இன்றைக்கு
நிறைய ஊழியக்காரர்கள் சிலம்பம் பண்ணுவதாக சொல்லிக் கொண்டு ஆகாயத்தை அடிக்கிறார்கள்
என்பது உங்களுக்கு தெரியுமா? சிலம்பம்
என்பது நீளமான தடியினால் சுழட்டி சுழட்டி எதிரிகளை அடித்து தோற்கடிக்கும் ஒரு கலை
. ஆனால் இன்று சிலர் எதிரிக்கு ஒரு அடி கூட படாமலே தங்கள் தடிகளை சுழட்டி
கொண்டிருப்பதை கவனித்து பாருங்கள்.
I கொரிந்தியர்-9:26. இல் ''ஆதலால்
நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்''.என்ற இந்த வார்த்தையில்
பவுல் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் சிலம்பம் பண்ணினால் உங்கள் எதிரிக்கு நெத்தியடியாக இருக்க வேண்டுமே
தவிர காற்று விசிறி விடுவதாக இருக்க கூடாது .
சிலம்பம்
பண்ணுகிறவர்கள் எதிரியை அடிக்க வேண்டுமே தவிர ஆகாயத்தை அல்ல.
அதாவது
நீங்கள் எதை செய்தாலும் அதை நிச்சயத்தோடும், அர்த்தத்தோடும், கருத்தோடும்
செய்ய வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் அதை செய்வதன் நோக்கத்தை நிறைவேற்ற
வேண்டும். ஓடுகிறவன் கிரீடத்தை பெறும் நிச்சயத்தோடு ஓட வேண்டும்.
1கொரிந்தியர்-09:24. , போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்ற
நம்பிக்கையோடு போரடிக்க வேண்டும்.1கொரிந்தியர்-09:10.
நாம் செய்யும் ஊழியம் தேவனை மகிழ்விக்கவில்லை என்றால் அது ஆகாயத்தை அடிப்பது போலவே . அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
நீங்களும்
நானும் செய்யும் ஊழியங்களுக்கு ஒவ்வொரு நோக்கம் உண்டு.செய்யும் ஊழியம்
நோக்கத்தை விட்டு விலகி விட்டதென்றால் நீங்கள் ஆகாயத்தை அடிக்கிறவர்களாக
சிலம்பம் பண்ணுகிறீர்கள் என்று அர்த்தம். ஒன்றை
நினைத்து கொள்ளுங்கள் நீங்களும் நானும் ஊழியம் செய்வதன் பொதுவான நோக்கம்
பிசாசிடமிருந்து ஜனங்களை இயேசுவண்டை திருப்புவதும் தேவனின் ராட்சியத்தை
கட்டுவதுமே தவிர , நமக்கென்று வீடு கட்டுவதும், ஆலயம் கட்டுவதும்,செல்வம்
சேர்ப்பதும் அல்ல.
நீங்கள் செய்யும் ஊழியம் இந்த பொதுவான நோக்கத்தை உடையதாக
இல்லையென்றால் அது வீணானதாகவே இருக்கும். அது ஆகாயத்தில் அடிப்பதை போலவே.
அந்த ஊழியத்தின் மூலம் செல்வமும் வருமானமுமே அதிகரிக்கும். தேவனுடைய
ராட்சியம் கட்டப்படாது. அது எதிரிக்கு சந்தோஷம். அந்த செல்வத்தை வைத்தே
நம்மை அவன் ஜெயித்து விடுவான். இன்று அநேகர் அந்த பொதுவான நோக்கத்தை மறந்து
தங்களுக்கென்று சபைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 1கொரிந்தியர் -09:14
இன்படி ஊழியத்தின் மூலம் ஊழியர்களுக்கு பிழைப்பு உண்டாக வேண்டும் என்பது
உண்மைதான். ஆனால் பிழைப்புக்கென்று நானும் நீங்களும் ஊழியம் செய்கிறோம்
என்றால் உடனே அந்த ஊழியத்தை நிறுத்தி விட்டு தேவ நோக்கத்தை உடைய ஊழியத்தை
தொடருவோம்.
நாம் செய்யும் ஊழியம் தேவனை மகிழ்விக்கவில்லை என்றால் அது ஆகாயத்தை அடிப்பது போலவே . அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
-------------------------------------------------By Robert Dinesh----------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..