நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » உபவாசம் - அன்றும் இன்றும்

உபவாசம் - அன்றும் இன்றும்


  • பழைய ஏற்பாட்டு காலங்களில் உபவாசமிருந்து தங்களை  தாழ்த்தினார்கள், 
  • இக்காலங்களில் உபவாசமிருந்து தங்களை உயர்த்துகிறார்கள்,
I இராஜாக்கள் 21:27 ஆகாப் ... உபவாசம்பண்ணி,.. தாழ்மையாய் நடந்துகொண்டான்.

                                                                                                                                                                       
  • அக்காலத்தில் உபவாசம், “நாங்கள் தகுதியற்றவர்கள்” என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது.  
  • இக்காலத்தில் உபவாசம், “நாங்கள் தகுதியானவர்கள்”  என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
 I சாமுவேல் 7:6 அவர்கள் அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்

                                                                                                                                                                       
  • பழைய எற்பாட்டு காலத்தில் இரட்டு உடுத்தி புழுதியிலும் சாம்பலிலும் கிடந்து உபவாசித்தார்கள்
  • இக்காலங்களில் உபவாசக் கூட்டங்கள் நடத்தவென்றே கோபுரங்களையும் மாளிகைகளையும் கட்டுகிறார்கள்.
நெகேமியா 9:1 இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.

ஏசாயா 58:4 நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
                                                                                                                                                                        
  • அக்காலங்களில் உபவாசமிருந்து ஜெபித்தார்கள்.
  • இக்காலங்களில் உபவாசத்துடன் வேலைக்குப் போகிறார்கள். 
தானியேல் 9:3 நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி...

ஏசாயா 58:3 இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
                                                                                                                                                                        
  • அக்காலத்தில் உபவாசத்தில் அழுது புலம்பினார்கள்
  • இக்காலங்களில் ஆடலும் பாடலுமாக களைகட்டுகிறது
II சாமுவேல் 1:12 புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
                                                                                                                                                                        

இதை வாசிக்கும் எனதருமை நண்பரே உமது உபவாசம் எப்படிப்பட்டது? பரிசேயரைப் போன்று புகழ்ச்சியை பெறவும் , நற் பெயரடையவும் உபவாசிப்பதை தேவன் வெறுக்கிறார்.

உபவாசம் பற்றிய மேலதிக விளக்கத்துக்கு இங்கே கிளிக் செய்யவும் http://www.hichristians.com/2012/10/blog-post_5769.html
 

Share this article :

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உபவாசம் message nice and good revilation....ivaigam namkkaaga namma blessing, and suiththigarippukkaaga... but devanukku உகந்த உபவாசம்??????.
ஏசாயா 58:7 : பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

robert dinesh சொன்னது…

நீங்கள் சொல்வது மிகச் சரி சகோதரரே...god bless u

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்