நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » கா்த்தரின் கால அட்டவணை

கா்த்தரின் கால அட்டவணை




எல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்யும் நம் தேவன் ஒழுங்கின் தேவன்அவா் கண்ட கண்ட நேரத்திலெல்லாம் நினைத்த காரியங்களை யெல்லாம் செய்து கொண்டிருப்பதில்லைஎன்பது உங்களுக்கு தெரியுமாநம்முடைய தேவன் ஒவ்வொரு செயல்களையும் செய்ய ஒவ்வொரு கால நேரத்தை ஒழுங்கு முறைப்படி குறித்து வைத்துள்ளார்நம்மைப்போல பல்லு விளக்கும் நேரத்தில் தூங்கவும்தூங்கும் நேரத்தில் சினிமா பார்த்துக்கொண் டிருக்கவும் அவர் மனிதனல்லஅவர் தேவன்அவர் தன்னுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் என்ன காலத்தைநேரத்தை குறித்து வைத்துள்ளாரோ அதிலிருந்து ஒரு செக்கன் கூட முந்தவுமாட்டார் பிந்தவுமாட்டார்.

செய்வேன் என்று சொல்லி காலத்தை குறித்த ஒரு விடயத்தை செய்ய மறந்துவிட்டு ஐயோஎன தலையில் கை வைத்துக் கொண்டு நிற்பவரல்ல நம் அப்பா. சொன்னால் சொன்னதை சொன்ன காலத்தில் அவர்  நிறைவேற்றி தீருவார். எல்லாவற்றையும் செய்ய ஒரு கால நேரத்தை குறிப்பது அவரது ஸ்டைல். இந்த வசனங்களை கவனியுங்கள்



Ø  பிரசங்கி 3:11  அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;

Ø     கானா ஊரில்  ஒரு  கலியாண வீட்டில்  அற்புதத்தை  செய்ய குறித்த நேரம் வரும் வரைக்கும் பொறுத்திருந்தார்
யோவான்-02:04. அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

Ø      ஆபிரகாமுக்கு பிள்ளை பிறப்பதற்கு நாள் குறிக்கப்பட்டது.
ஆதியாகமம் 18:10 அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆதியாகமம் 18:14 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ உற்பவகாலத் திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

ஆதியாகமம் 17:21 வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார்.

Ø     யோவானின் பிறப்புக்கு காலம் குறிக்கப்பட்டிருந்தது.

லூக்கா-01:20. இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.

Ø  மேசியாவின் பிறப்புக்கு தகுந்த காலம் குறிக்கப்பட்டிருந்தது.

தானியேல் 9:25  இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல்பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும்அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.

Ø         மேசியாவின் மரணத்துக்கும் காலம் குறிக்கப்பட்டிருந்தது.

தானியேல்-9:26  அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா   சங்கரிக்கப்படுவார்;  ஆனாலும் தமக்காக அல்ல;

Ø  அவருடைய நேரம் வரும்வரை யாரும் யேசுவின் மேல் கை போடவோ,  அவரை கொல்லவோ முடியவில்லை.

லூக்கா- 04: 29,30.   எழுந்திருந்துஅவரை ஊருக்குப் புறம்பே தள்ளி,  தங்கள் ஊர்  கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.  அவரோ அவர்கள் நடுவினின்று கடந்து போய்விட்டார்.


Ø   நியாயதீர்ப்புக்கு காலம் குறிக்கப்பட்டுள்ளது

தானியேல் 7:21   நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும்நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டுபரிசுத்த வான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்  காலம் வருமட்டாகவும்,


Ø  தானியேல் 11:35   

Ø  தானியேல் 8:14   அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.

Ø  ஆபகூக் 2:3   குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறதுமுடிவிலே அது விளங்கும்அது பொய் சொல்லாதுஅது தாமதித்தாலும் அதற்குக் காத்திருஅது நிச்சயமாய் வரும்அது தாமதிப்பதில்லை.

Ø  தானியேல் 11:27   இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்ஒரே பந்தியிலிருந்து பொய் பேசுவார்கள்ஆனாலும் அது வாய்ப்பதில்லை குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்.

Ø  II சாமுவேல் 24:15   அப்பொழுது  கர்த்தர்  இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம் பேர் செத்துப்போனார்கள்.


இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரது கால அட்டவணையை. உலக படைப்பு முதல் அதன் அழிவு வரை எல்லாவற்றிற்கும் கால நியமத்தை குறித்துவிட்டு அதை எழுதியும் வைத்துள்ளார். அவர் தமது கால அட்டவணையை வேதாகமத்தில் மறைவாகவும் தெளிவாகவும் எழுதி தந்துள்ளார். அதை நேரம் தவறாமல் நிறைவேற்றியும் வருகிறார்.

இன்று அவருடைய பிள்ளைகள் என்று சொல்லியும் அவருடைய குணாதிசயங்களில் கொஞ்சமும் நமக்கு இல்லாவிட்டால் எப்படி?

தேவன் உங்களுக்கென்று நியமித்த வேலையை குறித்த காலத்தில் செய்து முடியுங்கள். அதற்காக அவசரப்படாதீர்கள். சில விடயங்களில் விரைவாக செயற்பட வேண்டியதும், சில விடயங்களில் அவரது நேரம் வரும்வரை காத்திருக்க வேண்டியதும் அவசியம்.


Ø  பிரசங்கி 3:1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டுவானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.


Ø  பிரசங்கி 3:2    பிறக்க ஒரு காலமுண்டுஇறக்க ஒரு காலமுண்டுநட ஒரு காலமுண்டுநட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு;

Ø  சங்கீதம் 5:3    கர்த்தாவேகாலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகிகாத்திருப்பேன்.

Ø  சங்கீதம் 27:14   கர்த்தருக்குக் காத்திருஅவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்திடமனதாயிருந்துகர்த்தருக்கே  காத்திரு.

Ø  II இராஜாக்கள் 07:09    நாம் செய்கிறது நியாயமல்லஇந்நாள்               நற்செய்தி அறிவிக்கும் நாள்நாம் மவுனமாயிருந்துபொழுது விடியுமட்டும்  காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்;   இப்போதும்       நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள்

Ø  சாமுவேல் 10:   நான் உன்னிடத்தில் வந்துநீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும்ஏழுநாள் காத்திரு என்றான்.

Ø  லேவியராகமம் 23:4   சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படிநீங்கள்  குறித்தகாலத்தில் கூறவேண்டிய  கர்த்தரின்  பண்டிகைகளாவன:

Ø  எண்ணாகமம் 28:2    எனக்குச் சுகந்தவாசனையாகதகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும் குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும் படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள்

Ø  சங்கீதம் 104:27    ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக்  காத்திருக்கும்.

Ø  ஏசாயா 40:31     கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்துகழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;

Ø  ரோமர் 8:25     நாம் காணாததை நம்பினோமாகில்அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.

அது தவிர நீங்களும் நானும் நம்முடைய நேரத்தை ஒரு கட்டுப்பாடான ஒழுங்கு முறைக்குள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். தூங்கவும், உண்ணவும், வேலை செய்யவும், குடும்பத்தோடு நேரம் செலவு செய்யவும், ஊழியம் செய்யவும் நேரத்தை குறித்து வைக்க வேண்டும். பறந்து பறந்து ஊழியம் செஞ்சாலும் மனைவி பிள்ளைகளோட நேரம் செலவழிக்காட்டி அது ஆண்டவரால விரும்பப் படுற காரியமில்ல.

I தீமோத்தேயு 3:5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?

எனவே நமது ஆண்டவரைப்போல நாமும் எல்லா காரியங்களுக்கும் நேர ஒழுங்குகளை அமைத்து செயல்படுவோம்.

ஒழுங்கான நேர கட்டுப்பாட்டு முறை  ஒன்றை கடைப்பிடித்தால்       நாம் நேரத்தை வீணடிக்காமல் காரியங்களை நிறைவேற்றுகிறவர் களாயிருப்போம்.

மாற்கு-01:15. காலம் நிறைவேறிற்றுதேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று;     மனந்திரும்பி,     சுவிசேஷத்தை    விசுவாசியுங்கள்


---------Wrot-25/11/2012 type-28/12/2012- by Robert dinesh----------

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்