இஸ்லாமியர்கள் அடிக்கடி கிறிஸ்தவர்களை பார்த்து கேட்கும் கேள்விகளில் ஒன்றுதான் விருத்தசேதனத்தை பற்றியதாகும். அதாவது தேவன் பழைய ஏற்பாட்டில் விருத்த சேதனம் பண்ண வேண்டும் என்று கூறியிருக்க
கிறிஸ்தவர்கள் இன்று அதற்கு கீழ்ப்படிவதில்லை. பவுல் என்பவர் தேவனது விருத்த சேதன கட்டளையை நீக்கி விட்டார். இயேசுவே விருத்த சேதனம் செய்திருக்க கிறிஸ்தவர்கள் விருத்த சேதனம் செய்யாதிருக்க காரணம் என்ன? என்று கேட்கின்றனர். இப்படிப்பட்ட கேள்வி கேட்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றின் போது சகோதரன் காங்கேஸ்வரன் என்பவர் எழுதிய பதிலை இங்கே அனைவருக்கும் உதவியாக சமர்ப்பிக்கிறேன்.
kangeswaran kugathaj
இதற்கு பதில் சொல்ல முன்னர் விருத்தசேதனம் என்றால் என்ன என்பதை பற்றியதான விளக்கத்தை முதலில் சொல்ல வேண்டும்.விருத்தசேதனம் என்பது ஆண்குறியின் நுனியிலுள்ள உபரியான தோலை வெட்டியெடுப்பதாகும். விருத்தசேதனத்தின் எபிரேயச் சொல் "மூலா" (Mulah) என்பதாகும். தேவன் ஆபிரகாமும் அவன் சந்ததியார் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படும்படி கட்டளையிட்டார். இது தேவன் யூதமக்களோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாகும். யூத ஆண்கள் அனைவரும் பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.
ஆதியாகமம் 17:10 வசனம் இவ்வாறாகச் சொல்கிறது,
“எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்”.புதிய ஏற்பாட்டில் குழந்தை பிறந்த 8 ஆம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டு வந்ததாக அறியலாம். (லூக்கா: 1:59; 2:21) விருத்தசேதனமானது, ஒருவன் யூதன் என்பதற்கான வெளிப்பிரகாரமான அடையாளம்.
“எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்”.புதிய ஏற்பாட்டில் குழந்தை பிறந்த 8 ஆம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டு வந்ததாக அறியலாம். (லூக்கா: 1:59; 2:21) விருத்தசேதனமானது, ஒருவன் யூதன் என்பதற்கான வெளிப்பிரகாரமான அடையாளம்.
அதே நேரம் தேவன் விருத்தசேதனம் குறித்து இன்னுமொரு விதமாக சொல்கிறார். அதாவது விருத்தசேதனமானது இருதயத்திலும் பண்ணப்படவேண்டும் என்று.
லேவியராகமம் 26:41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டு போய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,உபாகமம் 10:16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்.உபாகமம் 30:6 உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி.எரேமியா 4:4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.
எரேமியா 9:25-26 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங் கூட விருத்தசேதனமுள்ள யாவரையும், 26. எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.இதை ஒத்ததாகவே பவுல் சொல்கிறார் இரட்சிப்பு பெறுவதற்கும் விருத்தசேதனத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.கலாத்தியர் 5:6- கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
உண்மையில், வெளியாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனம் இருப்பதாலேயே ஒருவன் உண்மையான யூதன் என்றாகி விடாது.
ரோமர்: 2:28,29- ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. 29. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
எனவே, புறஜாதிக்கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.
அப்போஸ்தலர்: 15:5-11
5.அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள்.
6. அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
7. மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.
8. இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்;
9. விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார்.
10. இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
11. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.
இஸ்ரவேலர்' என்று அழைக்கப்படுகிற யூதர்களுக்கு ஆபிரகாம் தகப்பனாயிருந்தான்.எனவே, தாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று யூதர்கள் மேன்மை பாராட்டினர். (யோவான்: 8:33,39). தேவன் ஆபிரகாமுக்கு விருத்தசேதனம் என்ற அடையாளத்தைக் கொடுத்தார். எனவே, விருத்தசேதனத்தினிமித்தம் தாங்கள் 'தேவனுடைய பிள்ளைகள்' ஆகிறோம் என்று யூதர் உறுதியாக நம்பினர்.
இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்படாமல் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்படுவதில் பிரயோஜனமில்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. (உபாகமம்: 10:12,16; கலாத்தியர்: 5:6).தேவனோடுகூட உடன்படிக்கை செய்திருக்கிறேன் என்பதற்கு அடையாளமாகவும், அதினிமித்தம், தான் "தேவனுக்கு சொந்தமானவன்" என்று அடையாளம் காட்டவும் ஒவ்வொரு யூதனுக்கும் அவசியமாயிற்று. (ஆதியாகமம்: 17:13). அதாவது, ஆபிகாமுடன் யூதமக்களுக்கு தொடர்பு உண்டாகும்படிக்கு விருத்தசேதனம் அவசியமாயிற்று.அப்படியானால், ஆபிரகாம் எதினால் நீதிமானாக்கப்பட்டான்? தேவனுக்கு சொந்தமானமானவன் என்று எதினால் அடையாளங் காணப்பட்டான்? விருத்தசேதனத்தினாலா? இல்லையே... விருத்தசேதனத்தினால் விசுவாசத்தைப் பெறவில்லை. விசுவாசத்தினால் அடைந்த நீதிக்குத்தான் அடையாளமாகவும், முத்திரையாகவும் விருத்தசேதனத்தைப் பெற்றுக் கொண்டான். விருத்தசேதனத்தை தேவன் ஆபிரகாமுக்கு கட்டளையிடும் முன்பே ஆபிரகாம் நீதிமானாகத் தீர்க்கப்பட்டான்.(ரோமர்: 4:11,12 ).
எனவே, "விருத்தசேதனமும் இல்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும் பொருட்டாக, அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்...நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும் அந்த அடையாளத்தைப் பெற்றான்..." (ரோமர்: 4:11,12 ) என்று வேதம் கூறுகிறது. அப்படியானால், யூதரல்லாதவரின் விசுவாசம் ஆபிரகாமின் விசுவாசம் ஆகும்.எனவே, ஆபிரகாமின் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் அடையாளமாயிராமல், விசுவாசமே முக்கியமாகக் கருதப்படுகிறது. (ரோமர்: 4:13). பவுல் உதாரணமாக தாவீதை குறிப்பிடுகிறார்: தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற மனிதனாக இருந்தான். அதிலும், அவன் முழுவதும் தேவனுடைய இரக்கத்தை கிருபையை சார்ந்து கொண்டான். தன்னுடைய கிரியைகளால் சம்பாதிக்க முடியாத தேவ நீதிக்காக அவன் தேவனிடம் வேண்டி நின்றான்.(ரோமர்: 4:6-8; சங்கீதம்:32).
தேவனுக்கு முன்பாக ஒருவன் நீதிமானாக வேண்டுமானால் அவன் விருத்தசேதனம் பண்ண வேண்டிய அவசியமில்லை. விருத்தசேதனம் பண்ணுவதற்கு முன் ஆபிரகாம் விசுவாசித்து நீதிமானாகத் தீர்க்கப்பட்டது போல, ஒருவன் கிறிஸ்து இயேசுவை விசுவாசித்தால் போதுமானது.ஆகவே இங்கே ஏசாயா 52:1 வசனத்தில் சொல்லப்படுகின்ற விருத்தசேதனமானது இருதயத்தில் செய்யப்படுகின்ற பரிசுத்தம் அல்லது நீதி என்னும் விருத்தசேதனமாகும். இருதயத்தில் நீதி மற்றும் பரிசுத்தமற்றவர்களும் அசுத்தமானவர்களும் பரிசுத்த நகரமாகிய எருசலேமிற்குள் வருவதில்லை.
ஆகவே இருதயத்தில் விருத்த சேதனம் பெற்றவர்கள் மாத்திரமே பரிசுத்த நகரமாகிய எருசலேமிற்குள் செல்லலாம். அதாவது கர்த்தர் விரும்பும்படியான கட்டளைக்குள் யார் பரிசுத்தமாய் இருக்கிறார்களோ அவர்களே தேவனுடைய இராஜ்யத்திற்குள் செல்லலாம்.
thank you kangeswaran kugathaj
2 கருத்துகள்:
shall i use this for my purpose
தாராளமாக.. தவறாக அல்ல... பயன்படுத்துங்கள் மேடம்... நன்றி
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..