நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு நிறைவேறியது

யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு நிறைவேறியது


சுமார் 1700 மைல் அல்லது 2700 கிலோ மீட்டர் தூரம் வரை வற்றாத ஜீவ நதியாக பாய்ந்து மூன்று தேசங்களை செழிப்படைய செய்து வரும் மிகவும் பழமையான நதிதான் இந்த யூப்ரட்டீஸ் நதி. இந்த நதி துருக்கியில் ஆரம்பித்து சிரியா தேசத்திற்க்கும் ஈராக் தேசத்திற்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. அவர்களின் விவசாயம், குடிநீர், மறுசுத்திகரிப்பு, மின்சார உற்பத்தி, மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கு இந்நதியே வற்றாத ஜீவநதியாக விளங்கி வருகிறது, இதற்கு முந்தைய உலக வல்லரசாக விளங்கிய மகா பாபிலோனின் செழிப்புக்கும் இந்நதி முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. அந்த பாபிலோன் இன்று இல்லை, அது முற்றிலும் வேதத்தின் முன்னுரைப்பின் படியே அழிக்கப்பட்டது, ஆனால் பாபிலோன் இருந்த இடத்தில் இப்பொழுது ஈராக் தேசம் உள்ள்து, இந்த ஈராக் தேசத்திற்கும் யூப்ரட்டீஸ் நதியே முக்கிய பங்காற்றி வருகிறது.


     இவ்வளவு மிகவும் பரந்து வ்ரிந்து காணப்படும் இந்நதி வரலாற்றில் எந்த கால்த்திலும் வற்றிப்போனதாக எந்த குறிப்பும் இல்லாத நிலையில் இப்போழுது இந்நதி வற்றி போய்விட்டது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?

     ஆம் ! இந்நதி வற்றிப்போனது என்று நியுயார்க் டைம்ஸ் என்ற உலக பிரசிதிப்பெற்ற செய்தி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தி சுற்று சூழல் ஆய்வாள்ர்களை பெரிதும் வ்ருத்தமடைய செயதுள்ளது,ஆனால் பரிசுத்த வேதாகமத்தை நம்புகிறவர்களையோ இன்னும் விசுவாசத்தில் வேரூன்ற செய்தது, அது எப்படி? யூப்ரட்டீஸ் நதி வற்றியதற்கும் வேத வார்த்தை நிறைவேறியதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.

     பூமியின் கடைசி காலத்தில் இஸ்ரவேல் நாட்டின் மேல் பூமியின் கிழக்கு தேசங்களின் ராஜாக்கள் யுத்தம் பண்ண கூடி வருகையில் அவர்கள் வறண்டு வற்றிய யுப்ரட்டீஸ் நதியின் வழியாகவே இஸ்ரவேல் நாட்டிற்குள் பிரவேசிப்பார்கள் என்று வேதம் திட்டவட்டமாக கூறி உள்ளதை பின்வரும் வசனத்தின் மூலமாக உங்களுக்கு கோடிட்டு காண்பிப்ப்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .

   ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணிர் வற்றிபோயிற்று  – வெளிபடுத்தல்: 16:12

    யூப்ரட்டீஸ் நதியை வேதாகமத்தில் ஐபிராத்து என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இந்த வேதாகமமே உண்மை என்பதற்கும் இதுவே கர்த்தருடைய வார்த்தை என்பதற்கும் பல ஆயிரம் சாட்களோடே இதுவும் இணைந்து கொள்கிறது.
   நம் கண்கூடாக அவருடைய வேதத்தின் வார்த்தைகள் திட்டமாக நிறைவேறிவரும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் , ஆனாலும் இன்னமும் மனக்கண்களை குருட்டு தன்மைக்கு விட்டுவிட்டு குருடராய் வாழ்ந்தால் நித்திய அக்கினியில் உங்களை யாரால் மீட்டு இரட்சிக்க கூடும் நீங்கள் மனந்திரும்ப இதுவே சரியான தருணம், இன்றே  இரட்சண்ய நாள், கர்த்த்ரின் பெரிதும் பயங்கரமான நாள் நெருங்கிற்று, மனந்திரும்புங்கள்.

 –--------------ஆசிரியர்.சுவி.D.விமலன்---------------------  நன்றி   ஜீவ ஊற்று--------------------- 

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்