நாகூம் தீா்க்கதரிசி
கிமு 713ம் வருட வாக்கில் நினிவே பட்டணத்தின் அழிவைப் பற்றிய ஒரு முன்னறிவிப்பைக் கூறுகிறார்.
ஆனால் அவருக்கு கிடைத்த காட்சி (தரிசனம்) 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில்
வந்த போக்குவரத்தைப் பற்றியதாகும். அவைகளை அவரால் விளங்கிக் கொள்ள முடியாதிருந்திருக்கும்.
எனவே 2700 ஆண்டுகளுக்கு முன்னிருந்த தன்னுடைய காலத்து மொழிநடையில் தன்னுடைய சிற்றறிவின்படி,
அக்கால மக்கள் விளங்கிக் கொள்ளும் படி வா்ணித்திருக்கிறார். அதுவே இவ்வசனமாகும்.
முன்னுரைப்பு
நாகூம்-02:04- (கிமு 713)
நாகூம்-02:04- (கிமு 713)
இரதங்கள் தெருக்களில்
கடகடவென்றோடி,
வீதிகளில்
இடசாரி
வலசாரி
வரும்;
அவைகள்
தீவட்டிகளைப்போல
விளங்கி,
மின்னல்களைப்போல
வேகமாய்ப்
பறக்கும்.
Aஇரதங்கள்
தெருக்களில்
கடகடவென்றோடி,
Bவீதிகளில் இடசாரி
வலசாரி
வரும்;
Cஅவைகள் தீவட்டிகளைப்போல
விளங்கி,
Dமின்னல்களைப்போல வேகமாய்ப்
பறக்கும்.
நிறைவேறுதல்
A ரோமருடைய
காலத்தில் (கிபி முதல் 3 நூற்றாண்டுகளில்) பெரிய பெரிய கற்களால் சாலையைப் பரவும் முறை
வந்தாலும், 19ம் நூற்றாண்டில் தான் மக்கடம் (MACADAM) என்ற ஆங்கிலேய மனிதா் உடைத்த
சிறு கற்களால் வீதியைக் கெட்டியாக பரவி போடும் முறையை கண்டு பிடித்தார். இப்படி ஜல்லி
போட்டு கெட்டியாக்கும் முறை macadamising என்று அவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இம்முறையானது
வாகனங்கள் வேகமாகச் செல்ல உதவுகிறது.
B வாகனங்கள்
வீதிகளில் வலது சாரி இடதுசாரியாக செல்லும் முறை சமீப காலத்தில்தான் தொடங்கியது.
C தற்காலத்தில் பிரகாசமான ஒளி வீசும் மின்சாரத்தினால்
இயங்கும் விளக்குகளுக்கு சமமாக அக்காலத்தில் தீவட்டி என்றுதான் கூற முடிந்திருக்கும்.
D மின்னல்களைப்போல வேகமாய்ப்
பறக்கும்.
அக்காலத்தில்
இரும்பினாலான சக்கரங்களைக் கொண்ட வண்டிகளை குதிரைகள் 20km வேகத்தில் இழுத்துக் கொண்டு
போயிருக்கும். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பெற்றோலில் இழுக்கும் சக்தி கொண்ட
அதிவேக வாகனங்கள் நடைமுறையில் வந்தன. இப்போதைய வாகனங்களின் வேகம் அக்காலத்தவா்களுக்கு
மின்னலைப் போன்ற வேகம்தான்.
ஆக இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து
முறையை 2700 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆண்டவர் நாகூம்அ தீர்க்கதரிசியின் மூலமாக முன்னறிவித்து
விட்டார்.
1 கருத்துகள்:
nice
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..