நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » ஒரு குளத்தில் சில மீன்கள்

ஒரு குளத்தில் சில மீன்கள்


ஒரு குளத்தில் சில மீன்கள்  விளையாடிக் கொண்டிருந்தன. பாசி களில் புகுந்தும், கற்களிடையில்  மறைந்தும், சந்தோமாக விளையாடிக் கொண்டிருந்தன.

திடீரென ஓரிடத்தில் "ச்சலக்" என்ற சத்தத்துடன் ஒரு இரை வந்து விழுந்தது. ஆவலோடு  எல்லா மீன்களும் ஓடிச் சென்றன. அதில் முந்திச் சென்ற மீன் அந்த இரையைக் கவ்விக் கொண்டது. அந்த நொடியே அந்த மீன் வேகமாக மேலே சென்று மறைந்து விட்டது.


அம்மீனை காணவில்லை. கொஞ்சநேரம் அந்த தொலைந்த மீனை தேடிய மற்ற மீன்கள் மீண்டும் விளையடத் தொடங்கின.  

சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு "ச்சலக்" சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தன மீன்கள். அதே இடத்தில் மீண்டும் ஒரு இரை  விழுந்திருந்தது. எல்லா மீன்களும் ஓடிச்சென்றன. அதிலும   முந்திச் சென்ற மீன் அந்த இரையை கவ்விக் கொள்ளவே அம்மீனும் வேகமாக மேலே சென்று மறைந்து விட்டது.  

முன்னர் போலவே மிகுதியான மீன்கள் கொஞ்சநேரம் தொலைந்த மீனை தேடிவிட்டு மீண்டும் விளையாடத் தொடங்கின.

மூன்றாம்  தடவையும் "ச்சலக்"  சத்தத்துடன் இரை வந்து விழுந்தது.  மூன்றாவதாகவும் ஒரு மீன் அதைக் கவ்விக் கொண்டு மேலே சென்று மறைந்தது. 

இப்படியே நான்காவது , ஐந்தாவது மீன்களும் இரையை கவ்விக் கொண்டு மேலே சென்று மறைந்தன. 

 இப்போது அந்த மீன் கூட்டத்தில் மிகுதியாக இருந்த இரண்டு மீன்களையும் பயம் வந்து கவ்விக் கொண்டது. மற்ற மீன்களெல்லாம் மறைந்து போவதற்கு என்ன காரணம் என சிந்திக்கத் தொடங்கின. 

அப்போதுதான் “தூண்டில்” என்ற ஒன்றைக் குறித்து அவைகளுக்கு ஞாபகம் வந்தது. “இனிமேல் அவ்விடத்தில் வந்து விழும் இரையை தின்பதில்லை” என முடிவு செய்தன . 
   
மீண்டும் முன்னர் போலவே   "ச்சலக்" சத்தம் கேட்டது. மீன்கள் திரும்பிப் பார்த்தன. இனி அந்த இரையை உண்பதில்லை எனத் தீர்மானித்த மீன்கள் அருகில் சென்று அந்த இரையை உன்னிப்பாக பார்த்தன. தூண்டலும் இரையும் வெவ்வேறாக தெளிவாக தெரிவது போல இருந்தது.
“அந்த தூண்டலை பிடிக்காமல் இரையை மட்டும் பிடித்தது. பிய்த்து தின்றால் என்ன?...”
ஒரு மீன் மற்ற மீனை பார்த்து கேட்டுக் கொண்டே தூண்டிலில் வாய் படாமல் இரையை மெதுவாக கவ்வி இழுத்தது.
எதிர்பாராமல் திடீரென தூண்டில் அதன் வாயில் படவே வசமாக கொழுவிக் கொண்டது. சில நொடிகள் இழுத்து கட்டிக் கொள்ளப் பார்த்தும் முடியாமல் போகவே. அந்த மீனும் மேலே இழுபட்டுச் சென்று மறைந்தது. 

தனிமையாக குளத்தினுள் நின்ற மீன் தீர்க்கமாக முடிவு செய்தது. இனிமேல் அந்த இரையை தொடக்கூடாது என்று. னால் அந்த மீன் அவ்விடத்திலே நின்று இரை மீண்டும் விழுகிறதா என கவனித்தது . 

மீண்டும்  "ச்சலக்"  சத்தத்துடன் இரை வந்து விழுந்தது. மீன் அருகில் செல்லவில்லை. தனது கடைமையை அந்த மீன் உணர்ந்தது. 

அந்தப்பக்கமாக வரும் எல்லா மீன்களிடமும் முன்னால் தூண்டில் இருப்பதை கூறி எச்சரிக்கை செய்தது. தூண்டிலின் ஆபத்து தன்மையை எடுத்துக் கூறியது. தன்னோடிருந்த மீன்கள் இழுத்துக் கொள்ளப்பட்ட  வகையை மற்ற மீன்களுக்கும் கூறி அந்த மீன்களை எச்சரிக்கை செய்வதை ன் கடமையாகக்   கொண்டு வழ்ந்தது. 

சில  மீன்கள் எச்சரிப்ப   உணர்ந்து தப்பிக் கொன்டாலும்  பல மீன்கள் எச்சரிக்கை செய்த மீனை "பைத்தியம்" என்று கூறி தூண்டிலில் அகப்படத்தன் செய்தன. 

ஆபகூக்  : 01: 15  இல்  "  அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக் கொள்கிறான்" என்று வேதம் சொல்கிறது.

பிசாசு நம்மையெல்லாம் தன்  பக்கம்  இழுத்துக் கொள்வதற்கு நமக்கு தூண்டில் போடுகிறானாம். அந்த தூண்டிலில் குத்தப்பட்டுள்ள இரை என்ன தெரியுமா

ஒரு வேளை அது ஒரு நல்ல தொழிலாக இருக்கலாம், ஒரு வேளை  கைநிறைய வரக்கூடிய வருமானமாக இருக்கலாம் அல்லது  பொருளோ, உணவோ, உடையோ எதுவாகவும் இருக்கலாம். உங்கள் கண்ணை கவர கூடிய எதுவாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என நீங்கள் விரும்பும் ஒருவராக கூட இருக்கலாம்.

நானும் நீங்களும் இன்று தேவனால் எச்சரிக்கை செய்யப் படுகின்றோம்.

அந்த மீன்களுக்கு முன்பதாக அவை விரும்பக்கூடிய இரை வந்தது போல, நாம் விரும்பும் ஆசீா்வாதம் நமக்கு முன் காணப்படும் போது அது தேவனிடம் இருந்து வந்ததா? அல்லது அது சாத்தான் போடும் தூண்டலா? என நிதானித்து பார்க்க வேண்டும்.

உதாரணமாக – ஒரு நல்ல தொழிலை எடுத்து கொள்வோம் அது அதிக சம்பளத்தை உடையதாக இருக்கலாம்.

சம்பளத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன் அந்த வேலை என்னை தேவனை விட்டு பிரிக்குமா? என யோசிக்க வேண்டும் அந்த வேலையால் என்னை சாத்தான் தன் பக்கம் இழுத்து விடுவானா? என்று யோசிக்க வேண்டும்.

நீங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு செல்லாமலிருக்கவும், உங்களை பின் வாங்கச் செய்யவும் அந்த வேலை உங்களை தூண்டும் என உணா்ந்தால் எவ்வளவு சம்பளமாக இருந்தாலும் அதை உதறிவிட்டால் நீங்கள் தான் ஒரு உண்மையான விசுவாசி. விசுவாசியுங்கள், ஜெபியுங்கள் அதைவிட நல்லதொரு வேலையை தர நம் தேவனால் முடியாதா?

வாழ்க்கைதை் துணையை தேடும் போதும் அப்படித்தான். ஒருவேளை அது தேவன் தரும் ஆசீா்வாதமாகவும் இருக்கலாம். அல்லது சாத்தானின் தூண்டலாகவும் இருக்கலாம். அந்த ஜந்து மீன்களையும் போல ஓடிப் போய் கவ்விக் கொள்ளாமல் கடைசி இரண்டு மீன்களைப்போல உன்னிப்பாக கவனித்து ஆவியில் சோதித்துப் பார்த்து நலமானதாக இருந்தால் பிடித்துக் கொள்ளுங்கள்.

தூண்டல் இருப்பது தெரிந்தும் அந்த இரண்டு மீன்களில் ஒன்று செய்தது போல. நான் மாட்டிக் கொள்ளமாட்டேன், பக்குவமாக கையாளுவேன் என்றெல்லாம் நினைத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கடைசியாக தப்பிப்பிழைத்த மீனைப் போல, பலா் தூண்டலில் பிடிபடுவதை கண்ணால் பார்த்தவா்கள் செய்யும் எச்சரிக்கைகளுக்கு செவிகொடுங்கள். அது உங்கள் நண்பா்களாகவோ பெற்றாராகவோ யாராகவோ இருக்கலாம்.

அவா்களை “பைத்தியம்” என்று கூறி தூண்டலைக் கவ்விக் கொண்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

----------------------------------------------------- by Robert Dinesh --------------------------------------




Share this article :

கேள்வியும் பதிலும்