நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)

இயேசு பாவம் செய்தாரா? (ஒரு இஸ்லாமிய நண்பரின் கேள்விக்கு பதில்)



ஒரு இஸ்லாமிய நண்பர் கேட்ட கேள்விக்கு எனது பதிலை வேதத்திலிருந்து கொடுக்கிறேன்.. இவருடைய கேள்வி சிவப்பு நிற எழுத்திலும், எனது பதில் நீல நிற எழுத்திலும் கொடுக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
இஸ்லாமிய நண்பர் –
குரான் படி இயேசு பாவம் இல்லாதவர். பைபிள் படி ??? இயேசு பாவம் செய்தவரே!
·         பாவம் செய்கிற ஆத்மாவே சாகும் (பைபிள் - எசக்கியேல் 18;20


சிலுவையில் அறைந்து இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகிறது. பாவம் செய்த ஆத்மா தான் சாகும் என்ற பைபிள் வாதப்படி இயேசு பாவம் செய்தார் என்று பைபிள் கூறுகிறது.

எனது பதில் -
“இயேசு பாவம் செய்தவர்” என்று வேதம் கூறவில்லை. நீங்கள் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதே உண்மை..
இங்கே வரும் சொற்களைக் கவனியுங்கள். “பாவம் செய்யும் மனிதன் சாவான்” என்று இங்கு கூறப்படாமல் அவனுடைய ஆத்துமா சாகும் என்று கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ஆத்தும மரணம் என்று கூறப்படுவது நரகத்தில் தள்ளப்படுதலாகும். இயேசுவின் சரீரம் மரணமடைந்தது, ஆனால் இயேசு நரகத்தில் தள்ளப்படவில்லை. நரகத்தில் தள்ளப்படுதலே ஆத்தும மரணம், நித்திய மரணம், இரண்டாம் மரணம் எனும் சொற்களால் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல இயேசு மரித்தது தம்முடைய பாவங்களுக்காக அல்ல, மனிதர்களாகிய நம்முடைய பாவங்களுக்காகவே மரித்தார். என்பதை வேதம் பல இடங்களில் கூறுவதை மறந்து விட வேண்டாம்.

இஸ்லாமிய நண்பர் –
·         மனிதன் பாவம் செய்வதற்கு அவன் பிசாசினால் பிடிக்கப்படுவதே காரணம் என்பது பைபிளின் கோட்பாடு.
ஆனால் இயேசுவும் பிசாசினால் சோதிக்கப்பட்டார் என்று பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)
பிசாசினால் சோதிக்கப்பட்டதில் இருந்து இயேசு பாவம் செய்தார் என்பது உறுதியாகிறது.

எனது பதில் -
“மனிதன் பாவம் செய்வதற்கு அவன் பிசானினால் பிடிக்கப்படுதலே காரணம் என்பது பைபிளின் கோட்பாடு” என உங்களுக்கு யார் சொன்னது? “அவனவன் தன் தன் சுய இச்சையினால் இழுக்கப்பட்டு பாவம் செய்கிறான்” என வேதம் கூறுகின்றது. சரி நீங்கள் கூறுவது போலவே இருந்தாலும் “இயேசு பிசாசினால் பிடிக்கப்பட்டார்”. என்று கூறும் ஒரு வசனத்தை கூட வேதாகமத்திலிருந்து உங்களால் காட்ட முடியாது.

பிசாசினால் பிடிக்கப்படுவதற்கும், பிசாசினால் சோதிக்கப் படுவதற்கும் வித்தியாசம் உண்டென்பதை சிந்திக்கவே மாட்டீர்களா? நீங்களும் சிந்திப்பதில்லை, மற்ற இஸ்லாமியர்களையும் சிந்திக்க விடுவதில்லை.
பிசாசு ஏன் இயேசுவை சோதித்தான்? அவரை பாவம் செய்ய வைக்கத்தானே? அப்படியானால் அதுவரை இயேசு பாவம் செய்யவில்லை என்பது உறுதியாகிறது.
இயேசுவை பாவம் செய்ய வைக்கும் முயற்சியில் பிசாசு வெற்றியும் பெறவில்லை. தன்னை சோதிக்க வந்த பிசாசை இயேசு துரத்தியே விட்டார். இவையெல்லாம் வேதாகமத்தில் தான் இருக்கிறது. நீங்கள் மறைக்கிறீர்கள்.

“பிசாசினால் சோதிக்கப்பட்டதில் இருந்து இயேசு பாவம் செய்தார்” என்று கூறுகிறீர்கள், இதற்கு ஒரு ஆதார வசனத்தை கூட உங்களால் காட்ட முடியாது.

 

இஸ்லாமிய நண்பர் –
·         “பாவமே செய்யாதவர்” என்ற அர்த்தத்தில் ஒருவர் இயேசுவைக் குறிப்பிட்ட போது இயேசு அதை மறுத்துள்ளார்

அதற்கு இயேசு நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே என்றார். (மாற்கு 10:18)


எனது பதில் -
சகோதரரே யூதர்கள், கடவுளைத் தவிர யாரையும் “நல்லவர்” என்று சொல்ல மாட்டார்கள். இங்கே ஒருவர் இயேசுவை “நல்லவர்” என்று கூறுகிறார். அப்போதுதான் இயேசு கேட்கிறார். கடவுள் மட்டுமே நல்லவர் என்று கூறும் சமுதாயத்திலுள்ள நீ என்னை நல்லவர் என்கிறாயே. அப்படியானால் நான் அவர்தான் என ஏற்றுக் கொள்கிறாயா? என்னும் தொனியிலேயே கேட்டார்.

சரி போகட்டும். இங்கே இயேசு, தான் பாவம் செய்யாதவர் என்பதை மறுத்துள்ளார் என்று கூறுகிறீர்களே? அப்படியானால் இயேசு “தான் பாவமே செய்யாதவர்” என்று இன்னொரு வசனத்தில் கூறியுள்ளாரே. இதைக் குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்? அந்த வசனம் இதோ…
யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை.


இஸ்லாமிய நண்பர் –
·         நல்லவரின் எந்தப் பிரார்த்தனையும் இறைவனால் மறுக்கப்படுவதில்லை என்று பைபிள் பின் வருமாறு கூறுகிறது

தேவனிடம் நல்லவர் செய்யக் கூடிய எந்தப் பிரார்த்தனையும் நிராகரிக்கப்படுவதில்லை. பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் போதனை. (யோவான் 9:31)

ஆனால் இயேசு சிலுவையில் அறையப்படும் போது தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடினார். (மத்தேயு 26:38-45 மாற்கு 14:36, லூக்கா 22:44

ஆனால் இயேசுவின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போயிற்று. இயேசு பாவம் செய்துள்ளார் என்று பைபிள் ஒப்புக் கொள்கிறது.

எனது பதில் -
(யோவான் 9:31) இந்த வசனத்தை நீர் பதிவு செய்யு முன் சற்று ஆராய்ந்திருக்க வேண்டும். இங்கு என்ன நடந்தது என்பதை இதற்கு முன் பின் உள்ள வசனங்களை வாசித்து தெரிந்து கொள்ளும்.
அதாவது இயேசு ஒரு பிறவி குருடனுடைய கண்களை திறந்து அற்புதம் செய்கிறார். அப்போது இயேசுவை எதிர்த்தவர்கள் பார்வை பெற்றவனை அழைத்து, அவனிடம் இயேசுவைப் பற்றி விசாரிக்கும் போது, அவன் இயேசுவை “பரலோகத்திலிருந்து வந்தவர்” என்றான். அவர்களோ அப்படியல்ல இயேசு ஒரு “பாவி” என்று கூறி திட்டுகிறார்கள். 
அந்த நேரத்தில் அந்த பார்வையடைந்த மனிதன் கூறிய வசனத்தை தான் நீர் மேலே பதிந்துள்ளீர். யோவான் 9ஆம் அதிகாரம் முழுவதும் வாசித்து பாரும். “பாவிகளுக்கு தேவன் செவிகொடுப்பதில்லை” என்றான். இது அந்த பார்வையடைந்தவனின் சொந்த கருத்தேயாகும். பாவத்தில் வாழ்பவர்கள் மனந்திரும்பி உண்மை உள்ளத்தோடு மன்னிப்பு கேட்கும் போது தேவன் பதில் கொடுப்பார். அதாவது பல வேளைகளில் பாவிகளின் ஜெபத்துக்கு கூட பதில் கொடுப்பார்.
இங்கே இந்த பார்வையடைந்தவர் கூறியதின் கருத்து என்னவென்றால், “பாவியாகிய மனிதர், தாம் அற்புதங்களை செய்வதற்காக தேவனிடம் கேட்டால் அதற்கு தேவன் பதில் கொடுக்க மாட்டார்” ஆனால் இயேசு எனக்காக ஜெபித்த போது பதில் கிடைத்து அற்புதம் நடந்தது. என்பதாகும். இதன் மூலம் “இயேசு பாவியான மனிதன் அல்ல” என்று அம்மனிதன் நிறுவினார்.
பாவிகளின் கோரிக்கைக்கு தேவன் செவி கொடுப்பதில்லை என்பது பைபிளின் போதனை. (யோவான் 9:31)
“பாவிகளுக்கு தேவன் செவிகொடுப்பதில்லை” என்றுதான் இவ்வசனத்தில் உள்ளது. “கோரிக்கைக்கு” என்னும் சொல்லை கள்ளத்தனமாக நீர் இந்த வசனத்தின் இடையில் சொருகியுள்ளீர். “பாவிகளுக்கு தேவன் செவிகொடுப்பதில்லை”  என்று சொன்னால் நீர் சொல்லவந்ததை சொல்ல முடியாது போகும். ஏனெனில் இயேசுவுக்கு தேவன் செவி கொடுத்ததாக வேதாகமத்தில் பல இடங்களில் எழுதப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இயேசுவின் ஜெபம் கேட்கப்படவில்லை என்பதும் சுத்த பொய்யல்லவா? இயேசு எப்படி ஜெபித்தார்? பிதாவின் சித்தப்படி ஆகட்டும் என்றல்லவா? அது போலவே பிதாவின் சித்தப்படி நடந்தது. உமது கையை எடுத்து உமது கண்ணையே குத்திக் கொள்ள வேண்டாம் சகோதரா..


இஸ்லாமிய நண்பர் –
·         மதுபானம் அருந்துவது பாவம் என்று பைபிள் கூறுகிறது. (நீதி மொழிகள் 23:29-35)
ஆனால் இயேசு மதுபானபிரியன் என்றும் அதே பைபிள் கூறுகிறது மத்தேயு 11:19


எனது பதில் –
நீங்கள் இரண்டாவதாக பதிந்துள்ள வசனத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் சகோதரா. “இயேசு மதுபானப் பிரியன்” என பைபிள் கூறவில்லை. “இயேசு மதுபானப் பிரியன்” என அவருடைய எதிரிகள் கூறினார்கள்” என்பதே அங்கு தெரிவிக்கப்படுகிறது. (முகம்மதுவைக் கூட அவர்காலத்தில் வாழ்ந்த மக்கள் கேவலமாக பேசினார்கள். அதையெல்லாம் நம்பப் போகிறீர்களா?)நீங்கள் பதிந்துள்ள வசனத்துக்கு முன்னுள்ள வசனங்களை படித்து பார்த்தால் உமக்கு தெரியும். 16ஆம் வசனத்திலிருந்து வாசித்துப் பாருங்கள். “இயேசு போஜன பானம் பண்ணுகிறவராக இருந்தார்” என்றே பைபிள் கூறுகிறது. “அவர் மதுபானம் பண்ணுகிறவராக இருந்தார்” என்பதற்கு வேதத்தில் எந்த ஆதாரமும் கிடையாது, அது அவருடைய எதிரிகளின் கூற்று.

இஸ்லாமிய நண்பர் –
·         ஒரு பெண் விபச்சாரம் செய்த போது பைபிள் சட்டப்படி கல் எறிந்து கொல்லுமாறு மக்கள் கேட்டனர்.

அதற்கு இயேசு விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று கூறினார். யோவான் 8:3-11

இயேசு அவளைத் தண்டித்திருக்க வேண்டியது தானே? என்று சிந்தித்தால் பைபிள் இயேசுவை எப்படி சித்தரிக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

எனது பதில் –
நண்பா. ஒரு பாவமும் செய்யாத ஒருவருக்கு மட்டுமே மன்னிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உண்டு. பாவம் செய்தவருக்கு மன்னிக்க மட்டுமே அதிகாரம் உண்டு. தண்டிக்க அதிகாரம் இல்லை. இயேசு பாவமே செய்யாதவர். அவர் நினைத்திருந்தால் தண்டித்திருக்கலாம். அவரோ மிகுந்த அன்பினால் மன்னித்தார்.

அவளை பிடித்து வந்தவர்கள்தான் அவளை தண்டிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். இயேசுவோ அவளை காப்பாற்றி மன்னிப்பு கொடுக்கச் செய்தார்.

இயேசு பாவிகளை அழிக்க வராமல் பாவிகளை இரட்சிக்க வந்தார் என்று வேதம் கூறுகிறது நண்பா..

இஸ்லாமிய நண்பர் –
·         பாவம் செய்தவர்கள் ஞானஸ்னானம் பெற வேண்டும் என்பது பைபிள் கோட்பாடு. மத்தேயு 3:6

எல்லோரும் ஞானஸ்னானம் செய்தது போல் இயேசுவும் ஞானஸ்னானம் பெற்றார் என்று மத்தேயு 3:13 கூறுகிறது.

எனது பதில் –
மத்தேயு 3:6 என்று இலக்கத்தை மட்டும் பதிவிட்டு விட்டு வசனத்தை ஏன் பதியாமல் விட்டீர்கள்? இதிலே தெரிகிறது நீங்கள் எப்படிப்பட்டவர் என்று. அத்த வசனங்களை பதிகிறேன்5. அப்பொழுது எருசலேம் நகரத்தாரும் யூதேயா தேசத்தார் அனைவரும் யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய்

6. தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 
இவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு ஞானஸ்னானம் பெற்றார்கள்.. ஏனெனில் இவர்கள் பாவம் செய்தார்கள்..
ஆனால் நன்றாக வாசித்து பாரும். இயேசு பாவத்தை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் எடுக்கவில்லை. அறிக்கையிடாமலே பெற்றார். ஏனெனில் அவர் பாவமே செய்ததில்லை.
இயேசு தன்னை ஒரு முன்னாதிரியாக காட்டும்படியாகவே ஞனஸ்நானம் பெற்றார்.

இஸ்லாமிய நண்பர் –
·         இப்படி பைபிளைப் புரட்டினால் இயேசு நிறையப் பாவங்கள் செய்துள்ளார் என்பது தெரிகிறது. பைபிளை நம்பினால் இயேசு பாவம் செய்தார் என்றும் நம்ப வேண்டும்.

எனது பதில் –
பைபிளை நீங்கள் எப்படி புரட்டினாலும் இயேசு பாவி என்பதை நிரூபிக்க முடியாது. உங்களைப் போல பிழையாக விளங்கிக் கொண்டால்தான் உண்டு. அவர் பாவமில்லாதவர், பரிசுத்தர் என்றே வேதம் பல இடங்களில் கூறுகின்றது.

-------------------------------------------by- Robert Dinesh-------------------------------------------
Share this article :

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

சரியான பதில்கள்

Unknown சொன்னது…

நிச்சயமாக அனைத்து இசுலாமிய சகோதரர்களும் இனிமேலும் இயேசு மீது குற்றத்தை உருவாக்க மாட்டார்கள் என நம்புகிறேன். தேவன் உங்களுக்கு அருளிய ஞானத்திற்காக அவரை ஸ்தோத்தரிக்கிறேன்.

robert dinesh சொன்னது…

நன்றி சகோதரரே. கர்த்தருக்கே மகிமை

Unknown சொன்னது…

சரியான பதில்கள்

Unknown சொன்னது…

Jesus is real Godm

Unknown சொன்னது…

JESUS

Unknown சொன்னது…

இயேசு கிருஸ்த்து பாவம்செய்தார் என்று சொன்ன சகோதரர்....கூடிய சீக்கிரத்தில் நம் தேவன் அன்பை புரிந்து கொண்டு..நம் அன்பு தேவனை பாவம்செய்தார் என்று சொன்ன அந்த நம் சகோதரர் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்வார்...தேவனின் வார்த்தைகளை போதிக்க ஆயத்தமாக போகிறார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Unknown சொன்னது…

இயேசு கிருஸ்த்து பாவம்செய்தார் என்று சொன்ன சகோதரர்....கூடிய சீக்கிரத்தில் நம் தேவன் அன்பை புரிந்து கொண்டு..நம் அன்பு தேவனை பாவம்செய்தார் என்று சொன்ன அந்த நம் சகோதரர் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்வார்...தேவனின் வார்த்தைகளை போதிக்க ஆயத்தமாக போகிறார் என்று நான் முழுமையாக நம்புகிறேன்

Unknown சொன்னது…

Super , they are fools

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்