நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04

எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04


பழைய ஏற்பாட்டில் பல தீர்க்கர்கள் எருசலேம் பட்ணம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றனர். 

ஆனால் அத்தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586ல் நேபுகாத் நேச்சார் எருசலேமை அழித்ததைக் குறிக்கும் என்று விவாதிக்க முயும். ஏனென்றால் அத் தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586 க்கு முன் உரைக்கப்பட்டவை.


ஆனால் கி.பி. 33ல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பவனியாக எருசலேமுக்குச் சமிபமாய் வந்த போது நகரத்தைப் பார்த்து அதற்காக கண்ணீர் விட்டழுது எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய முன்னறிவிப்பொன்றை செய்தார்.

முன்னுரைப்பு-
லுக்கா 19.42-44 (கி.பி.33)
42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.

43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,

44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.


நிறைவேறுதல் –
இத்தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 37 வருடங்களில் யூதர் ரோமருக்கு விரோதமாக கலகம் பண்ணினபடியால் ரோமர்கள்  பெரிய பட்டாளத்தைக் கொண்டு வந்து பட்டணத்தை முற்றுகையிட்டு ஜெயித்து அங்கிருந்த யூதரையெல்லாம் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் கொன்று பலரை பட்டணத்தை விட்டு விரட்டியடித்து பட்டணத்தையும் தீக்கிரையாக்கினர்.

இப்படியாக இயேசு கிறிஸ்துவின் முன்னுரைப்பு கி.பி.70ல் நிறைவேறியது 

இந்த பதிவிற்கு முன்னர் இஸ்ரவேல் நாட்டின் தோற்றம் பற்றி பார்த்தோம்.
அதை வாசிக்க இங்கே கிளிக் செய்க

அடுத்து எருசலேம் தேவாலயத்தின் அழிவு பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்