நீலக்கடல் வான் மேலே
நிலாவது ஓடம் போலே
மிதக்கின்ற வேளையிலே…
அவ்வின்பக் காட்சி கண்டு
அகமலர்ந்து ரசிக்கையிலே
எங்கிருந்தோ வந்ததே
கோரக் கரு முகில்.
அழகான நிலாவதனை
கருமுகில் மறைத்து விட
அதனுள்ளே மறைந்த நிலா
போகும் திசை தெரியாமல்
தட்டுத் தடுமாறியது.
மலர்ந்திருந்த என்னகம்
வாடிவிடலானது….
என்னுள்ளே இயற்கையை நான்
திட்டியதாலோ அறியேன்,
விரைந்து வந்த குளிர் காற்று
கருமுகிலை விரட்டி விட்டு
நிலவுக்கு வழியமைத்தது.
மறுபடியும் அழகு நிலா
வான்மீதில் நயங்காட்ட
மறக்கின்றேன் என் வாழ்வின்
நிகழ் காலந்தனை
என்வாழ்வும் நிலாவாழ்வும்
ஒப்பும் என நினைக்கின்றேன்.
நீல வானாம் பூமி மேலே
நானங்கு நிலாப் போலே
வாழுகின்ற காலத்திலே…
ஆகா…!
இன்பமான வாழ்வதனை - பாவக்
கருமுகில் மறைத்துவிட
மறைந்து விட்ட நிலாப் போலே
பாவத்துள் மறைந்து,
மெய்தேவன் யாரென்ற
அறியாமல் திணறிப் போனேன்…
இன்பமான என் வாழ்வு
துன்பமாக மாறியது…
குருடனாக வாழும் போது
குளிர் காற்றாம் யேசு இரத்தம்
பாவக் கரு முகிலை
விரட்டி வழி காட்டியது.
முன்னை விட இங்ஙனமே
என் வாழ்வு மெய்யாக
மாறியதை அறிகின்றேன்.
பூமியிலே…
உயரொளியாய் ஒளிர்க்கின்றேன்.
என்வாழ்வும் நிலாவாழ்வம்
இத்தால் ஒப்புதன்றோ
எனக்கிதை கற்பிக்க
நிலாப்படைத்த தேவனுக்கு
என்ன செய்ய கைமாறு…?
------------------------------------------wrote by robert dinesh--------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..