நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » இயேசு சிலுவை மரணத்தை விரும்பினாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)

இயேசு சிலுவை மரணத்தை விரும்பினாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)






ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்திலும், எனது பதில் நீல நிற எழுத்திலும் கொடுக்கப்படுகிறது.

உண்மையில் ஏசு சிலுவை மரணத்தை விரும்பினாரா????? இல்லை இது கட்டுக்கதையா??


· மரணத்தை விட்டும் தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைத்துக் கொள்ள இயேசுவின் கட்டளை

அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன், பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்” (லூக்கா: 22:36)
அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்” (லூக்கா: 22:36)
சிலுவை மரணம் பாவமீட்சிக்கான ஒரே வழி என்றிருப்பின் தன்னை கொலை செய்யத் தேடியவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாளை எடுத்து வாருங்கள் என்று இயேசு கூற வேண்டிய அவசியம் இல்லையே? சிலுவை மரணம் பாவமீட்சிக்கான வழியல்ல, அதனை அவர் விரும்பியிருக்கவும் இல்லை என்பதைத்தானே இதுவும் வெளிப்படுத்துகிறது?

பதில்- மரணத்தை விட்டு தன்னை தற்காத்துக் கொள்வதற்காக இயேசு பட்டயத்தை வைத்துக் கொள்ளச் சொன்னார் என்று எந்த பைபிளில் உள்ளது சகோதரரே? நீங்கள் மேலே பதிந்துள்ள இந்த வசனத்துக்கு முன் பின் இருக்கிற வசனங்களை நீங்கள் ஏன் பதிவிடாமல் மறைத்தீர்கள்? அந்த வசனங்களையும் பதிவு செய்தால் உங்கள் திருக்கு தனம் பிடிபட்டு விடும். ஏனெனில் தன்னை தற்காத்துக் கொள்ளஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள்என இயேசு கூறவில்லை,  என்பதே உண்மை. நீங்கள் கூறிய வசனத்தையும் அதன் முன் பின் உள்ள வசனங்களையும் பதிகிறேன் நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

லூக்கா: 22:36. அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.

37. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

38. அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.

37ம் வசனத்தை மறுபடியும் ஒருமுறை வாசித்து பாருங்கள்..“ அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார்என்று எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும் படியாகவே இயேசுபட்டயங்களை வாங்கிக் கொள்ளுங்கள்என்றார். அதாவது இயேசு அக்கிரமக்காரர் என மற்றவர்களால் எண்ணப்பட வேண்டும் என்பதற்காகவே.

அடுத்த வசனத்தில் இரண்டு பட்டயங்கள் போதும் என்று சொல்வதை கவனித்தீர்களா? தன்னை பிடிக்க வருபவர்களிடமிருந்து தப்புவதே நேக்கமெனில் இரண்டு பட்டயம் போதும் என்று கூறியிருக்க மாட்டாரே….

அது மட்டுமல்ல இயேசுவை பிடிக்க வந்தவர்களை சீஷர்கள் அந்த பட்டயத்தை பயன்படுத்தி வெட்ட முற்படும் போது இயேசு அவர்களை தடுத்தார் என்பதை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? இதை வாசித்து பாருங்கள்---

மத்தேயு 26:51-54
51. அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
52.அப்பொழுது இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.
53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான  தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?
54. அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
55. அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள் நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில்  உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தேன் அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே.
56. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள்  நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார்.
53ஆம் வசனத்தை மீண்டும் வாசியுங்கள் இயேசு நினைத்திருந்தால் பிடிபடாமல் தப்பியிருக்கலாம். ஆனால் அவர் வந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே அவரது விருப்பம்….வேதத்தை வாசித்து விளங்கிக் கொள்ளாமல் அவதூறு பேச வேண்டாம் சகோதரரே

· இயேசுவின் மனமுருகிய வேண்டுதல்!

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (மத்தேயு 26:38)

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார் அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” (லூக்கா 22:44)
மிகுந்த கவலைப் பட்டு இயேசு இறைவனிடம் வேண்டியதும் அவர் சிலுவை மரணத்தை விரும்பவில்லை என்பதையல்லவா காட்டுகிறது?! அதுவும் முகம் குப்புற விழுந்து என்றால் இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்து இறைவனிடம் வேண்டினார்! சிலுவை மரணம் தான் இரட்சிப்புக்கான வழி என்றால் அத்தகைய மரணம் என்னும் பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே?
--------
பதில்-
இந்த வசனங்கள் இயேசு சிலுவை மரணத்தை விரும்பவில்லை என்பதை காட்டவில்லை. மாறாக இயேசு சிலுவை மரணத்தை நினைத்து திகிலும், பயமும் அடைந்தார் என்பதை காட்டுகிறது. ஏனெனில் அவர் தமது தெய்வத் தன்மையை இறக்கி வைத்து, தன்னை வெறுமையாக்கி, பாடுகளும் பயமும், வேதனையும் உள்ள ஒரு சாதாரண மனிதனாகவே சிலுவைப்பாடுகளை பட்டார் என்பதே உண்மை.சிலுவைப் பாடுகளின் நேரத்தில் இயேசு தெய்வத் தன்மையோடு இருந்திருந்தால் அவருக்கு பாடுகளின் வேதனை தெரிந்திருக்காது
.
பிலிப்பியர்-2:6-7 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

·  அதுவும் முகம் குப்புற விழுந்து என்றால் இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்து இறைவனிடம் வேண்டினார்!
பதில்- என்னது? இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்தாரா? முட்டாள்தனமாக இல்லையா? இஸ்லாமிய வழக்கப்படி இயேசு செய்யவில்லை, இயேசுவின் வழக்கப்படிதான் இந்த விஷயத்தில் இஸ்லாமியர் செய்கிறார்கள். இதை இஸ்லாமிலிருந்து இயேசு கொப்பி பண்ணவில்லை இயேசுவிடமிருந்தே இஸ்லாமியர் கொப்பி பண்ணியுள்ளார்கள். குரானும் ஹதீதுகளும் காலத்தால் பிந்தியவை என்பதை மறந்து விட்டீர்கள் போலும்

·  உண்மையில் ஏசு மரணித்துவிட்டார், அதுவும் நம் பாவங்களை இரட்சிக்க மரணித்தார் என்றெல்லாம் காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
சிலுவையைப்பற்றிய உபதேசம் உங்களுக்கு காமடியாக தெரிகிறது அல்லவா? சகோதரரே இந்த வேத வார்த்தையை வாசியுங்கள்
 
1கொரிந்தியர்-1:18 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

நீங்கள் கெட்டுப் போகாமல் மனம் திரும்ப வேண்டும் என்பதே கிறிஸ்தவர்களான எமது விருப்பம்..


-------------------------------------------by- Robert Dinesh-------------------------------------------
Share this article :

1 கருத்துகள்:

Unknown சொன்னது…



Super brother , 200% true , they are copied Jesus , but say we are copying them , thank you . அதுவும் முகம் குப்புற விழுந்து என்றால் இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்து இறைவனிடம் வேண்டினார்!
பதில்- என்னது? இஸ்லாமிய வழக்குப்படி சிரம் பணிந்து ஸஜ்தா செய்தாரா? முட்டாள்தனமாக இல்லையா? இஸ்லாமிய வழக்கப்படி இயேசு செய்யவில்லை, இயேசுவின் வழக்கப்படிதான் இந்த விஷயத்தில் இஸ்லாமியர் செய்கிறார்கள். இதை இஸ்லாமிலிருந்து இயேசு கொப்பி பண்ணவில்லை இயேசுவிடமிருந்தே இஸ்லாமியர் கொப்பி பண்ணியுள்ளார்கள். குரானும் ஹதீதுகளும் காலத்தால் பிந்தியவை என்பதை மறந்து விட்டீர்கள் போலும்…

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்