இஸ்ரேலின் எண்ணெய் இயற்கை வளத்தைப் பற்றி மோசேயின் தீர்க்கத்தரிசனம்.
அதில் ஆசேர் கோத்திரத்திற்கு அவர் கொடுத்துப் போன ஆசீர்வாதம் 3440 வருடங்களுக்குப் பின், நமது தலைமுறையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
இஸ்ரவேல் உலகிலேயே அதிக உல்லாசப் பயனிகள் வரும் சிறிய நாடு. 1987ம் வருட கணக்குப்படி இஸ்ரேலின் 32,000 அறைகள் கொண்ட 308 நவீன வசதிகள் கொண்ட தங்கும் வீடுதிகள் இருந்தன வென்றும் 15,00,000 உல்லாசப்பயனிகள் வந்து போயினர் என்றும் தெரிகிறது (News from lsraeil May 1988).
ஆகவே அங்கு மோட்டார் வாகன உபயோகம் அதிகம். இவைகளுக்கும், விவசாயத்திற்கு பயன்படும் டிரக்டர்களும், பலவித தொழிற்சாலைகளுக்குமாக அதிக பெற்றோலும் எண்ணெயும் தேவைப்படும்.
இந்நிலையில் இஸ்ரேல் தன் எல்லைக்குள் எண்ணெய் வளத்தை தேட ஆரம்பித்தது.
வேதாகமத்திலுள்ள பல கோத்திரப் பிதக்கள் தாங்கள் மரிக்கும் முன் தங்கள் சந்ததியாரை ஆசீர்வதித்துப் போனதாக அறிந்திருக்கிறோம்.
பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் தன் பிள்ளைகளான ஈசாக்குக்கும், இஸ்மவேலுக்கும் வெவ்வேறு ஆசீர்வாதங்கள் கொடுத்ததாய் பார்க்கிறோம்.
அதே போல் ஈசாக்கு தன் குமாரரான ஏசாவையும், யாக்கோபையும் ஆசீர்வதித்ததை பார்க்கிறோம்.
யாக்கோபு தன் 12 குமாரரையும் தனித்தனியாக ஆசீர்வதித்ததை நாங்கள் வேதாகமத்தில் வாசிக்கிறோம்.
அதைப் போல மோசே மரிக்கும் முன் தான் 40 வது வருஷம் நடத்திவந்த 12 கோத்திர மக்களுக்குமான ஆசீர்வாதங்களை கொடுத்துவிட்டு போனார்.

மோசேக்கு பின் வந்த தலைவரான யோசுவா சீட்டுப்போட்டு இஸ்ரவேல் மக்களின் 11 கோத்திரங்களுக்கு நாட்டை பகிர்ந்தார். அதில் ஜந்தாம் சீட்டு ஆசேர் கோத்திரத்திற்கு விழுந்தது.
அவர்களுக்கு கிடைத்த நாட்டு எல்லை யேசுவா 19;24-31 இல் காண்கிறோம். இது சுமார் 70 மைல் நீளமும் 15 மைல் அகலமும் உள்ள கடற்கரைப் பகுதி. கர்மேலுக்குத் தெற்கே சுமார் 10 மைல் தூரத்திலிருந்து தீருவுக்கு வடக்கே சுமார் 15 மைல் வரையிலான பூமி. இப்பகுதியை சுதந்திரமாக பெற்ற ஆசேர் கோத்திரத்திற்கு மோசே கொடுத்த ஆசீர்வாதம் இதோ-
(கி.மு.1451) உபாகமம் 33.24-25
“ஆசேர் புத்திர பாக்கியமுள்ளவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்”.
“இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும், உன் நாட்களுக்குத் தக்கதாய் உன் பெலனும் இருக்கும்”.
இவ் ஆசீர்வாத நிறைவேறுதல்


இஸ்ரேலில் பல இடங்ககளில் சோதனை செய்தும் கணிசமான எண்ணெய் கிடைக்கவில்லை. ஆகவே எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரபு நாடுகளை நம்பி ஜீவித்துக் கொண்டிருந்தது.
1967ல் தான் பிடித்த சீனாய் தீபகற்பத்தில் எண்ணெயெ் வளத் தேவைகளை பூர்த்தி செய்தது.
1973 நவம்பர் 28ம் தேதி அரபு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இஸ்ரேலுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதை தடைசெய்தன.
1979ல் எகிப்துடன் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தப்படி சீனாய் எண்ணெய் கிணறுகளை எகிப்துக்கு கொடுத்துவிட வேண்டியதாயிற்று.
என்றாலும் எகிப்து நியாயமான விலையில் சீனாயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை இஸ்ரேலுக்கு விற்க ஒப்புக் கொண்டது.
அப்பொழுது பரிசுத்த வேதாகமத்தில் ஏதாவது துப்புக் கிடைக்குமா என்று தேடியபொழுது மோசே ஆசேர் கோத்திரத்திற்கு கொடுத்த ஆசீர்வாதம் (உபா-33;24) கிடைத்தது.
அதன் பிரகாரம் தற்காலத்து ஹெய்பா நகரத்திற்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியில் சோதனை செய்து கிணறுகள் தோண்டியதில் இஸ்ரேல் நாட்டிற்கு வேண்டிய எண்ணெயில் ஜந்தில் ஒரு பாகம் இதுவரை அங்கிருந்து கிடைத்திருக்கிறது. இன்னும் அதிக எண்ணெய் எடுக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

சமீபத்தில் மத்தியதரைக் கடலின் இஸ்ரேலிய எல்லைக்குள் ஒரு பில்லியன் (10,00,00,00,00,000- அதாவது ஒரு லட்சம் கோடி) பீப்பாய் எண்ணெய் 17,000 அடி ஆழத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு கிணறுகள் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உபாகம் 33;24ம் வசனத்தில் “இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்” என்ற முன்னறிவிப்பு இன்னும் நிறைவேறவில்லை.
இன்னும் போகப் போக இம்முன்னறிவிப்பின் முழு நிறைவேறுதலும் தெரியவரும். இவ்விதமாக ஆசேர் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான் என்ற முன்னறிவிப்பு அப்பிரதேசத்தில் கால்களுக்குக் கீழ் பூமிக்கடியில் கிடைக்கும் எண்ணெயின் மூலம் 3440 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியிருக்கிறது.

ஆசேர் கோத்திரத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பிரதேசங்கள் சிலதில் மிகுதியான பாகம் தற்காலத்து லீபனோன் நாட்டில் அடங்கியிருக்கிறது.
சுமார் 15 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் காரணமாக தன் கனிவளங்களை ஆராய்ந்தறியும் நிலைமையில் லீபனோன் நாடு இல்லை.
வேத வாக்கியங்களின் படி அப்பகுதியும் இஸ்ரவேல் நாட்டோடு சேரும் காலம் வரும்பொழுது இம்முன்னறிவிப்பின் நிறைவேறுதலைப் பற்றித் தெளிவாய் தெரியும்.
'HI CHRISTIANS" இணையதளம் இனி வரும் நாட்களில் “நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்” எனும் தலைப்பில் கட்டுரைகளை பதிவு செய்ய இருக்கிறது. அதன் முதலாவது பகுதியாகவே இக்கட்டுரை பதிவிடப்படுகிறது.
(நன்றி இஸ்ரவேலின் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் நூல்)
6 கருத்துகள்:
Super... Our God is living...
Good News. God Bless Israel,
Praise the Lord. Our God is Awesome God.
Evidential god promising god
Nadaka pogiratha (ithu pola neraiya theerkatharisanam) mun kootiyae solli appadiyae indru varaiyilum nadathum orae DEIVAM.
the god words can't fail.................true true true;;;;;;;;;;;;;;;;''''''''''''''''''''''''''''''''''''''''''''''''';;;;;;;;;;;;
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..