நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » இஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்கள்- நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 08

இஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்கள்- நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 08

இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம் நிறைவேறல்




இஸ்ரவேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப் பற்றிய தீர்க்கத்தரிசனம்
w. லாக்குவர்; (w. Laqueur) என்ற சரித்திராசிரியர் எழுதுகையில் 'பலஸ்தீனிய அரபியர் 1937ம் ஆண்டு பீல் திட்டத்திற்கு (Peel Commission Paln) ஒத்துக்கொண்டிருந்தால் யூதரை டெல் அவீவுக்கும் ஹெய்பாவுக்கும் இடைப்பட்ட 85 கிலோ மீட்டர் நீளமுள்ள சமுத்திரக்கரைப் பகுதியில் மடடும் அடைத்து வைத்திருக்க முடியும். 
  அல்லது அவர்கள்   1947ஆம் வருட ஜக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் பலஸ்தீனாவின் பெரும் பகுதி அரபியரின் கையில்தான் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் இந்த இரண்;டு பிரேரணைகளையும் நிராகரித்து விட்டபடியால் யூதர்களின் பரிசுத்த வேதாகம முன்னுரைப்புகள் நிறைவேற வழி வகுத்து விட்டார்கள்' என்று எழுதியிருக்கிறார்.


முன்னுரைப்பு:
எரேமியா 32:43-44 (கி.மு..590) 

43 மனுஷனும் மிருகமுமில்லாத படிக்குப்பாழாய்ப்போயிற்று என்றும்,
கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

44 பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும். அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

நிறைவேறுதல் :

19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து அதிலும் விசேஷமாக 1880க்குப் பின் ஆண்டவரின் ஏவுதலின் பேரில் அனேக யூதமக்கள் பலஸ்தீனா நாட்டிலே குடியேறத் துவங்கினர். ஆனால் அவர்களுக்கு நிலமில்லாதபடியால் அங்கு ஜீவித்த அரபிய மக்களிடமிருந்து நிலங்களை விலைக்கு   வாங்கி குடியேறினார்கள். முதல் உலக மகா யுத்தத்தின் முடிவில் பால்போர் பிரகடனப்படி (Balfour Declaration) யூதர் பலஸ்தீனா நாட்டில் குடியேற அவசியமான நிலத்தை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் எரேமியா  32:43-44ம் வசனங்களில் 2500 வருடங்களுக்கு முன் ஆண்டவர் உரைத்தபடியே நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுவதும், பத்திரங்களில் கையெழுத்துப் போடுவதும், முத்திரையிடுவதும், சாட்சிக்கையெழுத்து வைக்கிறதும், பெரிய அளவில் நமது தலைமுறையிலேயே நிறைவேறியது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

ஜெர்மெனிய எழுத்தாளரான மார்த்தா க்ரோதோல்டு மான் என்பவர் தனது 'நமது கண்களுக்கு முன்னே இஸ்ரவேலின்  தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறுகின்றன' (Israels Prophecy is being Fulfilled before our eyes)   என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.  

டுசல்டார்ப்பைச் சேர்ந்த  Dr.ஆல்டர்ஸ்டீன் என்பவர் இரண்டாம் நூற்றாண்டில்  தாம் பலஸ்தீனா  நாட்டில் பதிவாளராகப் பணி புரிந்தவராகவும்  அச்சமயம் அரபியருக்கும் யூதருக்கம் இடையில் அநேக நிலக்கிரயப் பத்திரங்களைத் தாம் பதிவுபண்ணியதாகவும், இதில் விசேஷம் என்னவென்றால் தங்களுக்கு ஒரு பிரயோஜனமுமில்லை என்று கருதி தாங்கள் தரிசாய்  போட்டு வைத்திருந்த நிலங்களை யூதருக்குப் பதிவு பண்ணிக் கொடுக்கத் தரகர்கள்  மூலம் தம்மை தொந்தரவு பண்ணியதாகவும், இதில் அதிகமான அரபியர் வேறு இடங்களிலோ அல்லது நாடுகளிலோ குடியேறியிருந்தவர்கள் (Absentee Land Lords) என்றும், பத்திரம் முடிந்தவுடன் மனதிருப்தியோடு பணத்தைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாய்ப் போயினர் என்றும் கூறியிருக்கிறார். யூதருக்கு         இவ்விஷயங்களில் பண உதவி செய்தவர் யூத தனவந்தரான பாரான் ராத்ச்சைல்ட்

இவ்விதமாக அரபியருடைய அதிகமான நிலம் யூதருக்கு சொந்தமாகி எரேமியாவின்   மூலமாய் ஆண்டவர் முன்னுரைத்த வாக்கு (எரேமியா 32:43,44) நிறைவேறிற்று. அதாவது

43 மனுஷனும் மிருகமுமில்லாத படிக்குப்பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.

44 பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும் அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஆண்டவர் ஆபிரகாமுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் வாக்குத்தத்தம் பண்ணி கொடுத்த நாட்டை தங்கள் முரட்டாட்டத்தினாலும், ஆண்டவரை விட்டு விக்கிரகங்களை வணங்கி வழிதவறிப் போன படியினாலும்  தங்களுக்கென்று ஆண்டவர் கொடுத்த நிலங்களையே மீண்டும் விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று.



நன்றி - “இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்“        

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்