நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » அதிசய படைப்பு நான்

அதிசய படைப்பு நான்


சங்கீதம் 139:14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.


எத்தனை உண்மை... ஒரு சிறு கருவினின்று எலும்புகள், மூட்டுகள், தலை, முகம், கண், காது, மூக்கு, வாய், கழுத்து,
உடல், கைகள், கால்கள், தசைகள், மூளை, இருதயம், ஈரல், நுரையீரல், முடி, நகம் போன்ற யாவும் சரியான இடத்தில் பொருத்தமாக அமைக்கப்படுகின்றன.
மூளையின் நுண்ணிய அமைப்பும் செயல்களும் வியப்பைத் தருகின்றன. நாம்  உயிர்வாழ்வதற்குப் பிராணவாயு (ஆக்ஸிஜன்) அவசியமாகும். அது உடலுக்குள் செல்வதற்குச் சுவாசம், அது இரத்தத்தில் கலப்பதற்கு நுரையீரல் இரத்தம் சுத்திகரிக்கப்படும் விதம் ஆகியவற்றை ஆராய்ந்து பாருங்கள்.

வலைப்பின்னல் போன்ற 1500 கி.மீட்டருக்கு அதிகமான நீளமுள்ள இரத்தக் குழாய்களும் ஒரு கோடிக்கு அதிகமான நரம்புகளும் உடலெங்கும் பரவியிருக்கின்றன. கண்ணிற்குள் இரு விழிகள் அதில் நுணுக்கமான சிறப்பான நரம்புகள், திரை, அதை ஈரமாக வைத்திருப்பதற்கு ஒரு சுரப்பி, அதிலிருந்து வரும் நீர் கண்ணின் மீது பரவுவதற்கு இமையும், கண்சிமிட்டுதலும் ஆகியவை எத்தனை ஞனத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன.

மனிதனின் தோலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் 500 இற்கு மேற்பட்ட வேர்வை நாளங்கள், உணவை உடலில் சேர்க்கிறதற்காக குடலில் 2 கோடிக்கு மேற்பட்ட “வாய்கள்” நுரையீரலில் 50 கோடிக்கு மேலான காற்று செல்கள் ஆகியவை செயல்படுகின்றன.

உடலின் ஒவ்வொரு பாகத்திலிருந்தும் வலி, சுவை, காட்சிகள், ஒலி, மணம் போன்றவற்றை உடனடியாக மூளைக்குத் தெரிவிக்கும் “டெலிபோன்” அமைப்பு வியப்புக்குரியது.

இரத்தத்தில் உள்ள அணுக்கள் உடலிலேயே உருவாக்கப்படுதல் விந்தையன்றோ. ஆயிரக்கணக்கான சுரப்பிகள் (பலவித நீர்களை சுரக்கும் ஊற்றுகள்) நமது உடலில் உண்டு அதில் ஒன்று பழுதடைந்தாலும் தொல்லைதான்.

பல சிறு கயிறுகளால் பிணைக்கப்பட்டது போன்ற உயிர், அதில் ஒன்று அறுந்தாலும் போய்விடும் நிலையிலுள்ளது அது. ஆயினும் ஒவ்வொரு ஆண்டும் மூன்றரைக் கோடிக்கு மேலான தடவைகள் சீராகத் துடிக்கும் இருதயம், எப்பொழுதும் உடலில் வெப்பத்தைச் சரியாக வைத்திருத்தல், உணவு செரித்து உடலுக்கு தேவையானவை கிடைத்தல் போன்றவை பல ஆண்டுகள் சரியாக நடப்பது பிரமிக்கத்தக்கது அன்றோ.

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டவன். இவையும் தானாக நடைபெறுகின்றன என்று சிலர் எப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

அதற்கு மேலாக மனிதனுக்குள் பல்வேறு உணர்வுகள், நன்மை தீன்மை அறியும் ஆற்றல், அவனுக்குள் தேவனின் குரலாகிய மனச்சாட்சி, ஆவிக்குரிய பல காரியங்கள், மறுபடியும் பிறத்தல் (யோவான்.3.3), இறுதி முடிவு போன்றவை இதைவிட அதிகமாக பிரமிக்கத்தக்கவை.

தேவனுடைய சாயலாகவும், உருவமாகவும் உருவாக்கப்பட்ட மனிதன், தேவனுடைய பார்வையில் “தன்னுடைய சொந்தக்குமாரனின் இரத்தத்தைச் சிந்தி மீட்கும் அளவிற்கு” மிகவும் விலையேறப் பெற்றவன். நாம் நித்தியத்திற்காக  உருவாக்கப்பட்டவர்கள். இவ்வுலக வாழ்க்கை அதற்கு ஆரம்பமாகவும் அடித்தளமாகவும் அமைகின்றது.

சங்கீதம்-139:14 இல் நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப் பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது எத்தனை உண்மை?????
Dr. Alfred Dhevathasan.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்