ஏத்தியர்(Hittites) என்னும் ஜாதியினரைக் குறித்து உலகுக்கு முதன்முதலில் தெரிவித்த சரித்திர ஆவணம் வேதாகமமே. உலகிலேயே அவர்களைக் குறித்த சரித்திர தகவல்களைத் தந்த முதல் எழுத்து மூல ஆவணம் வேதாகமமே.
சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரித்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எபேசு நகரம் (எபேசஸ்)
(எபேசு)
(Ephesus) என்பது துருக்கி நாட்டில் சின்ன ஆசியாவின் (Asia Minor) மேற்கு கடற்கரையில்
அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இன்றைய காலத்தில் "செல்சுக்"
(Selçuk) என்னும் பெயரில் இந்நகரம் அழைக்கப்படுகின்றது.
இது ஏறக்குறைய கி.மு.5 ஆம்
நூற்றாண்டில் ஒரு நகரமாக உருவெடுத்தது
என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில்
இது கிரேக்கப் பேரரசை சேர்ந்த ஒரு
நகரமாக இருந்தது. பின் இந்த நகரம்
உரோமைப் பேரரசின் ஒரு அங்கமாகியது. இரண்டு
பேரரசின் காலங்களிலும் இந்த நகரம் முக்கியமான
வணிக நகரமாக விளங்கியது. அதன்பின்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ்
இருந்து வந்துள்ளது.

கிறிஸ்மஸ் தாத்தா என்பவர் யார்? அவர் எப்படி உருவானார்?
சரி, கிறிஸ்மஸ் தாத்தா தயார்! அவருக்கு வாகனம், வாகனம் யினிதே விரைந்திட ரெய்ண்டீர் எனப்படும் நீண்ட கிளைகளையுடைய கொம்புகள் கொண்ட மான்கள் தயாரா?!. அவ்வளவுதான், கிறிஸ்துமஸ் தாத்தா கிளம்பி விடுவார்.

அழுகையின் சுவர்
கிமு-1012ம் ஆண்டளவில் சாலமோன் அரசன் மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஓர்னானின் களம் என்னுமிடத்தில் கர்த்தருக்கென்று தேவாலயத்தை கட்டினான்.
இத்தேவாலயம் கிமு-586 இல் நேபுகாத்நேச்சர் என்னும் பாபிலோனிய மன்னனால் இடித்துப் போடப்பட்டது.மீண்டும் இத்தேவாலயம் கிமு-536 இல் செருபாபேலின் தலைமையில் கட்டத்துவங்கப்பட்டு கிமு-519 இல் கட்டி முடிக்கப்பட்டது.
அவ் இரண்டாம் தேவாலயம் ஏரோது மன்னனால் கி.பி-19 அல்லது கி.பி-20ல் அழகு படுத்தப்பட துவக்கப்பட்டு 45 வருடங்களில் முற்றங்கள், சுற்றுக்கூடங்கள், அறைகள் முதலியன கட்டப்பட்டன. இயேசுக் கிறிஸ்துவின் காலத்திலிருந்த தேவாலயம் அதுதான்.
என்றாலும் இயேசுக் கிறிஸ்துவின் முன்னறிவிப்பின்படி (மத். 24.2) அந்த இரண்டாம் தேவாலயம் கி.பி-135ல் ரோமரால் இடிக்கப்பட்டது. ஆகிலும் சுற்றுச் சுவரில் (Retaining Wall) ஒரு சிறு பகுதி இடிக்கப்படாமல் தப்பியது.
இச்சுவர் யூதரால் ஒரு புனித சின்னமாக கருதப்பட்டு, யூதர்கள் அச்சுவர் அருகே போய் அழுது ஜெபம் செய்வர். தங்கள் ஜெபவிண்ணப்பங்களையும் தாள்களில் எழுதி அச்சுவரிலுள்ள சந்துகளில் சொருகி வைத்துவிடுவர்.
தங்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்டு இப்பொழுது ஆராதனை செய்யவும், பலி செலுத்த முடியாமலிருப்பதையும் நினைத்து ஜனங்கள் இந்த மதிலில் தங்கள் தலைகளை முட்டி அழுது ஜெபம் செய்கிற படியால் இம் மதிலுக்கு அழுகையின் மதில் (Wailing Wall) என்று பெயர் வந்தது.
1948 வருடம் இஸ்ரேல் சுதந்திரம் அடைந்தபொழுது இப்பகுதி யோர்தான் நாட்டிற்கு போய்விட்டது. ஆகையால் யூதர் இப்பகுதிக்கு போகாதபடி தடுக்கப்பட்டனர்.
மீண்டும் 1967 ஜீன் மாதம் 6 நாள் யுத்தத்தில் முழு எருசலேமும் யூதர் கைக்கு வந்தது. அது முதல் யூதர் அங்கு போய் சுதந்திரமாக ஜெபம் செய்கின்றனர்.
![]() |
அழுகையின சுவரும், பிற்காலத்தில் கட்கப்பட்ட மதில்களும்,வாசல்களும் |
மேலே இருக்கும் படத்தில் மனிதர்கள் நின்று ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் சுவர்தான் ஏரோது ராஜா கட்டிய ஆலயத்தில் இடிக்கப்படாமல் மீந்திருக்கும் வெளிப்புற சுவர் பகுதி.
முன்னால் தெரியும் மதிலும் அரைவட்டமாய் காணப்படும் வாசலும் பிற்காலத்தில் கட்டப்பட்டவை
ஜெபம் பண்ணுகிற ஆட்களின் தலைக்கு மேல் வளர்ந்து காணப்படுவது சுவரில் முளைத்து சுத்திகரிப்புக்கு உபயோகப்படுத்தும் ஈசோப்புச் செடி (1இராஜாக்கள் 4.33) (சங்கீதம் 51.7) (Source: Prophetic Roundup- july-sept. 88)
இந்த அழுகையின் மதில் ஏரோது மன்னன் புதுப்பித்து கட்டிய தேவாலயத்தின் மதில்கள் பலமாயிருப்பதற்கு கட்டப்பட்ட ஒட்டுச் சுவரின் (Retaining Wall) ஒரு பாகமாகும். இதில் சில கற்கள் 14மீட்டர் நீளம்(453/4அடி), 3மீட்டர் உயரம்(93/4அடி), 2மீட்டர் அகலமுள்ளவைகளும்(61/2அடி), 300டன் நிறையுள்ளவைகளாயும் இருக்கின்றன.
அக்காலத்தில் இவ்வளவு பெரிய கனமான பாறைகளை எப்படி கொண்டு வந்து கட்டினார்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்று தற்கால கட்டக்கலை நிபுணர்கள் கருதுகின்றனர்.
கீழே இக்கட்டுரை சம்பந்தமான படங்கள் சிலவற்றை தருகிறேன்.
தொகுப்பு Robert Dinesh
(source இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்) (Source: News from lsrael, June 1988)

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 03)
புனித வேதாகம ஆசிரியர்களின் குறிப்புகள்!

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 02)
இதன் முதல்பகுதியை வாசிக்க click here
1.
யூத
சமுதாய சரித்திர குறிப்புக்கள்
ரோம சாம்ராட்சிய சரித்திர குறிப்புக்கள்
மட்டுமல்ல, இயேசுக்கிறிஸ்து வாழ்ந்த யூத சமுதாயத்தினது சரித்திர குறிப்புக்களிலும்
இயேசுக் கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ளன. இவையும் இயேசுக் கிறிஸ்து ஒரு சரித்திர
நபர் என்பதை அறியத்தருகின்றன.

இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா? (பகுதி 01)
இயேசுக்கிறிஸ்து
உண்மையிலேயே உலக சரித்திரத்தில் வாழ்ந்த நபர் என்பதை தந்திரமாக மறைத்துவிட பலர் முயற்சித்தாலும்
அதை இலகுவில் மறைக்க முடியாது. ஏனெனில் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை சரித்திரமும்
புவியியல் சான்றுகளும் சாட்சியாக கூறி நிற்கின்றன. இன்றைய கால கட்டத்தின் தேவை கருதி
M.S. வசந்த குமார் ஐயா எழுதிய “இயேசு கிறிஸ்து ஒரு சரித்திர நபரா?” என்ற புத்தகத்தை
அவருடைய அனுமதியுடன் டைப் செய்து இங்கே பதிவு செய்கிறோம்.

இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;
உண்மை எது ? பொய் எது ? என்று அறியுங்கள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதி அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள் மறைத்திருக்க கூடும்மென்றும் சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவர்.
அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியா லும்; இக் குற்றச்சாட்டுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக
அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)