
(உமரின் கடிதம் )
1)இயேசு தேவாலயத்தைவிட பெரியவர்,
2) யோனாவை விட பெரியவர்,
3) சாலொமோனை விட பெரியவர் மேலும்
4) தாம் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்
என்று
இயேசு கூறிய வசனங்களை மேற்கோள் காட்டினேன். நீண்ட கடிதத்தை நீ படித்தால்,
உனக்கு சோர்வு உண்டாகும் என்பதால் இயேசுவின் நான்கு உரிமை பாரா ட்டல்களை
விளக்கி முடித்தேன். அதன் தொடர்ச்சியாக, இந்த கடிதத்தில், அதே
சுவிசேஷங்களில் இன்னும் எந்தெந்த வகையில் இயேசு தம்முடைய தெய்வீகத் தன்மையை
வெளிப்படுத்தியுள்ளார் என்பதை காண்போம்.