நமது தவறான பேச்சு முறைகள்
“யாகாவா ராயினும் நாகாக்க”
குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும் பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும். ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது நாவு.