f
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்


Dwight L. Moody
டி.எல்.மூடி அவர்கள் சிகாகோ நகரில் YMCA கட்டட நிதிக்காக பல பல பணக்காரர்களிடம் ஓடோடிச் சென்று கடும் உழைப்பினாலும் முயற்சியினாலும் மன பாரத்துடன் நிதி திரட்டிக் கொண்டிருந்தார்
Continue Reading | கருத்துகள்

குட்டையை குழப்பி விடும் நமது பேச்சு முறைகள் - நமது தவறான பேச்சு முறைகள்

நமது தவறான பேச்சு முறைகள்
யாகாவா ராயினும் நாகாக்க”

குடும்பங்களுக்குள்ளும் கூட்டங்களுக்குள்ளும்  பிரிவினைகள் ஏற்பட அதிக காரணமாயிருப்பது வாயின் வார்த்தைகள்தான். எவ்வளவோ சந்தோஷமாக இருந்த குடும்பம் கூட ஒரேயோரு வார்த்தையினால் பிரிந்து விடும். ஒரு பெரிய காட்டையே கொழுத்தி சாம்பலாக்கி விடும் சக்தியுள்ள தீப்பொறி போன்றது நாவு.
Continue Reading | கருத்துகள்

லீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.


லீபனோன் என்றால் வெண்மலை எனபது பொருள்பாலஸ்தீனத்தின் வடமேற்கிலுள்ள ஒரு மலை நாடாகும்எர்மோன் எனும் மலை இங்குதான் உள்ளதுஇதன் சிகரங்கள் பனியால் மூடப்பட்டிருப்பதினால் ‘வெள்ளை மலை’ என்ற  பேர் ஏற்பட்டது.
Continue Reading | கருத்துகள் (1)

போதிப்பவனாய் மட்டுமல்ல சாதிப்பவனாயும் இரு


''உனக்கில்லையம்மா உபதேசம் ஊருக்கு தானம்மா'' என்பதுதான் இன்றைய போதிப்பவர்கள் சிலரின் நிலை. 

எல்லாருமல்ல……. சிலர்

''இயேசுவுக்காய் நீ சாதிக்க வேண்டும்'' என்று போதிப்பவர்கள் சிலரின் வேலையே போதிப்பதும் தூங்குவதுமே சாதிப்பது கிடையாது.
Continue Reading | கருத்துகள்

காட்சிக் கிறிஸ்தவர்கள்


இன்று உலகில் காட்சிக் கிறிஸ்தவர்கள் அதிகரித்து விட்டனர்.

உள்ளத்திலே நாற்றம் வெளியே வாசனைச் சாயத்தை பூசிக் கொள்கின்றனர்.

உள்ளத்திலே கசப்பும் வெறுப்பும் பகையும், வெளியே brother என்றும் sister என்றும் கூறிக் கொள்கின்றனர்.
Continue Reading | கருத்துகள் (1)

நம்மால் என்ன பயன் ?

கடவுளைத் தேடுவதால் நமக்கு என்ன பயன் என்று கேட்கும் நாம் நம்மிடமும் ஒரு கேள்வியை நாமே கேட்டுப் பார்ப்போம்.

கடவுள் நமக்கு எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார். நம்மை நரக நெருப்பிலிருந்து மீட்கும் படி தன்னையே பலியாகக் கொடுத்தார்.
Continue Reading | கருத்துகள்

தற்கொலை செய்வது பாவமா?

 ஒரு கிறிஸ்தவன் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு என்ன நடக்கும்? 
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பினும், கிறிஸ்தவன் அல்லாதவனாயிருப்பினும், அவன் தன் ஜீவனை மாய்த்துக்கொள்வதோ, அல்லது மற்றொருவனுடைய ஜீவனை மாய்ப்பதோ கொலைபாதகமாகும். “மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்திய ஜீவன் நிலைத்திராது” (1யோவான் 3.15)
Continue Reading | கருத்துகள்

அன்பே என்னை மன்னிப்பாயா?

ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல் 

நதியின் சலசல இரைச்சல் அதற்கு பிள்ளைகளின் அழுகுரலாய் கேட்கிறது.

நிலாவின் வெண்மை முகத்தில் மனைவியின் பாசத்தைக் காண்கிறது அந்தக் குருவி.

எங்கிருந்தோ வரும் தாமரை வாசனை மனைவியின் அணைப்பில் உண்டாகும் சுகந்தம் போல இருந்தது அந்தக் குருவிக்கு.

தனிமையை உணர உணர “ஜில்” என்ற குளிருடன் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. நிலாவின் ஒளியும் நெருப்பாய் கொதிக்கிறது.

குஞ்சுகளையும் மனைவியையும் பிரிந்த மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் போல இருந்தது அந்தக் குருவிக்கு.

இத்தனைக்கும் மனைவியின் அந்த ஒரேயொரு வார்த்தையே காரணம்.
இத்தனை வருடம் அவளை அன்பாக கவனித்தவன் நான். அவள் கண்களில் கண்ணீர் கசியாமல் காத்தவன் நான்.

என்னை சந்தேகப்பட்டு அவள் அந்த வார்த்தையை சொல்லியிருக்கவே கூடாது. என் அன்பை புரிந்து கொள்ளாத அவளோடு இனிமேல் வாழ்ந்தென்ன பிரயோஜனம்.

என்றெல்லாம் நினைத்து வீட்டை விட்டு வந்து விட்டது அக்குருவி
தனிமையின் கொடுமை ஒரு புறம் “மனைவி என்னை எங்கெல்லாம் தேடுகிறாளோ” “குஞ்சுகள் என்ன பாடுபடுகின்றனவோ” என்ற எண்ணங்களின் கொலைவெறி மறுபுறம்.

இரண்டையும் முறித்துக் கொண்டு வருகின்றது “இல்லை இல்லை என்னில் தவறில்லை அவள்தான் குற்றம் செய்தாள்” என்ற சுயகௌரவம்.

எண்ணங்களின் புயல் ஓய மீண்டும் அமைதி நிலைக்கு வருகிறது குருவியின் மனம்.

எங்கோ ஒரு மூங்கில் காட்டில். மூங்கில்களில் வண்டுகள் போட்ட துளைகளினூடே செல்லும் தென்றல் காற்றால் உண்டாகும் இதமான ஓசையினூடாக காதில் பேசிய இறைவனின் குரலைக் கேட்டது அக்குருவி.

திடீரென ஏதோ ஒரு முடிவை எடுத்ததாய் பறவை சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியது. நேராக கூடு சென்றது.

கண்ணீர் மல்க பிள்ளைகளை அணைத்தபடி அழுது கொண்டிருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டது.

ஏதோ பேச வாய் திறக்கும் முன்னே மனைவியின் வாய் முந்திக் கொண்டது. அன்பே என்னை மன்னித்துக்கொள்

தொடர்ந்தது குருவி.

நான் உன்னை மன்னிக்கிறேன். என்னையும் நீ மன்னித்துக் கொள்
அணைப்பு வரவர இறுக்கமாகிக் கொண்டே போனது.

இப்போது இரண்டு குருவிகளின் கண்களிலும் உண்டான கண்ணீருக்கு மகிழ்ச்சிதான் காரணமாக இருந்தது.

இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே மூங்கில்களில் வண்டுகளிட்ட துளைகளினூடே செல்லும் காற்றால் உண்டாகும் இதமான ஓசையூடாக இறைவன் அக்குருவியின் காதில் என்ன பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.

உன் மனைவியை நீ ஏன் மன்னிக்ககூடது?

அன்பானவர்களே இயேசு உங்களைப் பார்த்து கேடகிறார். எனக்கு அநியாயம் செய்தவர்களை நான் மன்னித்தேனே. உனக்கு அநியாயம் செய்தவர்களை நீ ஏன் மன்னிக்க கூடது?

சிந்திப்பாயாக.       
-----------------------------------------------------by - robert dinesh-----------------------------------------------------    
Continue Reading | கருத்துகள்

பூமியின் வயது எவ்வளவு? AGE OF THE EARTH- ( வேதாகம அறிவியல் -07 )

 பூமி உண்டாகி 450 கோடி ஆண்டுகட்கு மேல் ஆயிற்று என்று சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதைக் குறித்த கருத்துக்களை பார்ப்போம்.

தேவன் ஆதாமைப் படைத்த போது குழந்தையாகப் படைக்கவில்லை. அறிவும் சரீர வளர்ச்சியும் கொண்ட மனிதனாகப் படைத்தார்.
Continue Reading | கருத்துகள் (2)

பிர் அவ்னின் ( பார்வோனின் ) உடலும் குர்-ஆன் உம்

அண்மைக் காலமாக குரான் ஒரு இறை வேதம் தான் என்பதை நிரூபிப்பதற்கு ஆதாரமாக இஸ்லாமியர்கள் ”பிர் அவ்ன்” என்னும் இரண்டாம் ராமஸேஸ் மன்னனின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ள உடல் ஒன்றை தங்கள் வேதத்தோடு ஒப்பிடுகின்றனர்.

எப்படியெனில் இஸ்ரவேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பார்வோன் மன்னனைக் குறித்து வேதாகமத்தில் யாத்திராகமம் புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

Continue Reading | கருத்துகள் (1)

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்


அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. - (எபிரெயர். 13:2).

ஜெர்மனியில் மிகவும் குளிரான இரவு. கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்ததினால், மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான இரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒருச் சிறுவன் பாடும் குரல் கேட்டது. அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது பாட்டுப்பாடி, அச்சிறுவன், பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான். அவன் பாடுவதைக் கேட்ட அத்தம்பதியினர்,
Continue Reading | கருத்துகள்

கால்களுடன் வாழ்ந்த பாம்புகள் ( வேதாகம அறிவியல் - 02 )


அன்பானவர்களே ஆதியில் பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன என்பதையும் கடவுளின் சாபத்தாலேயே பாம்புகள் கால்கள் இன்றி போயின என்பதையும் வேதாகமத்தில் இருந்து அறியலாம். 
வேதாகமத்தை விமர்சனம் செய்பவர்கள் இக்கூற்றை கிண்டலாக விமர்சனம் செய்வது வழமை. முக்கியமாக இஸ்லாமிய அறிஞரான pj அவர்கள் எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் இதைக்குறித்து எழுதி வேதாகமத்தை விமர்சித்துள்ளார். 
Continue Reading | கருத்துகள்

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்? ( வேதாகம அறிவியல் - 01 )

மனிதனை தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகின்றது.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம்-2:7

ஆனால் விஞ்ஞானமோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னம் பொய்யை கூறிவருகிறது.
Continue Reading | கருத்துகள்

இரத்த சாட்சிகளான கிரஹம் ஸ்டெயின் மற்றும் இரண்டு மகன்கள்

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு கிறஸ்தவ குடும்பம் மிஷனரிகளாக ஒரிசாவில் தங்கி ஊழியம் செய்து வந்தார்கள். அவர்கள் தங்களால் இயன்ற அளவு குஷ்டரோகிகளுக்கும், சமுதாயத்தில் துச்சமாக எண்ணப்பட்டவர்களுக்கும் நடுவில் இருந்து கிறிஸ்துவின அன்பை வெளிப்படுத்தி, அங்கு அவர்கள் மத்தியில் 34 வருடங்களாக ஊழியம் செய்து வநதனர். அவர்கள், கிரஹம் ஸ்டெயின் மற்றும் அவரது மனைவி கிளாடிஸ் ஸ்டெயின் ஆவர்
Continue Reading | கருத்துகள் (3)

சொல்லாதே...



இன்று தேவப் பிள்ளைகள் தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள். 

ஏன் என்னை தேவன் இப்படி படைத்தார்? உடலில் குறைபாடுகள், அழகில்லாத ரூபம், சொல்லிக் கொள்ளக் கூடிய திறமைகள் எதுவும் என்னிடம் இல்லையே

Continue Reading | கருத்துகள்

''twitter'' இல் நமது தளம்...

இன்று முதல் நமது “கிறிஸ்தவம்,கிறிஸ்தவன்”  தளமானது ''twitter'' இல் காலடி எடுத்து வைத்து தனது பதிவுகளை தொடர இருக்கிறது. எனவே ''twitter'' இல் (account) கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் இணைந்து கொள்ளவும். மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்...

https://twitter.com/KRISTHAVAN
Continue Reading | கருத்துகள்

200 + likes


நமது கிறிஸ்தவம்,கிறிஸ்தவன் தளத்திற்குரிய facebook பக்கமானது அறுபத்தொரு (61)  நாட்களில் 200 க்கு மேற்பட்ட விருப்ப வாக்குகளைப் பெற்றுள்ளது. (over 200 likes). அதற்காக முதலில் என் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும். அத்துடன் like செய்த அனைத்து நல் லுள்ளங்களுக்கும். பார்வையிட்டமற்றும் post, like, share செய்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

இந்த பக்கத்தில் 
Continue Reading | கருத்துகள் (2)

கேள்வியும் பதிலும்

விஞ்ஞானம்

நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.

add

google.com, pub-5997097430959388, DIRECT, f08c47fec0942fa0

forum

Flag Counter
சிலுவை dot கொம். Blogger இயக்குவது.