நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » நியூட்டன் கணித்த கிபி:2060

நியூட்டன் கணித்த கிபி:2060


”கோள்களில்நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே
நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம்
அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன் ஆல்பர்ட்ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவிஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.


விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், வேதபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். இதனால் பைபிள் புத்தகத்தின் படி நடக்கக்போகும் சம்பவங்களையும் அது நடைபெறப்போகும் காலங்களையும் வெகுவாக ஆராய்ந்து எழுதினார்.

யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவருதல், மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டப்படுதல், அந்திக்கிறிஸ்துவின் வருகை, அர்மகெதோன் யுத்தம் போன்றவற்றை பற்றியும் அவை நடைபெறப்போகும் காலங்களை பற்றியும் தனக்கு தெரிந்த அளவில் அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலங்களில் ஒருவேளை தனது பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் விடும் என்று பயந்தும், அக்கால சபைத் தலைவர்களுக்கு பயந்தும் அந்த ஆய்வுகளை அவர், அவர்காலத்திலேயே வெளியிடவில்லை.


அந்த கையெழுத்து கோப்புகள் யாருக்கும் தெரியாமல் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளில் அவைகள் ஏலத்துக்கு வர அவர் எழுதிய வேதாகம தீர்க்கதரிசன குறிப்புகளும் வெளிஉலகுக்கு தெரியவந்தன. சர் ஐசக் நியூட்டனின் இந்த குறிப்புகள் மூலம் அவர் கிபி:2060-ல் உலகம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பியதாக தெரிகிறது. உலகத்தை படைத்த இறைவனே அதை அழிக்கவும் வருவதாக அவர் நம்பினார். அவர் கணக்கிட்ட காலக்கணக்கின் படியே 1940களில் இஸ்ரேல் தேசம் உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியர் ஒருவரே நியூட்டனின் கையெழுத்துக் கோப்புகளை ஏலம் எடுத்ததால் இன்றைக்கு அவை நியூட்டன் எதிர் காலத்தில் உருவாகும் என நம்பின இஸ்ரேல் தேசத்திலேயெ இருப்பது ஒரு ஆச்சரிய பொருத்தம்.

----------------------------இணையம்----------------------------------------




Back to top
Share this article :

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

2000 ஆண்டு உலகம் அழியிது யேசு வாறார் என்று சொல்லி பல இலட்சம் பேரை மதம் மாத்தியாச்சசு, 2012 இல் திரும்பவும் இதே பொய்ய சொல்லி மிச்சம் மீதி இருந்தவா்களையும் மதம் மாத்தியாச்சு மாறின்னவங்களில பாதிப்பேர் செத்தும் போயாச்சு ( சொந்த முளையில்லாதவா்கள்) இப்ப 2067 என்று புதுக்கதையா???? ஓ இன்னும் சிலா் சொந்த மூளையுள்ளவா்கள் இருக்கின்றார்கள்

robert dinesh சொன்னது…

யாரு சொன்னது? 2000,2012 இல் உலகம் அழியும் என்று? இந்த லிங்க பாருங்க. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=3jZVLxFVD6g
இயேசு சீக்கிரம் வரப்போவது உண்மை. ஆனால் உலகம் அழிய அதிக காலம் எடுக்கும்.2012, 2000 இல் உலகம் அழியும் என்று சொன்னது விஞ்ஞானிகள் தான். கிறிஸ்தவா்கள் சொல்வது இதுதான்- ““விஞ்ஞானிகள் சொல்வது உண்மையாகுமானால் அந்த அழிசவுக்கு முன்னதாக இயேசு வந்து விடுவார்““. என்பதுதான்.

ஷாபு ஞெ சொன்னது…

//2000 ஆண்டு உலகம் அழியிது யேசு வாறார் என்று சொல்லி பல இலட்சம் பேரை மதம் மாத்தியாச்சசு, 2012 இல் திரும்பவும் இதே பொய்ய சொல்லி மிச்சம் மீதி இருந்தவா்களையும் மதம் மாத்தியாச்சு மாறின்னவங்களில பாதிப்பேர் செத்தும் போயாச்சு ( சொந்த முளையில்லாதவா்கள்) இப்ப 2067 என்று புதுக்கதையா???? ஓ இன்னும் சிலா் சொந்த மூளையுள்ளவா்கள் இருக்கின்றார்கள்//

முதலில் உனக்கு சொந்த மூளையுள்ளதா என்று அலசி அராய்ந்து பார். பைபிளில் 2000, 2012 உலகம் அளியும் என்று எங்கு போட்டுள்ளது. பல இலட்சம் பேரை மதம் மாத்தியாச்சசுன்னு சோல்லுரியே எந்த சோந்த மூளையைவைத்து அப்படி சோண்ணாய் அதாரம் இல்லாமல். காட்டுபார்போம் உன்னுடைய அதரத்தை.

பெயரில்லா சொன்னது…

உலகம் அழிய போகுதுநு சொன்னது கிறிஸ்தவர்கள் அல்ல விஞ்ஞானிகள் தான் ........நீ மதம் மாறினா எங்களுக்கு என்ன கிடக்க போகுது .... எங்க நோக்கம் மதம் மாத்துறது இல்ல உண்மையான தேவன் இயேசுவ எல்லோரும் அறிஞ்சிகனும் அதான் .

சிவபாதம் சஜிரூபன் சொன்னது…

முடநம்பிக்கை என்றா அவமானம் என்பதால் அதற்கு தீர்க்க தரிசனம் என்று சொல்லி உளர்றீங்களா..

robert dinesh சொன்னது…

எது சகோதரரே மூட நம்பிக்கை?
நாங்கள் எவ்வளவோ தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்தில் கூறப்பட்டபடி நிறைவேறியுள்ளன என்பதை கூறிவிட்டு அதேபோல இனியும் மிகுதியான தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் என்றுதானே கூறுகிறோம். ஆதாரமின்றி சும்மா கட்டுக்கதைகளை நாம் கூறவில்லை.

நிறைவேறிய தீர்க்கதரிசனங்களில் சிலவற்றை இந்த லிங்கில் பதிவிட்டுள்ளோம் போய் வாசியுங்கள்.
http://www.hichristians.com/search/label/நிறைவேறிய%20வேதாகம%20தீர்க்கதரிசனங்கள்.

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்