(எபேசு)
(Ephesus) என்பது துருக்கி நாட்டில் சின்ன ஆசியாவின் (Asia Minor) மேற்கு கடற்கரையில்
அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இன்றைய காலத்தில் "செல்சுக்"
(Selçuk) என்னும் பெயரில் இந்நகரம் அழைக்கப்படுகின்றது.
இது ஏறக்குறைய கி.மு.5 ஆம்
நூற்றாண்டில் ஒரு நகரமாக உருவெடுத்தது
என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில்
இது கிரேக்கப் பேரரசை சேர்ந்த ஒரு
நகரமாக இருந்தது. பின் இந்த நகரம்
உரோமைப் பேரரசின் ஒரு அங்கமாகியது. இரண்டு
பேரரசின் காலங்களிலும் இந்த நகரம் முக்கியமான
வணிக நகரமாக விளங்கியது. அதன்பின்
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ்
இருந்து வந்துள்ளது.