நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » அன்பே என்னை மன்னிப்பாயா?

அன்பே என்னை மன்னிப்பாயா?

ஒய்யார வானம்,
வட்ட நிலா,
ஓடும் நதி,
ஓரமாய் ஒரு மொட்டைப்பனை,
உச்சியில் ஒரு ஒற்றைக் குருவி
மனதில் எழுகின்றன கற்பனைக் குவியல் 

நதியின் சலசல இரைச்சல் அதற்கு பிள்ளைகளின் அழுகுரலாய் கேட்கிறது.

நிலாவின் வெண்மை முகத்தில் மனைவியின் பாசத்தைக் காண்கிறது அந்தக் குருவி.

எங்கிருந்தோ வரும் தாமரை வாசனை மனைவியின் அணைப்பில் உண்டாகும் சுகந்தம் போல இருந்தது அந்தக் குருவிக்கு.

தனிமையை உணர உணர “ஜில்” என்ற குளிருடன் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. நிலாவின் ஒளியும் நெருப்பாய் கொதிக்கிறது.

குஞ்சுகளையும் மனைவியையும் பிரிந்த மூன்று நாட்கள் மூன்று யுகங்கள் போல இருந்தது அந்தக் குருவிக்கு.

இத்தனைக்கும் மனைவியின் அந்த ஒரேயொரு வார்த்தையே காரணம்.
இத்தனை வருடம் அவளை அன்பாக கவனித்தவன் நான். அவள் கண்களில் கண்ணீர் கசியாமல் காத்தவன் நான்.

என்னை சந்தேகப்பட்டு அவள் அந்த வார்த்தையை சொல்லியிருக்கவே கூடாது. என் அன்பை புரிந்து கொள்ளாத அவளோடு இனிமேல் வாழ்ந்தென்ன பிரயோஜனம்.

என்றெல்லாம் நினைத்து வீட்டை விட்டு வந்து விட்டது அக்குருவி
தனிமையின் கொடுமை ஒரு புறம் “மனைவி என்னை எங்கெல்லாம் தேடுகிறாளோ” “குஞ்சுகள் என்ன பாடுபடுகின்றனவோ” என்ற எண்ணங்களின் கொலைவெறி மறுபுறம்.

இரண்டையும் முறித்துக் கொண்டு வருகின்றது “இல்லை இல்லை என்னில் தவறில்லை அவள்தான் குற்றம் செய்தாள்” என்ற சுயகௌரவம்.

எண்ணங்களின் புயல் ஓய மீண்டும் அமைதி நிலைக்கு வருகிறது குருவியின் மனம்.

எங்கோ ஒரு மூங்கில் காட்டில். மூங்கில்களில் வண்டுகள் போட்ட துளைகளினூடே செல்லும் தென்றல் காற்றால் உண்டாகும் இதமான ஓசையினூடாக காதில் பேசிய இறைவனின் குரலைக் கேட்டது அக்குருவி.

திடீரென ஏதோ ஒரு முடிவை எடுத்ததாய் பறவை சிறகுகளை விரித்து பறக்கத் தொடங்கியது. நேராக கூடு சென்றது.

கண்ணீர் மல்க பிள்ளைகளை அணைத்தபடி அழுது கொண்டிருந்த மனைவியை கட்டி அணைத்துக் கொண்டது.

ஏதோ பேச வாய் திறக்கும் முன்னே மனைவியின் வாய் முந்திக் கொண்டது. அன்பே என்னை மன்னித்துக்கொள்

தொடர்ந்தது குருவி.

நான் உன்னை மன்னிக்கிறேன். என்னையும் நீ மன்னித்துக் கொள்
அணைப்பு வரவர இறுக்கமாகிக் கொண்டே போனது.

இப்போது இரண்டு குருவிகளின் கண்களிலும் உண்டான கண்ணீருக்கு மகிழ்ச்சிதான் காரணமாக இருந்தது.

இதை வாசிக்கும் அன்பு உள்ளங்களே மூங்கில்களில் வண்டுகளிட்ட துளைகளினூடே செல்லும் காற்றால் உண்டாகும் இதமான ஓசையூடாக இறைவன் அக்குருவியின் காதில் என்ன பேசியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.

உன் மனைவியை நீ ஏன் மன்னிக்ககூடது?

அன்பானவர்களே இயேசு உங்களைப் பார்த்து கேடகிறார். எனக்கு அநியாயம் செய்தவர்களை நான் மன்னித்தேனே. உனக்கு அநியாயம் செய்தவர்களை நீ ஏன் மன்னிக்க கூடது?

சிந்திப்பாயாக.       
-----------------------------------------------------by - robert dinesh-----------------------------------------------------    
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்