில் நாம் தெரிவு செய்த வழியிலே போய் நமக்கு நாமே வேதனையை தேடிக்கொள்கிறோம்.

கடவுளும் நம்முடைய சுதந்திரத்தில் தலையிட கூடாதென ஒதுங்கி விடுகிறார். நமது வழ்வில் துன்பம் ஏற்பட நாமே காரணமாக இருந்து விட்டு, கடைசியில் இந்த கடவுளுக்கு கண்ணில்லை என்றும் அவரைத்தான் குற்றம் சாட்டுகிறோம்.

இந்த நிலைமையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் துன்பம் அனுபவிக்கும் இந்த வேளையில் அப்பா உங்களை தேடி வருகிறார். அவர்தான் இயேசு.

அவர் உங்களை கட்டி அணைக்க இடங்கொடுங்கள். உங்களை அவர் மன்னிக்க தயாராக இருப்பதை இந்தக் கட்டுரை மூலம் உங்களுக்கு உணர்த்துகிறார். அவர் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள விரும்புவதை அறிந்து கொள்ளுங்கள்.

இயேசு ஏற்கனவே சிலுவையில் உங்களுக்காக எல்லா ஆசீர்வாதத்தையும், எதிர்காலத்தையும் அவதரித்து வைத்திருக்கிறார். அந்த மகனைப் போல அவற்றை உதறி விடாதிருங்கள். 
  .
மத்தேயு 8:17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.


I பேதுரு 2:24  நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.


யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்  எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.

நீங்கள் அவரை நம்பினால் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உங்களுக்கு தருவார்.

Iயோவான்4:8  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.

Iயோவான்4:16 
தேவன்  நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்.  தேவன் அன்பாகவே  இருக்கிறார்
; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

அந்த அன்புள்ள தெய்வத்தை ஏற்றுக் கொண்டால் கீழே உள்ள ஜெபத்தை செய்யுங்கள்.
அன்புள்ள அப்பா இயேசுவே நான் ஒரு பாவி. உம்மை அதிகமாய் துக்கப்படுத்தியதற்காக என்னை மன்னியும். நீர் எனக்காக சிலுவையில் பட்டபாடுகளை நம்புகிறேன். என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும். ஆமென் .

--------------------------------------------------------By Robert Dinesh-----------------------------------------




Share this article :

கேள்வியும் பதிலும்