வேதாகமத்தில் காணப்படும் பக்தர்களுள் தாவீது, ஆபகூக், மற்றும் பவுல் அகிய மூன்று பேர் தங்கள் துன்ப வேளையைக் குறித்து எழுதிய பாடல்களை கவனித்து அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய 3 விடயங்களை காண்போம்.
துன்பங்கள் அவர்களை சூழ்ந்த போது காணப்பட்ட தங்கள் மன நிலையையும், தங்களுடைய துன்ப வேளையைக் குறித்து அவர்கள் மனதில் எழுந்த கேள்விகளையும், முடிவில் தாங்கள் தேவனுக்குள்ளாக எடுத்த தீர்மானத்தையும் அந்த பாடல்களில் எழுதி வைத்துள்ளார்கள். தங்கள் துன்பங்களின் வேளையிலும் அவர்கள் எடுத்துக் கொண்ட தீர்மானமே இங்கு நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விடயமாகும்.
தாவீதின் பாடல்
சங்கீதம் 13:1-6
1.கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2.என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக் கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?
3.என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவி கொடுத்தருளும், நான் மரண நித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
4.அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாத படிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.
பாடலின் முடிவு
6.கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
துன்ப வேளையில் தாவீதின் தீர்மானம்
நாம் கூட வாழ்வில் எத்தனையோ துன்பங்களை சந்திக்கின்றோம். அந்த துன்பங்கள் நம்முடைய விசுவாசத்தை சிலவேளை அசைத்து விடுகின்றது.
ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போல “தேவன் நம்மை தப்புவித்தாலும் தப்புவிக்கா விட்டாலும் அவரையே நம்புகிறவர்களாயிருப்போம்” என்னும் உறுதியுடையவர்களாயிருந்தால் அவர் நம்மை தம்முடைய மனதுக்கு ஏற்றவர்களாக பார்ப்பார். தாவீதை தன்னுடைய மனதுக்கு ஏற்றவனாக கர்த்தர் கண்டாரே. எவ்வேளையும் அவரை நம்புவோம். ஏனெனில் விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருக்க முடியாது.
எபிரெயர் 11:6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
ஆபகூக்கின் பாடல்
2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாம லிருக்கிறீரே!
3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப் பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது. வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.
4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லா மற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்கிறான். ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
பாடலின் முடிவு
ஆபகூக் 3:17-19
17.அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப் போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
18.நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
19.ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன். அவர் என் கால்களை மான் கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
துன்ப வேளையில் ஆபகூக்கின் தீர்மானம்
ஆபகூக் தன்னுடைய துன்ப வேளையில் எடுத்த தீர்மானம் யாதெனில் “என்ன நடந்நாலும் தேவனுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதை விடமாட்டேன்”எல்லா இடங்களிலும் கொள்ளை, கொடுமை, அநியாயம் நடக்கிறது. வழ்வில் தரித்திரம் வாட்டுகிறது, இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இப்படி என்ன என் வாழ்வில் நடந்தாலும் நான் என் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்பதே துன்பத்தின் மத்தியில் ஆபகூக் எடுத்த சிறந்த தீர்மானமாகும்.
‘எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்’(2கொரி7:4.) என்று பவுல் சொல்லுவது நமக்கு முன்மாதிரியாக உள்ளதன்றோ..
பவுலின் பாடல்
35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும்,
36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?
37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர் களாயிருக்கிறோமே.
38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமை களானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,
பாடலின் முடிவு
ரோமர் 8:39
39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.
துன்ப வேளையில் பவுலின் தீர்மானம்
என்ன நடந்நாலும் தேவனை நேசிப்பதை விடமாட்டேன்’என்பதே பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய துன்ப வேளையில் எடுத்துக் கொண்ட தீர;மானமாகும். தேவனுடைய ஊழியத்தின் பாதையில் அவருக்கு நேர;ந்த துன்பங்கள் ஏராளம். அவற்றின் மத்தியில் அவர் பாடலின் முடிவாக கூறும் அவருடைய கருத்து என்னவெனில் துன்பங்கள் எதுவும் தேவன் மேலுள்ள என்னுடைய அன்பை குறைக்க மாட்டாது என்பதேயாகும்.எனவே தேவனுக்கு பிரியமான சகோதர சகோதரிகளே மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் வருவது வழமையே. அதிலும் கிறிஸ்தவனுடைய வாழ்வைக் குறித்து சொல்லவே வேண்டாம். உலகில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று இயேசுவே சொல்லியிருக்கிறார;(யோவா-16:33). ஆனால் இயேசு அவற்றை ஜெயித்ததைப்போல நாமும் ஜெயிக்கலாம்.
நாம் இங்கு கவனித்த இந்த மூன்று தீர்மானங்களையும் நாமும் நம் வாழ்வில் எடுக்க வேண்டும்.
இன்று நாம் எடுக்க வேண்டிய மூன்று தீர்மானங்கள்
என்ன நடந்நாலும் தேவனை நம்புவதை விடமாட்டேன்
என்ன நடந்நாலும் தேவனுக்குள் மகிழ்வதை விடமாட்டேன்
என்ன நடந்நாலும் தேவனை நேசிப்பதை விடமாட்டேன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..