அதிசய படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிசய படைப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)
எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள் : ஆய்வின் மூலமாய் நிருபிக்கப்பட்ட வேத வசனம் (இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கான பதில்)
உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளன, ஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால், எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,

வேதாகமம் கூறும் நட்சத்திரக் கூட்டம் - ( வேதாகம அறிவியல்-10 )
“அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக் கூடுமோ?” (யோபு 38.31)
என்று வேதாகமம் கேட்கிறது. ஈர்ப்பு சக்தியின் சட்டத்தினால்தான் எல்லா கிரகங்களும் ஒன்றுக் கொன்று இழுத்து தாங்கிய நிலையில் உள்ளது. அவைகளை இணைக்கவும் பிரிக்கவும் முடியாது. என்பதை வான சாஸ்திரிகள் நமக்கு கற்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பதாகவே வேதாகமம் நமக்கு கூறி விட்டது.
மிருகசீரிஷத்தின் கட்டுக்களை அவிழ்ப்பாயோ? (ஆமோஸ் 5.8, யோபு 38.31)
மிருகசீரிஷம் எனும் நட்சத்திர கூட்டத்தின் ஒழுங்கு முறையையும், அவைகள் ஒன்றாக இணைக்கப் பட்டடிருப்பதைப் போல இருப்பதையும் வான சாஸ்திரம் கண்டு கொண்டுள்ளது. அநேக நட்சத்திர கூட்டங்களிலுள்ள நட்சத்திரங்கள் தனித் தனியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறன. ஆனாலும் கார்த்திகை நட்சத்திர கூட்டமான, ஆறுமீன் நட்டசத்திர கூட்டமும் மிருகசீரிஷம் என்ற நட்சத்திர கூட்டமும் இணைந்து செல்லும் நட்சத்திர கூட்டங்களாகும்.
துருவ சக்கர நட்சத்திரத்தையும் அதை சேர்ந்த நட்சத் திரங்களையும் வழி
நடத்துவாயோ? (யோபு 38.32)
சுவாதி நட்சத்திரமான துருவ சக்கர நட்சத்திரம் ஓடும் நட்சத்திரமென்றும், அது வினாடிக்கு 84 மைல் வேகத்தில் பிரயாணம் செய்கிறதென்றும் விஞ்ஞானம் கண்டு பிடித்திருக்கிறது. இடி பாடுகள் இல்லாமல் இவைகள் செய்யும் பிரயாணத்தின் மகத்துவத்தை செய்தது யார்?
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப் பண்ணி, அவைகளை யெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே.. ஏசா 40.26)

நட்சத்திரங்களை எண்ண முடியுமா? - ( வேதாகம அறிவியல்-09 )
வானத்தின் நட்சத்திரங்களை எண்ணமுடியுமென்று எண்ணிய அக்கால விஞ்ஞானிகள் அவற்றை ஆளுக்கொரு எண்ணிக்கையாக கூறிவந்தார்கள்.
கி.பி. 1608 ஆம் ஆண்டுக்கு பின் சில ஆயிரம் நட்சத் திரங்களை தொலைநோக்கிகளின் வழியே விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள ஆரம்பித்தனா்
சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் 1930 வரை நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.)
ஆனால் அதற்கு முன்னால் எழுதப்பட்ட வேத வார்த்தையானது நட்சத்திரங்களை எண்ண முடியாது என்றது.
எது உண்மை? இன்றைய அறிவியல் என்ன கூறுகிறது?
நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று விஞ்ஞானிகள் முடிவாக அறிவித்து விட்டனர்.
வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.
தொலை நோக்கி இல்லாமலேயே, நட்சத்திரங்களைப் பற்றி வேத எழுத்தாளர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? சிந்தியுங்கள்
ஆனால்“அவா் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவை களுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். . (சங் 147.4) என வாசிக்கிறோம்
கடவுள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை யை அறிந்திருக்கிறதுமன்றி, அவைகளை பேரிட்டு அழைக்கிறார். மனித அறிவை பொறுத்த மட்டிலும், நம்மால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மிகப் பெரிய தூரதிருஷ்டி கண்ணாடிகளின் மூலமாகப் பார்த்தாலும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை முற்றிலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

காற்றுக்கு நிறை உண்டா? -( வேதாகம அறிவியல்-08 )
“காற்றுக்கு அதின் நிறையை நியமித்து ” யோபு 28.25
இந்த வசனம் “காற்றுக்கு எடையுண்டு” என்று கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வேதாகமத்தில் எழுதப்பட்டதாகும்.
ஒரு சதுர அங்குலத்திற்கு கடல் மட்டத்தில் 15 பவுண்டு எடை காற்றுக்கு உண்டு என்பது நமக்கு தெரியும்.
இதை டோர்ரிசில்லி என்பவா் கி.பி 1643-ல் செய்து காட்டினார்.
இது கண்டுபிடிப்பதற்கு எத்தைனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே வேதாகமத்தில் கூறப்பட்டு விட்டதல்லவா?

உலகை சுமப்பது யார்? - ( வேதாகம அறிவியல்-06 )
அந்தரத்தில் தொங்கும் பூமி
அடலாஸ் என்னும் ஒருவர் எண்ணிலடங்கா பாரத்தைக்கொண்ட இந்த பூமியை சுமந்து கொண்டிருப்பதாக உலகிலேயே மிகச்சிறந்த ஞான வாதிகளாக கருத்ப்ப்ட்ட கிரேக்கர்கள் நம்பி வந்தனர்.
ஆரியர்களோ ஒரு பெரிய யானை இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர்.
ஆரியர்களோ ஒரு பெரிய யானை இந்த பூமியை தாங்கி வருவதாக கூறி வந்தனர்.
ஆனால் இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட வேதாகமத்தின் யோபு நூலில் “பூமியை யாரும் சுமக்கவில்லை, பூமி அந்தரத்திலே தொங்க விடப்படி்டுள்ளது” என்ற மாபெரும் அறிவியல் உண்மை எழுதப்பட்டுள்ளது.
அவர் உத்திரமண்டலத்தை வெட்ட வெளியில் விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். (யோபு 26.7)
வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.
வேதம் சொன்னபோது யாரும் நம்பவில்லை விஞ்ஞானம் கண்டு பிடித்து சொன்னபோது வேதத்தை நம்புகிறார்களள்.

உயிர் எங்கு இருக்கின்றது? - ( வேதாகம அறிவியல்-05 )
“உயிரினங்களின் உயிர் எங்கு இருக்கின்றது?” என்ற கேள்விக்கு 3400 ஆண்டுகளுக்கு முன்பே மோசேயின் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களில் விடை கூறப்பட்டுள்ளது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் உள்ளது என்பதை மோசே ஆதி.9:4, லேவி.17:11,14 என்ற வசனங்களில் எழுதியுள்ளார். ஆனால் உலகில் இருந்த அறிவியல் வல்லுநர்கள் யாவரும் “மனிதனின் உயிர் அவன் இருதயத்தில் உள்ளது” என்று கூறி வந்தனர்.
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1962 ஆம் ஆண்டு) இருதுய மாற்று அறுவை சிகிச்சையின் பயனாக மரணமடைந்த ஒருவரின் இருதயத்தை மற்றொருவருக்குப் பொருத்தி வெற்றி கண்டனர். இவ்வாறு இருதயம் மாற்றப்பட்ட பின் உயிரோடிருப்பவா் யார்? இருதயத்தைக் கொடுத்தவரா, அல்லது இருதுயத்தைப் பெற்றுக்கொண்டவரா என்ற கேள்வி எழுந்தது.
எனவே அறிவியல் வல்லுநர்கள் கூடி மனிதனின் உயிர் இருதயத்தில் இல்லை, மூளையில் இருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மூளையிலிருந்து உடலுக்கு வரும் முக்கியமான தொடர்புகள் அற்றுப் போன பின்பும் மக்கள் நினைவின்றி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்ததோடு மீண்டும் தங்கள் கொள்கையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
உலகின் பல அறிவியல் வல்லுநர்கள் கூடி “உயிர் இரத்தத்தில் உள்ளது” என்ற கொள்கையை கூறியுள்ளனர். வேதம் இந்த அறிவியல் உண்மையை 3400 ஆண்டுகட்கு முன்பே கூறியுள்ளது.
----------------------------------by-robert dinesh-------------------------------
----------------------------------by-robert dinesh-------------------------------

பிரயாணம் செய்யம் சூரியன்- ( வேதாகம அறிவியல்-04 )
சூரியன்
வினாடிக்கு 200மைல் வேகத்தில் நகர்ந்தால் நட்சத்திர மண்டலததைச் சுற்றிவர 250 கோடி வருஷங்களாகும்.
மற்ற கோடிக் கணக்கான சூரியன்களோடு நம் சூரியனும் அதிவேகமாய் பிரயாணம் செய்துகொண்டே
இருக்கிறது.
"அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை
ஸ்தாபித்தார். அதுதன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாள னைப் போலிருந்து பராக்கிரமசாலியைப்
போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.

கர்ப்பத்தில் வளரும் குழந்தையும் கர்த்தரின் 7 பண்டிகைகளும். ( வேதாகம அறிவியல் - 03 )
கர்ப்பத்தில் கருவைச் சுமந்து பெற்றெடுத்த ஒவ்வொரு பெண்ணும், வேத வார்த்தையில் குறிப்பிடப்பட்ட அவ்வந்த நாட்களிலே, கர்த்தரின் 7 பண்டிகைகளையும் தன் கர்ப்பத்தில் அனுபவித்திருக்கிறார். இப் பண்டிகைகள் யூத பண்டிகைகள் அல்ல கர்த்தரின் பண்டிகைகளாயிருக்கின்றன. இவை வருடந்தோறும் சந்ததி சந்ததியாக சபை கூடி அவ்வந்த பரிசுத்த நாட்களில் அனுசரிக்கப்பட வேண்டிய பண்டிகைகளாயிருக்கின்றன. (

கால்களுடன் வாழ்ந்த பாம்புகள் ( வேதாகம அறிவியல் - 02 )
அன்பானவர்களே ஆதியில்
பாம்புகள் கால்களுடன் வாழ்ந்தன என்பதையும் கடவுளின் சாபத்தாலேயே பாம்புகள் கால்கள்
இன்றி போயின என்பதையும் வேதாகமத்தில் இருந்து அறியலாம்.
வேதாகமத்தை விமர்சனம்
செய்பவர்கள் இக்கூற்றை கிண்டலாக விமர்சனம் செய்வது வழமை. முக்கியமாக இஸ்லாமிய அறிஞரான pj
அவர்கள் எழுதிய “இதுதான் பைபிள்” என்ற புத்தகத்தில் இதைக்குறித்து எழுதி
வேதாகமத்தை விமர்சித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)