நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » கிறிஸ்தவம் என்றால் என்ன?

கிறிஸ்தவம் என்றால் என்ன?


பதில்:
1கொரி.15:1-4 சொல்கிறது, அன்றியும் சகோதரரே நான் உங்களுக்கு பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்கள் அதை கைக்கொண்டால் அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள் .மற்றபடி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்கும். நான் அடைந்ததும் உங்களுக்கு பிரதானமாய் ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,அடக்கம் பண்ணபட்டு, வேதவாக்கியங்களின் படி மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார்”. கிறிஸ்தவர்கள் வேதவசனங்கள்
தேவனால் அருளபட்டவை என்றும் அதில் எந்த பிழைகளும் இல்லை என்றும் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி ஆகிய மூன்று தன்மைகளில் தேவன் நம்மை வெளிபடுத்துகிறார் என்றும் விசுவாசிக்கின்றனர் (2தீமோ 3:16,7, 2பேது 1:20-21).

தேவன் மனிதன் தன்னோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்று அவனை படைத்தார். ஆனால் அவனுடைய பாவம் தேவனை விட்டு அவனை பிரித்தது (ரோ 5:12,3:23) என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகிறோம். தேவனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் முற்றிலும் மனிதனாகவும் முற்றிலும் தெய்வமாகவும் சுற்றி திரிந்தார், அநதபடியே சிலுவையிலும் மரித்தார் என்று கிறிஸ்தவம் போதிக்கிறது (பிலி 2:6-11) இயேசு கிறிஸ்து மரித்தபின் அடக்கம் பண்ணபட்டு, உயிர்த்தெழுந்து விசுவாசிகளுக்காய் பிதாவின் வலது பாரிசத்தில் இருந்துகொண்டு பரிந்து பேசுகிறார் (எபி 7:25) என்பதையும்,கிறிஸ்துவின் மரணம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் தேவனுடன் முறிக்கப்பட்டதான நம்முடைய உறவு மீண்டும் சரிபடவும் போதுமானது என்பதை விசுவாசிக்கிறோம் (எபி 9:11-14,10:10. ரோ. 6:23, 5:8).

நாம் இரட்சிக்கபட வேண்டும் என்றால் சிலுவையில் இயேசு முடித்ததான பணியின் மேல் நம் விசுவாசத்தை செலுத்த வேண்டும். இயேசு என்னுடைய பாவத்திற்காய் என்னுடைய இடத்தில் பலியானார் என்று விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்கிறவன் இரட்சிக்கப்படுவான். இதை காட்டிலும் அதிகமானதை யாரும் செய்ய அவசியிமல்லை. தம் சொந்த கிரியைகளில் தேவனை எவரும் பிரியபடுத்த முடியாது, ஏனென்றால்! நாம் அனைவரும் பாவிகள் (ஏசா 6-7,53:6) நாம் அதிகமானதொன்றும் செய்யவேண்டியது இல்லை! ஏனென்றால் கல்வாரிசிலுவையில் இயேசு கிறிஸ்து எல்லா பணியையும் செய்து முடித்தார் “முடிந்தது” (யோ 19:30).
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்