நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , , » திருமண வாழ்க்கை வாழுதல் ஒரு பாவமா?

திருமண வாழ்க்கை வாழுதல் ஒரு பாவமா?



இல்லவே இல்லை. உண்மையில் தேவனுடைய வசனமானது, “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளது” (எபி. 13.4) என்றே கூறுகின்றது, தேவனுடைய வசனம் ஒன்றைக் குறித்து அது கனமுள்ளது என்று கூறுகையில், அது “பாவம்” என்று எப்படி அழைக்கப்படக் கூடும்? 

கர்த்தராகிய இயேசுவின் முதலாவது அற்புதம் ஒரு விவாகத்தை கனம் பண்ணுவதாகவே செய்யப்பட்டதாயிருந்தது. விவாகம் கனமுள்ளதாயிருக்குமாயின், விவாக ஜீவியமுங்கூட நிச்சயமாகவே தேவனுக்கு முன்பாகக் கனத்துக்குரியதே!

 ஒருவன் தேவனோடு நடக்கிறவனாயிருந்தால், விவாகம் அல்லது விவாகஜீவியமானது, அவன் கர்த்தருடைய இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஒரு தடையாயிருக்கமுடியாது. இருப்பினும், பரலேகராஜ்யத்தினிமித்தம் அண்ணகர்களாய் இருக்கும்படி அழைக்கப்பட்ட சிலா் இருக்கின்றனா் (மத்.19.12).

“தேவனிடத்திலிருந்து மனுஷன் பெற்றுக்கொள்ளக் கூடிய வரங்களில் ஒன்று புதிய ஏற்பாட்டில் அப் பவுல், தீமேத்தேயு முதலியோரைப் போலவும், பழைய ஏற்பாட்டில் எரேமியா, யேவான்ஸ்நானன் முதலியோரைப் பேலவும் தனிமையாக இருக்கும்படியான அழைப்பே அல்லது அண்ணகனாய் ஜீவிக்கும் கிருபையே ஆகும்” என்று ஜான் வெஸ்லி கூறுகிறார். 

ஆயினும் எல்லோரும் அந்த வரத்தை அல்லது அழைப்பைப் பெற்றவர்களல்லர். விவாகம் செய்து ஜீவிக்கும் படி அழைக்கப்பட்டவர்களும் உண்டு.


அவ்வாறாயின், பின்வரும் வேதபகுதியின் பொருள் யாது? “இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள் போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள் போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள் பேலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள் போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும். இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறது” (1கொரி. 7.29-31)

இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் விவாக ஜீவியம் செய்யக் கூடாது என்று இது பொருள்படுமா? அது அவ்வாறாயிருக்குமாயின் காலம் குறுகினதானபடியால், அழவேண்டியவர்கள் அழக்கூடது என்றும், சந்தேஷப்பட வேண்டியவர்கள் சந்தோஷப்படக்கூடது என்றும், ஏதாயினும் ஒரு பொருளை வாங்க வேண்டியவர்கள் அதை வாங்க கூடாது என்றும் பொருளாகுமே! அப் பவுல் இவற்றை குறிப்பிட்டபின்னர், அதே வேதபகுதியிலேயே, “இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை தகாதவிதமய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்” (வச.31) என்று அவ்வாசகத்தின் உண்மையான அர்த்தத்தையும் தெளிவாக கொடுக்கிறார்.

உதாரணமாக, விவாகமான தம்பதிகள் சிலர் கருச்சிதைத்தல், குடும்பக்கட்டுப்பாடு போன்றவற்றை செய்வதின் மூலம் தங்கள் விவாக ஜீவியத்தைத் தகாதவிதமாய் அனுபவிக்கிறார்கள். “இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதை தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்” என்பது வேறு வார்த்தைகளில், “விவாக ஜீவியம் செய்கிறவர்கள் அதை துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது” என்று பொருள்படும். மற்றப்படி எவ்விதத்திலும் அது தேவ பக்ததியுள்ள விவாக வாழ்க்கைக்குத் தடைவிதிப்பதில்லை.

இது போன்றே மற்ற காரியங்களையும் கூட ஒருவர் தகாதவிதமாய் உபயோகிக்கக் கூடும். சிலர் சொகுசான வாழ்வுக்கான பொருட்களை வாங்கும் படி பணத்தை வீணாகச் செலவு செய்யக் கூடும். வேறு சிலர் தேவைக்கு அதிகமான நிலங்களும், வீடுகளும், பிற சொத்துக்களும் உடையவர்களாயிருக்க வேண்டுமென்ற பேராசையுள்ளவர்களாயிருக்கக் கூடும். 

நாம் இவ்வுலகில் ஜீவிக்கம் போது இப்படிப்பட்ட உலக பொருட்கள் ஒன்றையும் தகாத விதமாய் உபயோகிக்கவோ அல்லது துர்ப்பிரயோகம் செய்யவோ கூடாது என்றும், மாறாக காலம் குறுகினது கர்த்தருடைய இரகசிய வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது என்பதை உணர்ந்தவர்களாக நாம் அவற்றை தேவ மகிமைக்காகச் சரியான விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்றும் அப் பவுல் இங்கு எச்சரிக்கிறார்.

ஒன்றினை தகாதவிதமாய் உபயோகிக்காமல் இருப்பதற்கான நிவாரணம் அதை அறவே உபயேகிக்காமலிருந்துவிடுவது அல்ல, அதைச் சரியானவிதத்தில் உபயோகிப்பதே ஆகும். 

 “கிறிஸ்தவ வாழ்வின் 50 கடினமான கேள்விகளுக்கான பதில்  எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பதில். 
Share this article :

1 கருத்துகள்:

Er Moses Samuel M.E.,M.B.A., சொன்னது…

Over spelling mistakes in Tamil language. ...!!!! Could not be read articles...!!!

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்