எறும்பினிடத்தில் போய் கற்றுக்கொள் : ஆய்வின் மூலமாய் நிருபிக்கப்பட்ட வேத வசனம் (இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கான பதில்)
உலகில் ஒவ்வொரு மார்கத்திற்கும் ஒவ்வொரு வேதங்கள் உள்ளன, ஆனா இதில் எந்த வேதம் குறைவில்லாதது என்றால், எது எல்லாவிதமான ஆய்வுகளுக்கும்,சோதனைகளுக்கும் உட்படுத்தி தன் உண்மை தன்மையை நிலைநாட்டுகிதோ அதுவே,
அந்த வகையில் பார்த்தால் கர்த்தருடைய வேதமே பரிசுத்தமானது என்பதற்கு இதுவரையிலும் ஏராளமான ஆதாரங்கள் நம்மை சுற்றிலும் இருக்கின்ற நிலையில், வேதத்தை பொய் என்று தங்களுக்கு தோன்றிய ஞானத்தின்படி வாதிடுபவர்கள் ஏராளம், அந்த வகையில் இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் மற்றும் அவரை சார்ந்தவர்கள் பின் வரும் விமர்சனத்தை வேதாகமத்தின் மீது சுமத்தி அதை குற்றப்படுத்தி வருகின்றனர், அதென்னவென்றால்,
வேதத்தில் நீதிமொழிகள் 6:6-8 வசனங்களில் எறும்பின் சுறுசுறுப்பை குறிப்பிடும் விதமாக வசனங்கள் வருகின்றன, அதில் அந்த எறும்பிற்கு பிரபுவோ, தலைவனோ, அதிகாரியோ இல்லாதிருந்தும் அதின் சுறுசுறுப்பையும் அதின் வழிகளையும் பார்த்து ஞானத்தை கற்றுக்கொள் என்பதாக குறிப்பிடுகிறது.
இதை பிடித்துக்கொண்ட ஜாகிர் நாயக் மற்றும் அவரை சார்ந்தவர்கள்,எறும்பு கூட்டத்திற்கு ராணி எறும்பு உண்டு என்று ஆய்வுகள் கூறுகிற நிலையில், பைபிளில் அதற்கு பிரபுவோ, தலைவனோ, அதிகாரியோ இல்லையென்று கூறுவதினிமித்தமாக பைபிள் பொய்யானது என்றும், ஒரு சிறு பூச்சி விசயத்தில் தவறான கருத்தை கூறும் பைபிள் எப்படி மனிதனை குறித்து விளக்கி கூற இயலும்?, எனவே பைபிள் உண்மையான கர்த்தருடைய வார்த்தை இல்லை என்று வாதிடுகிறார்கள்.
சரி! இதில் இவர்கள் கூறுவது உண்மையா அல்லது வேதம் கூறுவது உண்மையா என்று விளக்கமாக பார்க்கலாம்.
இவர்கள், எறும்புகளுக்கு ராணி எறும்பு உண்டு என்பதற்கு ஆதாரமாக மைர்மக்காலஜி(MYRMECOLOGY) என்கிற எறும்பை குறித்த ஆய்வு பாடத்திலிருந்து குறிப்பிடுகிறார், ஆனால் ஏதோ அவசரத்தில் அவர் கவனிக்காமல் விட்ட விஷயம் என்னவென்றால், ராணி எறும்பு மற்ற எறும்புகளை ஆள்வதில்லை, கட்டளையிடுவதில்லை, அதிகாரமும் செலுத்துவதில்லை, மாறாக, முட்டையிடுவதும் அதன் புற்றுக்கூட்டை பாதுகாப்பதும்தான் ராணி எறும்பின் வேலை,
மற்றுமொரு உண்மை என்னவென்றால் அந்த குறிப்பிட்ட புற்று குழுவில் உள்ள எல்லா எறும்புகளுக்கும் ராணி எறும்பு என்று கூறப்படுகிற எறும்புதான் தாயானவள்,
பணிவிடை எறும்புகளை காட்டிலும் உருவத்தில் பெரிதாகவும் இறகுகள் உள்ளதாகவும் காணப்படும், ஒரு எறும்பு குழுவில் ராணி எறும்பின் பங்கு இவ்வளவுதான், ராணி எறும்பு மாத்திரமல்ல அந்த குழுவில் உள்ள வேறு எந்த எறும்பும் மற்ற எறும்புகளை அதிகாரம் செலுத்துவதில்லை என்பதை அதே மைர்மெக்காலஜி பாடத்தில் ஆய்வின் மூலம் ஆதாரத்துடன் உறுதிபடுத்தப்பட்டுள்ளது, கிறிஸ்தவத்தையும் அதன் வேதத்தையும் எப்போதும் குறை கூறி வருகிற இந்த மற்ற பிற மதத்தின் சிறந்த அறிஞர்களுக்கு இந்த உண்மை எப்படி தெரியாமல் போனது, ஆனால் என் வேதம் பொய்யுரைப்பதில்லை ஏனென்றால் இந்த வேதாகமத்தின் தேவனே பொய்யுரையாதவர்,
ஆஹா! நம் வேதமாகிய பைபிள் எத்தனை உண்மையுள்ளது என்று சொல்லி தேவனை துதிக்க தோன்றுகிறதல்லவா, சற்றுப்பொறுங்கள் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மற்றுமொரு ஆய்வு உண்மையை கூறி விடுகிறேன் அதன் பின் நாம் தேவனை மகிமை படுத்தலாம்
வேதம் கூறும் இன்னொரு ஆச்சரிய உண்மை
1742 ம் ஆண்டில் கர்த்தரின் படைப்பின் அதிசயத்தை ஆய்வு செய்த (இயற்கை) பிரெஞ்சு ஆராய்ச்சியாளரான ரெனே அண்டாய்ன் ஃபெர்கால்ட் டி ரியுமர்(RENE ANTOINEFERCHAULTDEREAUMUR) என்ற அறிஞர் எறும்புக்கூட்டத்தில் பெரும்பாலான எறும்புகள் பெண் எறும்புகள் என்ற முதல் ஆய்வு தகவலை உலகிற்கு வெளியிட்டார், அதைப்போலவே, எறும்பு கூட்டத்தில் பணிவிடை எறும்புகள்(workerants) எல்லாம் பெண் எறும்புகள் என்ற உண்மையை
சமீபத்திய ஆய்வு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளது.
சரி, இதிலென்ன விசேஷம் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக நினைக்கத்தோன்றும், ஆனால் இதிலும் ஒரு மிகப்பெரிய உண்மை அடங்கியுள்ளது, அதே நீதிமொழிகள் 6:6-8 வசனங்களில் இந்த பணிவிடை எறும்புகள், பெண் எறும்புகள் என்று வேதம் தெளிவுபடகுறிப்பிடுகிறது,
தமிழ் வேதாகமத்தில் நீதி 6:6-8 வசனங்களில் எறும்பை குறித்து கூறும் போது,

6. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
7. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்
என்பதாக கூறுகிறது, ஆனால் ஆங்கில மூல வேதமாகிய கிங் ஜேம்ஸ் வர்சனில்,
Go to the ant, thou sluggard; consider her ways, and be wise:Which having no guide, overseer, or ruler,Provideth her meat in the summer, and gathereth her food in the harvest. இதிலே HER என்று குறிப்பிடுவதால் அந்த பணிவிடை எறும்புகள் பெண் எறும்புகள் என்பது தெளிவாகிறது, இது மூல ஆங்கில வேதாகமத்தில் மாத்திரமல்லவேதாகமத்தின் மூல மொழியான ஹீப்ரூ மொழியிலும் அது பெண் பாலினத்தை குறிக்கும் சொல்லான நெமெலா(NEMALAH) என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது,
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைக்கு காணப்படுகிற விஞ்ஞான வளர்ச்சியற்ற ஒரு கால கட்டத்தில் வேலை செய்யும் எறும்பு இனம் பெண் இனம்தான் என்பதை ஒரு சாதாரன மனித மூளையினால் எவ்வாறு கண்டுபிடிக்க இயலும், தேவ ஆவியினாலன்றி இதை யாரால் இவ்வளவுதுல்லியமாக எழுதி வைக்க இயலும், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களே சிந்தியுங்கள்,
பைபிள் குறையுள்ளது என்று சொல்லி உங்களை நீங்களே கெடுத்துக்கொள்ளாதீர்கள், சாதாரன எறும்பு விஷயத்தில் பைபிள் இவ்வள்வு துல்லியமானதாக இருக்குமானால் விசேஷமாய் படைக்கப்பட்ட மனிதனை குறித்து பைபிள் சொல்வது பொய்யாகுமோ,மனந்திரும்புங்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்

http://www.ted.com/talks/deborah_gordon_digs_ants.html (see Deborah Gordon’s Ants at Work)http://www.desertusa.com/mag07/jul07/ant.html
Ref.for worker ants are female :http://www.stanford.edu/~dmgordon/labpeople.html
http://www.ted.com/talks/deborah_gordon_digs_ants.html (see Deborah Gordon’s Ants at Work)
9 கருத்துகள்:
தேவனுக்கே மகிமை! அல்லேலூயா! ஆமென்!
Great
இஸ்லாமிய சகோதரா்களே சிந்தியுங்கள்
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
Bible வசனங்கள் 100% உண்மையானது
Psalm.119:18
அப்பாலே போ சாத்தானே உன் கர்த்தராகிய ஆண்டவரை சோதியாதே.
என்று இறைவன் இயேசு சொன்னதை கிறிஸ்தவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்
அப்பாலே போ சாத்தானே உன் கர்த்தராகிய ஆண்டவரை சோதியாதே.
என்று இறைவன் இயேசு சொன்னதை கிறிஸ்தவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..