இயேசுக்கிறிஸ்து சீஷர்களின் கால்களை கழுவிய
சம்பவம் நாமனைவரும் அறிந்ததே. இயேசு தாழ்மைக்கு அடையாளமாக இக் காரியத்தை செய்தார் என
நாம் அறிவோம் ஆனால் இக் காரியம் இன்னும் ஒரு விடயத்தை நமக்கு உணர்த்தி நிற்கின்றது.
என்னவெனில்…
இயேசு செய்த இக்காரியத்தை ஒரு மனிதனில் ஒட்டியுள்ள
அசுத்தத்தை கழுவி சுத்தம் பண்ணுவதற்கு அடையாளமாகவும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் ஒரு மனிதனுடைய உடற்பாகங்களில் அடிக்கடி அசுத்தம் அடையக் கூடியதும், அசுத்தமானதும்
பாதங்களாகும். அந்த பாதங்களைத் தான் இயேசு கழுவினார்.
இன்றைய மனிதர்களாகிய நாம் மற்ற மனிதர்களுடைய
வாழ்விலும் அவா்களின் நடத்தையிலும் ஒடடியுள்ள அசுத்தங்களை இயேசுவைப் போல கழுவி அகற்றி
விடுகிறோமா? அல்லது அவைகளை மற்றவா்களுக்கும் காண்பித்து அந்த மனிதா்களை அவமானப் படுத்துகிறோமா?
ஒரு மனிதனுடைய தவறுதலையோ, பிழையான நடைமுறையையோ
மற்ற மனிதா்களுக்கும் எடுத்துக் காண்பித்து, அவதூறு பேசி தூற்றித் திரிவதையல்ல தேவன் விரும்புவது. மாறாக மற்றவர்களுடைய தவறுகளை
கழுவவும், மூடவும், அகற்றவும் பழக வேண்டும்
அதிகமான விசுவாசிகள் ஊழியர்கள் விடும் தவறுகளை
இணைய தளங்களிலும், மேடைகளிலும் அம்பலப்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஊழியா்களின் அழுக்குகளை
கழுவுவதை விட்டுவிட்டு அதை ஊர் தூற்ற வைத்து கொண்டிருக்கின்றனா்.
நம்முடைய நண்பா் ஒருவர் தவறுதலாக ஒரு அழுக்கான
கதிரையில் அமர்ந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எழுந்த போது அவருக்கு பின்னால்
அந்த அழுக்கு ஒட்டிவிட்டது என்று கொள்வோம். உடனே அதை மற்றவர்களுக்கு காட்டி அவரை பரியாசம்
செய்வதா? அல்லது அவரிடம் அதைக் கூறி நாமாக ஒரு துணியை எடுத்து துடைத்து விடுவதா? எது
சிறந்தது?
ஊழியர்கள் விடும் தவறை நேரடியாக அவரிடம்
சுட்டிக் காட்ட வேண்டுமே தவிர, அதை அம்பலப்படுத்தக் கூடாது. நேரடியாக சொல்லும் போது
ஒரு வேளை அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். மீண்டும் சொல்லி எச்சரிக்க வேண்டும்.
அடுத்ததாக
அவர்களுக்காக எம் முழங்கால் முடங்க வேண்டும்.
கைகள் தேவனை நோக்கி உயர வேண்டும். இதைத்தான் தேவன் விரும்புகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..