கேள்வி: ஓரினச்சேர்க்கையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது? ஓரினச் சேர்க்கை பாவமா?
பதில்: ஓரினச்சேர்க்கைச் செயல் பாவம் என்ற ஒரே கருத்தையே வேதாகமம் கூறிவருகிறது. (ஆதியாகமம் 19:1-13; லேவியராகமம் 18:22; ரோமர் 1:26-27; 1கொரிந்தியர் 6:9).
கர்த்தரை மறுதலிப்பதும் கர்த்தருக்குக் கீழ்படியாமலிருப்பதின் விளைவுதான் ஓரினச்சேர்க்கை என்று ரோமர் 1:26-27 குறிப்பிட்டு போதிக்கிறது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திலும் அவிசுவாசத்திலும் இருக்கும்பொழுது,
கர்த்தரைவிட்டு பிரிந்து வாழும் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமற்றதும் நம்பிக்கையற்றதுமாகிறது என்பதைக் காண்பிக்கும்பொருட்டு கர்த்தர் அவர்களை துன்மார்க்கமும் தகாததுமாதுமான பாவத்திற்கு “ஒப்புக் கொடுக்கிறார்”. ‘ஓரினச்சேர்க்கைப் பாவம் செய்தவர்கள் பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை’ என்று 1கொரிந்தியர் 6:9 அறிவிக்கிறது.

ஓரினச்சேர்க்கை இச்சையுடையவனாக கர்த்தர் ஒரு மனிதரைப் படைப்பதில்லை. மனிதர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக மாறுவதற்கு பாவமும் அவர்களது சொந்த விருப்பமும் தேர்வுமுமே இறுதியான காரணங்கள் என்று வேதாகமம் கூறுகிறது (ரோமர் 1:24-27).
சில மனிதர்கள் பிறக்கும்பொழுதே வன்முறையிலும் மற்ற பாவங்களிலும் நாட்டமுடையவர்களாக பிறப்பதுபோல் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுடையவராக பிறக்கலாம். இதை வைத்துக்கொண்டு ஒரு மனிதர் பாவ இச்சைகளுக்கு இடம் கொடுத்து பாவம் செய்ய விளைவதை அனுமதிக்க முடியாது. ஒரு மனிதர் பிறக்கும்பொழுதே மூர்க்கம்/கோபக் குணமுடையவராக இருந்தது பின்பு அவர் அந்த குணங்களுக்கு அடிமைபடுவது சரி என்றாக்கிவிடுமா? இல்லவே இல்லை. ஓரினச்சேர்க்கையும் அதுபோலத்தான்.
ஓரினச்சேர்க்கை பாவம் என்று வேதாகமம் கூறுகிறது. எல்லாப் பாவமும் தேவனுக்கு விரோதமானதுதான்.
ஓரினச்சேர்க்கை பாவம் என்று வேதாகமம் கூறுகிறது. எல்லாப் பாவமும் தேவனுக்கு விரோதமானதுதான்.
1 கொரிந்தியர் 6:9-10-ல் பட்டியலிடப்படும் தேவனுடைய ராஜ்யத்தை விட்டு மனிதனைப் பிரிக்கும் பல காரியங்களில் ஒன்றுதான் ஓரினச்சேர்க்கை. ஒரு விபச்சாரிக்கும், விக்கிரகாராதனைக்காரருக்கும், கொலைகாரருக்கும், திருடர் போன்றவர்க்கும் தேவனுடைய மன்னிப்பு உண்டு. அப்படியே ஓரினச்சேர்க்கையாளருக்கும் அவர்கள் அப்பாவத்தை விட்டு மனம் திரும்பும் போது மன்னிப்பு உண்டு என்று வேதாகமம் கூறுகிறது.
பாவத்தின்மேல் ஜெயத்திற்காக அளிக்கப்படும் பெலனை, இயேசுக்கிறிஸ்துவில் விசுவாசங்கொள்ளுகிறவர்கள் யாவருக்கும் (ஓரினச்சேர்க்கையாளர்களையும் சேர்த்து) தேவன் வாக்குத்தத்தம் பண்ணுகிறார் (1 கொரிந்தியர் 6:11; 2 கொரிந்தியர் 517; பிலிப்பியர் 4:13).
நன்றி Tamil Christian
இன்றைய கால கட்டத்தின் கத்தோலிக்க பாப்பாண்டவர் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சார்பாக, அவர்களை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனும் வகையில் பேசியுள்ளார். இதை வைத்துக் கொண்டு நாம் ஓரினச் சேர்க்கை எனும் விடயத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. போப்பின் வாக்கு என்றும் வேதவாக்காகி விட முடியாது. ஓரினச் சேர்க்கை செய்பவர்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் அவர்களின் அந்த பாவத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் பாப்பாண்டவரை கடவுளாக மதிப்பதில்லை. வேதத்தில் கூறப்பட்டுள்ளதே என்றும் உறுதியும் இறுதியுமான முடிவாகும். அதன்படி ஓரினச் சேர்க்கை என்பது பாவம் பாவம் பாவமே. அதை செய்யும் யாராயிருந்தாலும் மனந்திரும்பி மன்னிப்பை பெற வேண்டும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..