வாழ்க்கை வாழ்வதற்குத்தான். வாலிப வயதில் அனுபவிக்க வேண்டிய கூத்தும், கும்மாளமும், சந்தோஷமும், ஜாலியும் அனுபவிக்க முடியவில்லையென்றால் அது உண்மையிலேயே ஒரு வாலிபனுக்கு பெரிய இழப்புத்தான்.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய முடியாது. “உடலில் பெலன் இருக்கும் போது வாழ்வை அனுபவிக்க, கையில் பணம் இல்லையே” என்பது மாணவப் பருவம். “கையில் பணம் இருக்கும் போது உடலில் பலம் இல்லையே” என்பது முதுமைப் பருவம். ஆனால் வாழ்வை அனுபவிக்க பணமும் பலமும் சேர்ந்திருக்கும் பருவம் வாலிபப் பருவம்தான்.
எனவே நன்றாக உழைத்து உழைத்து வாழ்வை மனம் விரும்பியபடி வாழ்ந்து முடித்து விடலாமா?
வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? (பிரசங்கி-11:09) வாலிபனே உன் இளமையிலே சங்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட………………….
ஆஹா! வேதமே சொல்லி விட்டது. இனி என் கண்ணின் காட்சிகளில் நடந்து, அனுபவி ராஜா அனுபவி என வாழ வேண்டியதுதான் என்று கூறி விடலாமா?.
இல்லவே இல்லை மேலுள்ள வசனத்தின் தெரடர்ச்சியையும் வாசிக்க வேண்டும். அதில்தான் நமக்கான எச்சரிப்பு கூறப்படுகிறது. அவ்வசனம் என்ன சொல்கிறது தெரியுமா?
“வாலிபனே நீ உன் விருப்பப்படி வாழ உனக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் ஒன்றை நினைத்துக்கொள் உன் எல்லா செயல்களினிமித்தமும் உன்னை தேவன் நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார். நீ தேவனுக்கு கணக்கொப்புவிக்கவும் பதில் சொல்லவும் வேண்டி வரும். ஆகவே ஜாக்கிரதையாயிரு”.
இப்போது என்ன சொல்லுவோம்? மனம் போன போக்கில் கால் போகலாமா? போகலாம். ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்கொப்புவிக்க வேண்டி வரும்.
----------------------------------Robert Dinesh--------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..