நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » கடவுள் மனஸ்தாபப்பட்டு மனம் மாறுவாரா? இது கடவுளின் தகுதியா?

கடவுள் மனஸ்தாபப்பட்டு மனம் மாறுவாரா? இது கடவுளின் தகுதியா?



இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. ஆதியாகமம் 1:31 அனைத்தையும் நன்றாகப் படைத்த தேவன் பின் இவைகளை ஏன் தான் படைத்தோமென்று இருதயத்தில் வலி ஏற்படும் அளவு வருந்தினாராம்.(?) அவைகள் அனைத்தையும் அழிக்க வேண்டுமென்ற அளவு வேதனைப்பட்டாராம்.

(தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. “அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். ஆதியாகமம் 6:6,7 )

எனது பதில் –
நண்பா இதயத்தில் வலி ஏற்படுமளவுக்கு கடவுள் வருந்தினார் என்று வேதாகமத்தில் எங்கேயும் இல்லை. மனஸ்தாபப்பட்டார் என்றே உள்ளது. வேதாகமத்தை திரிக்க வேண்டாம். இஸ்லாமிய நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் எழுதும் போது நான் காணும் விடயம் – எப்போதும் இஸ்லாமியர்கள் கேள்விகளை வேதாகமத்துக்கு எதிராக கேட்கும் போது வேதாகமத்தில் உள்ள வசனங்களை திரித்து, மேலதிக விளக்கம் கொடுத்து, அல்லது தவறாக வியாக்கியானம் கொடுத்தே கேள்விகளை கேட்பார்கள். வாசிப்பவர்களுக்கு அவர்கள் கேட்பது சரி என்பது போலவே தெரியும். நான் பதில் எழுதிய எல்லாக் கேள்விகளையும் வாசித்து பாருங்கள் அவர்களின் இந்த தந்திரம் புரியும்.

இவ்விடத்தில் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்பது உண்மையே. மனஸ்தாபப் படுவதில் என்ன தவறைக் கண்டார்கள் இந்த முஸ்லிம்கள்?

“தாம் மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார்” என்பதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால். “ஏன்தான் இதை படைத்தோம்” என்று அவர் மனம் வருந்தவில்லை. தான் நல்ல நோக்கத்துடன் உண்டாக்கிய எல்லாமே சீர்கெட்டு போய்விட்டதால் எல்லாவற்றையும் அழிக்க வேண்டியுள்ளதே என்றே மனம்வருந்தினார். அவற்றை அழிக்கவேண்டியுள்ளதால்தான் அவற்றை உண்டாக்கியதை நினைத்து மனஸ்தாபப்பட்டார்.

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அனைத்தையும் நல்ல விதத்தில் படைத்தவர், எதற்காக அவைகளை அழிக்க முடிவெடுத்தார்?

எனது பதில் –
தேவன் எல்லாவற்றையும் நல்லதாக படைத்தார். ஆனால் அது சீர்கெட்டுப் போனது. அதனால் அவைகளை அழிக்க முடிவெடுத்தார். நண்பா உன்னைப் பார்த்து ஒன்று கேட்கிறேன். பாவம் செய்தவர்களை உங்கள் அல்லாஹ் அழிப்பதில்லையா? ஏன் அவன் அழிக்கிறான்? உங்களை அவன் நல்லவர்களாகத்தானே படைத்தான். நல்லவர்களாக படைக்கப்பட்ட நீங்கள் தீயவர்களாகும் போது உங்களை அழிக்க முடிவெடுப்பதில் என்ன தவறு? முதலில் குரானை பார்த்து கேள்விகளை கேளும்.

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
வருந்துபவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

எனது பதில் –
 “வருந்துபவர் இறைவனாக இருக்க முடியாது” என்று கூறுவதற்கு அவர் படைத்த மனிதனாகிய உமக்கு என்ன அருகதை இருக்கிறது?

சரி நான் கேட்கிறேன் உங்கள் அல்லாஹ் சூழ்ச்சிக்காரனாமே. நீர் கேட்பது போல நான் கேட்பதென்றால் “ஒரு சூழ்ச்சிக்காரன் எப்படி இறைவனாக முடியும்?” என்று கேட்பேன்.

وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ ﴿8:30﴾
8:30. (
நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்

நீங்களே சொல்லுங்கள் தந்திரம் செய்பவன் யார்? நேருக்கு நேர் நின்று போராட முடியாதவன்தான் சூழ்ச்சிகள் செய்வான். நீர் கேட்பது போலவே கேட்கிறேன் தன்னால் படைக்கப்பட்ட மனிதனுக்கு எதிராக அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறார் என்றால் என்ன அர்த்தம்? மனிதனுக்கு எதிர்த்து நிற்க முடியாதவன் தெய்வமா?

இறைவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என வரம்பு போட உம்மால் முடியுமா? எம்முடைய இறைவன் பாவியின் அழிவை பார்த்து மனஸ்தாபப்படுகிறவர், துக்கப்படுகிறவர், வேதனைப்படுகிறவர்.

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அதுவும் இருதயம் வலிக்கும் அளவு வருந்தினார் என்பது இறைவனை இழிவுப்படுத்தும் செயல் அல்லவா?

எனது பதில் –
“அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” என்பதைத்தான் “இருதயம் வலிக்கும் அளவு வருந்தினார்” என்று கூறுகிறீரோ?  விசனம் என்பது வலி அல்ல. கோபத்தோடு சம்பந்தப்பட்ட விடயம். முதலில் தமிழ் மொழி படியுங்கள்…

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
இவ்விஷயதிலும் ஒரு முரண்பாடு உண்டு, மேற்கண்ட வசனம் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்று கூறுகிறது, ஆனால் பின்வரும் வசனமோ தேவன் மனஸ்தாபப்படுவது கிடையாது என்கின்றது,

கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன், நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை, உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 24:14

எனது பதில் –
உமது தவறான புரிந்து கொள்ளுதல்தான் இங்கும் முரண்பாட்டை கொண்டு வருகிறது நண்பா. இங்கு குறிப்பிட்ட ஒரு விடயத்தில்தான் “நான் மனஸ்தாபப்பட மாட்டேன்” என்கிறார்.

அதாவது ஒரு மனிதன் பாவம் செய்யும் போது தேவன் “உன்னை தண்டிப்பேன்”  என்று கூறுவார். அப்போது அந்த மனிதன் மனம்திரும்பி உண்மையாய் மன்னிப்பு கேட்கும் போது தான் தண்டிப்பதாக சொன்னதற்காக மனஸ்தாபப்பட்டு அவனை அவர் மன்னித்து விடுவார். இது அவரது அன்பின் மிகுதியை காட்டுகிறது. இதைத்தான் இஸ்ரவேலருக்கும் தேவன் செய்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சொல்ல சொல்ல அவர்கள் மனந்திரும்பாது போனபடியினால் தேவன் தீர்க்கதரிசி மூலமாக தண்டணையை முன்னறிவிக்கிறார். வழமை போல “நமது தேவன் நமக்கு இரங்குவார்” என்று இஸ்ரவேலர்கள் நினைத்துவிடக் கூடாது என்றே இந்த விடயத்தில் தண்டணையை முன்னறிவித்து விட்டு இதில் நான் மனம் மாற மாட்டேன் என்றும் கூறி விடுகிறார். சொன்னபடி அவர்களை தண்டித்தார். இந்த வசனத்தை உமது கருத்துக்கு ஆதாரமாக எடுத்து பேச முடியாது.

நமது தேவன் நமக்கு கொடுக்க வேண்டிய தண்டணைக்காக மனஸ்தாபப்படுகிறவர். நம்மேல் வைத்த இரக்கம் தான் அதற்கு காரணம். அதனால்தான் நமக்காக அவர் தமது சொந்த குமாரனை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். அவரது அன்பை தவறாக பயன்படுத்த நினைத்தால் தண்டணைக்கு தப்பிக்கொள்ள முடியாது. ஏனெனில் அவர் அன்புடையவர் மட்டுமல்ல நீதியுமுடையவர்.

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
இறைவனையே இழிவுப்படுத்தும் உளறல்கள் , பிழைகள் , முரண்பாடுகளின் தொகுப்பான பைபிளை இறைவேதமாக நம்பும் கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்
எனது பதில் –
இறைவனை இழிவுப்படுத்தும் உளறல்கள் எதுவுமே பைபிளில் இல்லை. குரானை விட பைபிள் இறைவனை மேன்மையாகவே வெளிப்படுத்துகிறது.

குரான்தான் இறைவனை “அவன், இவன்” என்று கூறுகிறது.
குரான்தான் இறைவனை “சதிகாரன் என்கிறது”
குரான்தான் இறைவனை தந்திரி (சூழ்ச்சிக்காரன்) என்கிறது.
குரான்தான் இறைவனை, முகமது செய்த எல்லா பாவங்களுக்கும் வக்காலத்து வாங்குபவராக காட்டுகிறது.
தேவன் அன்புள்ளவர் என்கிற உண்மையை வேதாகமமே மிக தெளிவாக காட்டுகிறது.
மற்றும் வேதாகமத்தில் எந்த பிழைகளுமே இல்லை. வேதத்தை தவறாக விளங்கி கொள்வதால்தான் உங்களுக்கு பிழை இருப்பதாக தோன்றுகிறது. நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும்.

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
படைப்புகள் பற்றி போதிய அறிவில்லாத பைபிள் கர்த்தர் தான் பூரண அறிவுள்ள இறைவனா ?

எனது பதில் –
கர்த்தர் படைப்புகளைப்பற்றிய போதிய அறிவில்லாதவரல்ல. அப்படி வேதாகமம் காட்டுகிறது என்று வேதாகமத்தை ஆராய்ந்து படிக்கும் எந்த கிறிஸ்தவனுமே கூறுவதில்லை. மாறாக அரைகுறையாக படித்த உங்களைப் போன்றவர்கள்தான் கூறுகிறார்கள். “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல குறை கண்டு பிடிக்கும் நோக்குடன் படிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு குறையாகவே தெரிகிறது. அது உங்களுடைய தவறு.  

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
அன்றியும் தவறு செய்து அதை பற்றி வருந்துவது !?! தவறு செய்வது இது தான் இறைவனின் தன்மையா?

எனது பதில் –
தேவன் தவறு செய்பவரல்லவே. மனிதன் செய்த தவறுக்காக அவனை அழிக்க வேண்டி இருந்தது. அதற்காகவே வருந்தினார்.

இஸ்லாமிய நண்பரின் கேள்வி –
ஒரு வசனம் கூறும் கருத்தை விரைவில் அடுத்த வசனத்தில் முழுக்க முரண்பட்டு கூறுவது தான் இறைவனின் வார்த்தைகளா? இது மனிதர்களின் பலவீனம் அல்லவா?

எனது பதில் –
நீங்கள் முரண்பாடு என்று கூறுவதெல்லாம் தவறான புரிந்து கொள்ளுதலே அன்றி வேறில்லை. மேலே நீங்கள் முரண்பாடென நினைத்தது முரண்பாடில்லை என்று தெரிந்து கொண்டீர்களா? இதைப்போலலே இருக்கிறது உங்கள் புரிந்து கொள்ளுதல்கள்.

வேதமே சத்தியம் அதில்தான் மனிதனின் நித்திய ஜீவனுக்கான வழி குறிப்பிடப்பட்டுள்ளது. குறைகாணும் நோக்குடன் படிக்காமல் சத்தியத்தை அறியும் நோக்குடன் படியுங்கள். கர்த்தர் உதவி செய்வார்.


-----------by - Robert Dinesh-------------

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்