இன்று தேவப் பிள்ளைகள் தங்களை தாங்களே குறைவாக நினைத்து தேவனை தூஷிக்கிறார்கள்.
ஏன் என்னை தேவன் இப்படி
படைத்தார்? உடலில் குறைபாடுகள், அழகில்லாத ரூபம், சொல்லிக் கொள்ளக் கூடிய
திறமைகள் எதுவும் என்னிடம் இல்லையே
மற்றவா்களுக்கு நிறைய தாலந்துகளையும்,
திறமைகளையும், அழகையும், செல்வத்தையும் கொடுக்கும் தேவன் ஏன் எனக்கு அவற்றை
தரவில்லை?என கேள்வி கேட்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு வேதம் சொல்வது என்ன?
v
என்னிடம் அழகு இல்லை
என்று சொல்லாதே.
ஏனென்றால் தேவன் உன் முக அழகை பார்ப்பதில்லை.
(மனிதன் முகத்தை பார்க்கிறான் தேவனோ இருதயத்தையே பார்க்கிறார்.
1சாமு. 16.07)
v
என்னிடம் செல்வம்
இல்லையே என்று சொல்லாதே.
ஏனென்றால் உள்ளதையெல்லாம் தனக்காக இழக்கக்கூடியவனையே தேவன்
விரும்புகிறார்.
( உனக்குள்ளதெல்லாம் விற்று என்னை பின்பற்றி வா என்றார் இயேசு. மத் 19.21.)
v
எனக்கு ஞனம் இல்லை
என்று சொல்லாதே.
ஏனென்றால் மனித ஞானம் தேவனுக்கு முன்பு செல்லாக் காசு போன்றது.
(ஞனிகளை வெட்கப்படுத்த தேவன் பைத்தியங்களை தெரிந்து கொண்டார். 1 கொரி1.27)
v
எனக்கு கல்வி இல்லை
என்று சொல்லாதே.
ஏனென்றால் கல்வியால் தேவனை அறியும் அறிவை பெற்றுக்கொள்ள முடியாது.
(அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. பிர 12.12)
v
எனக்கு திறமை இல்லை
என்று சொல்லாதே.
ஏனென்றால் திறமையால் எதையும் சாதித்து விட முடியாது
(பலவான் தன் பலத்தால் பலப்படுவதில்லை. ஆமோஸ் 2.14-16)
v
நான் நீதிமான் அல்ல
என்று சொல்லாதே.
ஏனென்றால் மனித நீதி கடவுளிடம் எடுபடுவதில்லை.
(எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, ஏசாயா )
நம்மிடம் இல்லாததைப்
பற்றி கவலைப்படாமல் இருப்பதை தேவனிடம் கொடுப்போம் நம்மை நரகத்தில் அழித்து
விடக்கூடிய அழகும், பணமும், திறமையும் வேறெதுவும் நமக்கு வேண்டாம்.
நமக்கு உள்ளதே போதுமென்றிருக்க கடவோம்.
by robert dinesh
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..