மாற்கு 16ம் அதிகாரம் 17ம், 18ம் வசனங்களில் இயேசு தன்னை
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என சில விடயங்களை சொல்கிறார் அதில்
18ம் வசனத்தில் சொல்லப்படும்
“சாவுக்கேதுவான யாதொன்றை குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது”
என்ற வார்த் தையை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொண்டு
“கிறிஸ்தவர்களே நீங்கள் இயேசுவை விசுவாசித்தால்
விஷத்தைக் குடியுங்கள் பார்கலாம்” என்று கூறுகிறார்கள்.
அதை ஒரு சாதாரன இஸ்லாமியன் கூறினால் பரவாயில்லை அனேகரால் மதிக்கப்படும்
இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுதான் வேடிக்கையாக உள்ளது.
நான் இஸ்லாம் மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவர்களின்
மனதை நோகடித்து கட்டுரை எழுதுவதில்லை.
ஆனால் இஸ்லாமியர்களின் கட்டுரைகளை வாசித்து வாசித்து
குழம்பிப்போய் விசுவாசத்தில் ஊசலாடும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும்படி
இக் கட்டுரையை எழுதுகிறேன்
முதலில் கிறிஸ்தவர்களே ஒரு காரியத்தை புரிந்து கொள்ளுங்கள். விசுவாசம் என்பது கிறிஸ்தவ
கட்டுரைகளையோ, இஸ்லாமிய கட்டுரைகளையோ படித்து
இயேசுவா, அல்லது அல்லாவா என தெரிவு செய்வதன்
மூலம் ஏற்படுவதில்லை.
சரி விடயத்துக்கு வருவோம். நான் தொடர்ந்து சொல்லப்போவதை முதலில் புரிந்து
கொண்டால்தான் விஷத்தை குடிப்பதைப் பற்றிய இஸ்லாமியாகளின் கூற்றை புரிந்து கொள்வீர்கள். முதலில் இயேசுவை பிசாசு சோதித்த
விடயத்தை கவனியுங்கள். லுக்கா– 04:09-11 வசனங்களில் பிசாசு இயேசுவை சோதிக்கும் வகையை பர்ப்போம்.
9. அப்பொழுது
அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து
உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10. ஏனெனில்,
உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக்
கட்டளையிடுவார் என்றும்,
11. உமது
பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில்
ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
பிசாசு சொன்ன வேத
வசனம் சரியானதே. அவன் அந்த வசனங்களை சங்கீதம்– 91:11-12 இலிருந்து எடுத்துச் சொன்னான். ஆனால் தவறு எங்கே
நடக்கிறதென்றால் அந்த வசனத்துக்கு பிசாசு தவறான அர்த்தம் கொடுப்பதில் தான்.
முதலாவதாக
– சங் – 91:11,12 இன்படி உன் வழிகலெல்லாம் காக்கும்படி தான்
தன் தூதர்களுக்கு கட்டளையிடுவார்.
மேலும்
உன் பாதம் கல்லில் இடறாதபடி தான் உன்னை அவர்கள்
தங்கள் கைகளில் ஏந்துவர்கள்.
அதாவது
“வழிகளில் எல்லாம்” என்பதை பார்த்தால் நம்முடைய
நாளாந்த நடபடிகள், நம்முடைய போக்குவரத்து,
நம்முடைய தொழில், நமது முடிவுகள், தீர்மானங்கள், தெரிவுகள், ஊழியங்கள்
இவற்றிலெல்லாம் நம்மை அவர் காக்கும்படி தூதர்களுக்கு கட்டளையிடுவார். என்பதே
அடுத்ததாக “ இடறாதபடி” என்பதை பார்த்தால் இடறுதல் என்றால் என்ன? இடறுதல் என்று
எதை நாம் கூறுவோம். நாம் நடந்து போகும் போது தவறுதலாக நமது கால் கல்லிலோ அல்லது
ஏதோவொன்றிலோ அடிபடுவது தான் இடறுதல். மாறாக நாமாக போய்
கல்லில் உதைப்பதை இடறுதல் என்று சொல்ல முடியுமா?
அதாவது
நம்மையறியாமல் நமது வாழ்வில் இடறாதபடி நம்மை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்திக் கொணடு
போவார்கள். நம்முடைய நாளாந்த வாழ்வில் நம்மையறியாமல் பிழையான தெரிவுகள், பிழையான முடிவுகள்,
பிழையான தீர்மானங்கள் ஆகியவற்றில் விழாதபடி நம்மை தேவனுடைய தூதர்கள் ஏந்துவார்கள்.
இடறி
விழும்போது தூதர்கள் தாங்குவார்கள் என்பதற்காக நாமாக மேலிருந்து குதிக்க முடியுமா?
நாமாக குதிப்பது இடறுவதற்கு சமமானதல்ல. நாமே கல்லென்று தெரிந்தும் கல்லுக்கு உதைப்பதைப்
போன்றது.
சாத்தான்
சொன்ன வேத வசனம் உண்மைதான். ஆனால் அவன் சொன்னதைக் கேட்டு இயேசு குதிக்கவில்லை.
இதைக்கோலதான்
இருக்கிறது இஸ்லாமிய அறிஞர்களின் வேடிக்கை. “சாவுக்கேதுவான
யாதொன்றை குடித்தாலும் அது விசுவாசிக்கிறவர்களை சேதப்படுத்தாது”
என்று இயேசு சொன்னது உண்மைதான்.
நமக்கு
சதி செய்ய நினைப்பவர்கள் விஷத்தை கொடுக்கும் போது அதை நாம் தெரியாமல் குடித்து விட்டாலும்
நமக்கு அது ஒன்றும் செய்யாது. “அப்படியானால் கிறிஸ்தவர்கள் விஷம் வைத்து கொல்லப் படுவதில்லையா?”
என கேட்பார்கள். அதற்கு சாதாரண விசுவாசம் போதாது. அதீத விசுவாசம் வேண்டும். எல்லா
கிறிஸ்தவர்களும் அதிகளவு விசுவாசிப்பதில்லை. ஆனால் பலர் அப்படி
விசுவாசிக்கிறார்கள்.
அதற்காக இஸ்லாமிய அறிஞர்களின் கதையை கேட்டு விஷத்தை குடிக்க
முடியுமா?
பிசாசின் கதையை கேட்டு இயேசு குதிக்க முயற்சித்தாலும், இஸ்லாமிய
அறிஞர்களின் கதையை கேட்டு நாம் விஷத்தை குடிக்க முயற்சித்தாலும் இரண்டுமே தற்கொலை
முயற்சியாகத்தான் கணக்கெடுக்கப்பட வேண்டும்.
இப்போது சொல்லுங்கள் இயேசுவை பிசாசு சோதித்ததற்கும்,
கிறிஸ்தவர்களை இவர்கள் சோதிப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே
ஒன்றுதான்.
இயேசு எப்படி அந்த சோதனையை ஜெயித்தார்? லூக்கா-04:12 பிசாசைப் பார்த்து “உன்
தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லி யிருக்கிறதே” என்றார்.
அதே போல நாமும் சொல்லுவோம் “உன் தேவனாகிய கர்த்தரைப்
பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லி யிருக்கிறதே” என..
இஸ்லாமிய அறிஞர்களைப் பார்த்தல்ல, அவர்களைக் கொண்டு நம்மை
சோதிக்கும் பிசாசைப் பார்த்து...
-----------------------------Wrote By Robert Dinesh-------------------------------
-----------------------------Wrote By Robert Dinesh-------------------------------
3 கருத்துகள்:
மேலே தரப்பட்டுள்ள தளத்தை வாசித்தேன் தயவுசெய்து ,ஒரு விடயம்பற்றி பேசமுன்னர் அதுபற்றி தீர ஆராயவேண்டும் ,நீங்கள் உங்கள் தளத்தில் சொல்லியிருக்கும் இஸ்லாமியருக்கு எனும் பதில்கள் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக இருக்கின்றது அதுமட்டுமல்ல கிறிஸ்தவத்தை தழுவிய இஸ்லாமியர் என்று கூறிக்கொண்டு யார் யாரோ மதம் மாறியதனை பிரசுரித்துள்ளீர்கள் அப்படியானால் நான் கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறியவர்கள் என்று மிகப்பெரிய பட்டியலே(மைக்கல்ஜெக்சன் தொடக்கம் மைக்டைசன் போன்ற பிரபலங்களின் பட்டியல்) தரவேண்டிவரும் ஆகவே இவற்றை கைவிட்டுவிட்டு விஞ்சான ரீதியாக அலசுங்கள் ஆராயுங்கள் குறைகூருங்கள் அது சிறப்பு. (IRF .net இந்த தளத்துக்கு சென்று பெரிய கிறிஸ்தவ அறிஞ்சர்களின் வாதத்தை பாருங்கள்)
நன்றி “காகம்“ நண்பரே. உமது கருத்தை நாகரீகமாக கூறியிருக்கிறீர். ஒரு மனிதன் மதம் மாறுவதல்ல முக்கியம். அவனுடைய வாழ்க்கை முறை மாற வேண்டும். மைக்கல் ஜக்சனாக இருக்கட்டும் யாராகவும் இருக்கட்டும். மதம் மாறிய பின்பாவது வாழ்க்கை மாறாவிட்டால் என்ன பிரயோஜனம்?
மைக்கல் ஜக்சனுடைய முன்னைய வாழ்க்கைக்கும் மதம்மாறிய பின்னரான வாழ்க்கைக்கும் இடையில் ஏதாவது வித்தியாசம் இருந்ததா?
அவன் சாகும் போதும் போதைப்பொருள் பாவித்திருந்தான்.
மைக்கல் ஜாக்சனை ஒரு அபூர்வ மனிதன் என்று சொல்லலாம். சிறு வயதுகளிலேயே தன்னுடைய அபாரமான நடனத் திறமையினாலும், அற்புதமான குரல் வளத்தினாலும் உலகத்தின் கவனத்தை தன் பக்கமாய் தக்க வைத்துக் கொண்டவன். அவனுடைய வாழ்க்கையில், அவன் வாழ்ந்த நாட்களில் அவனுக்கு இணையாக ஒருவரும் வரவில்லை என்பது உண்மை. பல கோடி மக்களை கவர்ந்து கொண்ட ஒரு கலைஞன்.
ஆனால் அவனுடைய வாழ்க்கையோ ஒரு போராட்டம் நிறைந்ததும், தோல்விகளை தழுவியதுமாய் இருந்தது. நடனங்களிலும், பாடல்களிலும் அவன் உலகத்தின் உயர்ந்த சிகரத்தின் ஏறி நின்றான் ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையிலோ அவன் அகல பாதாளத்திலே விழுந்து கிடந்தான். காரணம் என்ன? அவன் நற்பண்புகள் சார்ந்த ஒரு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆற்றல்களோடும், திறமைகளோடும் நற்பண்பு சார்ந்த ஒரு வாழ்க்கை முறை இணையாததினால் உண்மையான வெற்றியை அவன் காணவில்லை. தன்னுடைய இச்சைகளின் இழுவைக்கு இசைந்துபோன ஒரு வாழ்க்கையினால் அவனுடைய வாழ்க்கை குழப்பங்கள் நிறைந்ததாக இருந்தது. அது அவனுடைய மரணத்தையும் விரைவுபடுத்தியது.
நீங்கள் வாசித்த சாட்சிகளின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்தீர்களா?
இயேசு வாழ்க்கையை மாற்றுகிறவர்.
நீங்கள் பட்டியல் பேடுமுன் அவா்களுடைய வாழ்க்கை சரித்திரத்தை ஒரு தடவை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக விஞ்சான ரீதியாக அலசுங்கள் ஆராயுங்கள் குறைகூருங்கள் அது சிறப்பு.என்று கூறியுள்ளீர்கள்.
விஞ்ஞானம் கடவுளே இல்லை என்றல்லவா நண்பா கூறுகிறது?
அத்துடன் குர் ஆன் இல் விஞ்ஞானம் இருப்பதாக கூறுகின்றீர்கள். அதில் விஞ்ஞானம் இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அதில் கூறப்பட்டுள்ள விஞ்ஞானம் யாருக்காவது பயன் பட்டதா? அதில் உள்ளதோ இல்லையோ மனிதர்கள் ஆராய்ந்து கண்டு பிடித்த பின்புதான் விஞ்ஞானம் பயன் படுகிறது.
அப்படியிருக்க தேவையில்லாமல் அதில் பதியப்பட்டுள்ள விஞ்ஞானம் என்னத்திற்று?
கடவுளுடைய புத்தகத்தில் விஞ்ஞானம் தேவையில்லை. விஞ்ஞான புத்தகம் மனிதனை மாற்றாது்.
கடவுளுடைய புத்தகத்தில் மனிதனுடைய இரட்சிப்புக்கான வழி கூறப்பட்டிருக்க வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கைமுறை கூறப்பட்டிருக்க வேண்டும். அதில் விஞ்ஞானம் தேவையில்லை.
அடுத்து
(IRF .net இந்த தளத்துக்கு சென்று பெரிய கிறிஸ்தவ அறிஞ்சர்களின் வாதத்தை பாருங்கள்) என கூறுகிறீர்கள். அவர்களுடைய கதை எனக்கு தேவையில்லை.
என் இயேசுவை நான் என்வாழ்வில் அனுபவத்தில் அறிந்தவன்.
“விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள்” என அவர் சொன்னபடி அவருடைய நாமத்தை கொண்டு எத்தனையோ பிசாசுகளை துரத்தியிருக்கிறேன்.
அவருடைய நாமத்தினால் எத்தனையோ நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறேன்.
நானல்ல அவரே எனக்குள் இருந்து இதையெல்லாம் செய்கிறார்.
இப்படி அவரை அனுபவித்தவன் நான். அறிஞா்களின் கதையை கேட்பேனா?
உங்களுக்கும் ஏதாவது பிரச்சினை, கஷ்டம், வியாதிகள் வந்தால், மனிதர்களால் கைவிடப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் உங்களுடைய அந்த தேவைக்காக நீங்களும் நானும் அந்த தேவனிடம் இயேசுவின் நாமத்தில் கேட்போம்.
அப்போது பாருங்கள். நம் தேவன் எப்படிப்பட்டவரென்று..
ஆனால் ஒரு நிபந்தனை..
விளையாட்டாக அவரிடம் கேட்டால் அதை அவர் விரும்ப மாட்டார். உண்மையான உள்ளத்தோடு தாழ்மையாய் கேட்க வேண்டும்.
எல்லாவற்றையும் விட விசுவாசத்தோடு கேட்க வேண்டும். அவரை சோதிக்கும் நோக்கத்தோடு கேட்க கூடாது.
The Best answer as word of GOD...!!!
Praise The LORD
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..