ஓசியா தீர்க்கத்தரிசியின் மூலம் கா்த்தா் உரைத்த பிரகாரம் (ஓசியா 3:4 – கி.மு. 785) “இஸ்ரவேல் புத்திரா் அநேக நாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும் தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்” என்ற வேத வாக்கு கி.பி. 70ம் ஆண்டு முதல் நிறைவேறத் துவங்கியது.
கி.பி. 1948ம் ஆண்டில் இஸ்ரேல் என்ற தனி நாடு திரும்பவும் உருவான பின் அவர்களை வழி நடத்த ஒரு அதிபதி கிடைத்து விட்டான்; ஆனால் இம்முன்னறிவிப்பில் கூறப்பட்ட மற்ற காரியங்கள் இப்படியே நீடித்துக் கொண்டிருக்கின்றன.
அதே சமயம் தாவீதரசன் மூலம் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடியைக் கொடுப்பேன் என்று கி.மு.1000 இல் கூறியிருக்கிறார்
முன்னறிவிப்பு:-
சங்கீதம் 60: 4 (கி.மு.1000)
“சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக உமக்கு பயந்து நடக்கிறவா்களுக்கு ஒரு கொடியை கொடுத்தீர்”.
நிறைவேறுதல்:-
இப்பொழுது இஸ்ரவேல் நாட்டில் உபயோகத்திலிருக்கும் தேசியக் கொடி 1891ம் ஆண்டு ப்னெய் சீயோன் (Bnai zion) என்ற ஸ்தாபனத்தால் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உருவாக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டது. 1897ம் ஆண்டு ஜெனிவாவில் கூடிய முதல் சீயோனிய சங்கம் கூட்டம் தன் சின்னமாக இக்கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை. சீயோனிய சங்க ஸ்தாபகர் “தியோடர் ஹெர்சல்” வேறொரு சின்னத்தை மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்தார். அவர் எண்ணம் முற்றுப் பெறாமலேயே 1904ம் ஆண்டு மரணமடைந்தார்.
1933ம் ஆண்டு கூடிய 18ஆவது சீயோனிய காங்கிரஸ் மாநாடு 1891 ஆம் ஆண்டு பாஸ்டனில் உருவாக்கப்பட்ட சின்னத்தை உலக சீயோனிய சங்கத்தின் கொடியாகவும் பொதுவாக யூதருடைய கொடியாகவும் ஏற்றுக் கொண்டது,
இக்கொடி வெள்ளை நிறப் பின்னணியின் நடுவில் இள நீல நிற ஆறு மூலை கொண்ட தாவீதின் நட்சத்திரமும் மேல் ஓரத்திலும் கீழ் ஓரத்திலும் இரு இளநீல நிறப் பட்டைக் கோடுகள் கொண்டதாக இருக்கும். 1948 நவம்பர் 12ம் திகதி இக்கொடி இஸ்ரேல் நாட்டின் அதிகார பூர்வமான கொடியாக அறிவிக்கப்பட்டது. 1949 இல் இக்கொடியைப் பற்றிய சட்டம் இஸ்ரேல் சட்ட சபையில் நிறைவேற்றப் பட்டது.
இக்கொடியின் இரண்டு பட்டைகளும் நட்சத்திரமும் இளநீல நிறத்திலிருப்பதற்கு கர்த்தருடைய கட்டளை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அதாவது-
vz;;-15:38
- . நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.
vz;;-15:40
- நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.
தற்கால நவ நாகரீக உடைகளின் ஓரங்களில் இள நீல நிறத் தொங்கல்களை அதாவது குஞ்சங்களைத் தொங்க விடுவது நாகரீக உடைகளுக்கு ஒத்ததாக இருக்காது. ஆகவே எல்லோரும் பார்க்கத்தக்கதாக தேசிய கொடியின் இரு ஓரங்களிலும் இளநீல நிறத்தில் இரு நாடாக்களும் கொடியின் மத்தியில் இளநீ நிறத்தில் தாவீதின் நட்சத்திரத்தையும் சேர்த்துக் கர்த்தருடைய கட்டளைப்படியே அதைப் பார்த்து தேவனுக்குப் பரிசுத்த ஜனமாயிருக்க இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் வழிவகுத்திருக்கிறார்கள்.
இவ்விதமாக “சத்தியத்தின் படி ஏற்றும்படியாக உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர்” என்று தாவீதரசன் மூலமாய் உரைக்கப்பட்ட தேவ வாக்கு 2948 வருடங்களுக்குப் பின் கிபி1948 இல் இஸ்ரவேல் என்ற ராட்சியம் உருவான போது நிறைவேறிற்று.
நன்றி - “இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்“
இவ்விதமாக “சத்தியத்தின் படி ஏற்றும்படியாக உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர்” என்று தாவீதரசன் மூலமாய் உரைக்கப்பட்ட தேவ வாக்கு 2948 வருடங்களுக்குப் பின் கிபி1948 இல் இஸ்ரவேல் என்ற ராட்சியம் உருவான போது நிறைவேறிற்று.
நன்றி - “இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்“
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..