நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » கண்ணியமாக உடுத்துதலில் சுவிசேஷத்தைப் பிரதிபலித்தல்

கண்ணியமாக உடுத்துதலில் சுவிசேஷத்தைப் பிரதிபலித்தல்


(Validating the Gospel in Modesty)
டிரினிட்டி பாப்திஸ்து சபை, மான்ட்வெல், நியூஜெர்ஸி என்கிற இடத்தில் 24, பிப்ரவரி 2008ல் போதகர் அல்பர்ட் N. மார்டின் பிரசங்கித்த செய்தியின் சாராம்சம்


Website: http://www.trinitymontville.org

தமிழில் மொழிபெயர்ப்பு: விநோதாசுரேந்தர்


கடந்த 45 ஆண்டுகளாகநான் உங்கள் மத்தியில்போதகர்களுள் ஒருவராக நின்று பிரசங்கித்திருக்கிறேன்.
தனிப்பட்ட வாழ்க்கையிலும்சபை வாழ்க்கையிலும் சுவி சேஷத்தைப் பிரதிபலிக்கிறவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் மத்தியில் போதகப் பணியை செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இந்த பிரசங்க மேடையிலிருந்து பிரசங்கிக்கப் பட்டவைகளை வாழ்வில் கடைப் பிடிக்கிறவர்களாக நீங்கள் வாழ்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தனிப்பட்டவிதத்திலும்குழுவாகவும் நீங்கள் சுவிசேஷத்தை எப்படி பிரதிபலிக்கிறீர்கள் என்பதை சற்று விளக்க விரும்புகிறேன். இவ்வளவு ஆண்டுகளில் நமது சபைக்கு அநேக விருந்தினர்கள் வந்துசென்றிருக்கின்றனர். ஆராதனைக் கூட்டங்களுக்குப் பிறகு அவர்கள் மூப்பர்களாகிய எங்களில் சிலரிடம் வந்து, “பாஸ்டர்இந்த ஆராதனை முறை என்னை மிகவும் கவர்ந்தது. அங்கத்தினர்கள் எவ்வளவு அமைதியாக உள்ளே வந்துஇருதயத்தில் ஆயத்தமுள்ளவர்களாகமுழுமனதோடும் கடவுளை ஆராதி க்கிறார்கள் என்பதைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை” என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.



இந்த பிரசங்க மேடையில் பிரசங்கிக்கப்பட்டதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்துக் காட்டுகிறீர்கள். சுவிசேஷமானதுஉண்மையானஆர்வமுள்ள, உறுதியான ஆராதிப்பாளர்களை உருவாக்குகிறது. உங்களுடைய பிள்ளைகளைக் குறித்துகூட அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். சுவிசேஷ வட்டாரங்களில் பிரபலமாயிருந்த ஒரு பெண்மணிபல வருடங்களுக்கு முன்னதாககர்த்தருடைய நாளில் நம்மோடு ஆராதனையில் கலந்துகொள்ளும்படியாக வந்திருந்தார்கள். இங்கு பிள்ளைகள் நடந்து கொண்டவிதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இது எப்படி முடியும்?” என்று அவர்கள் கேட்டபோது, “இப்படி பிள்ளைகளை நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் வெகு சிறுபிராயத்திலேயே இதை ஆரம்பித்து விடுகிறோம். அதை உறுதியாகக் கடைப்பிடிக்கவும் செய்கிறோம்” என்ற பதில் அவர்களுக்கு கூறப்பட்டது.

பிரசங்க மேடையில் பிரசங்கிக்கப்படுகிற சுவிசேஷமானதுஆண்களையும் பெண்களையும் பக்தி நிரம்பிய குடும்பவாழ்க்கையை வாழச்செய்வதையும்,  பெற்றோரின் வழிநடத்துதலையும்பெற்றோரின் நிர்வாகம் குடும்பத்தில் நடைபெறச் செய்து வருவதையும் நீங்கள் உங்கள் வாழக்கையின் மூலமாக உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறீர்கள்.

போதகர்களுக்காக நடைபெறும் கூட்டங்களுக்கு மற்ற இடங்களிலிருந்து வருகிறவர்கள் உங்கள் வீடுகளில் தங்குகிறார்கள்.  சுவிசேஷ ஒழுக்கம் நிரம்பியதான உங்களில் சிலரின் வீடுகளில் அவர்கள் தங்கும்போதுஇதுவரைக்கும் இப்படிப்பட்ட ஒழுக்க முறையை நாங்கள் எங்கும் கண்டதில்லை என்று அவர்களில் சிலர் சிலாகித்தது உண்டு. முறையான குடும்ப ஆராதனையை அவர்கள் பார்த்ததில்லை. உங்கள் வீடுகளில் அதைப் பார்த்தபின் உறுதிபூண்டவர்களாகத் திரும்பிச் செல்லுகிறார்கள். ஏன்ஏனென்றால் கடவுளின் ஜனமாகிய நீங்கள்இந்த பிரசங்க மேடையில் பிரசங்கிக்கப்படுகிற சுவிசேஷப் பிரசங்கங்களை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருவதால்தான்.

இன்னுமொரு காரியத்திலும் நாம் இந்த சபையில் கேட்ட சுவிசேஷத்தை நமது  வாழ்க்கையில் பிரதிபலித்தவர்களாக வாழ்ந்து வந்திருக்கிறோம். உடை உடுத்துதலில்தீர்மானிக்கப்பட்ட விதத்திலான கண்ணியத்தையும்விசேஷித்த விதத்தில் பெண்மையின் நளினத்தையும் பெண்கள்   கடைப்பிடித்து  வந்திருக்கிறார்கள். இந்த சபையின் பெண்கள்தீர்மானிக்கப்பட்ட விதத்தில் கௌரவமாகவும்விசேஷித்த விதத்தில் பெண்மையை வெளிப்படுத்துகிறதுமான ஆடைகளை அணிவதையே வழக்கமாகக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

என்றாலும்கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில்இக்காரியங்களில் அநேக மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது. மூப்பர்களாகிய நாங்கள் இதை கவனித்து வந்திருக்கிறோம். இருதயத்தில் சோர்வுற்றவர்களாக அநேக ஆண்கள் எங்களை நாடி வந்திருக்கிறார்கள். கடவுளுக்கு முன்பாக பரிசுத்தத்தைக் காத்துக் கொள்வதில் போராடுபவர்களாகவும்உலகில் தாங்கள் காண்கிற காட்சிகளினால் தங்களுடைய கண்கள் இச்சைக்குட்பட்டு விடாதபடிக்கு போராடிக் கொண்டிருப்பவர்களாகவும் எங்களிடம் ஆலோசனைக்கு வருகிறார்கள்.

மேலும் நமது சபையின் பெண்களிலும்கூட சிலபேர் கௌரவமாக ஆடை அணிவதிலும்பெண்மையின் நளினத்தைக் காத்துக் கொள்வதிலும் தவறுகிறதைக் கண்டுநமது ஆண் அங்கத்தினர்களில் சிலபேர் வருத்தமும் கவலையும் தெரிவித்திருக்கிறார்கள். உங்களுடைய போதகர்களாகிய நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்து பலமணி நேரங்கள் விவாதித்துஜெபித்துசில கேள்விகளோடு போராடிக் கொண்டிருந்தோம்:

() இவ்விஷயத்தை எப்படி தெரிவிப்பது?
() யார் முன்னிலையில் இதை தெரிவிப்பது?
() நல்ல ரசனையையும் பரிசுத்த விவேகத்தையும் மீறிவிடாமல்இதைக்      குறித்து எவ்வளவு தூரத்திற்கு ஒளிவுமறைவில்லாமல் பேசக்கூடும்?
சில வாரங்களுக்கு முன்னதாக நாங்கள் இதுவிஷயமாக சபையாரை ஜெபிக்கும்படியாகக் கேட்டுக் கொண்டோம். அந்த ஜெபத்தின் பலனாகத்தான் நான் இன்று உங்கள் முன்னதாக பேசும்படியாக நிற்கிறேன் என்று நம்புகிறேன். எங்களுடைய போராட்டங்களுக்கு தேவன் பதில் அளித்தார். எப்படி இதை தெரிவிப்பதுயார் முன்னிலையில் தெரிவிப்பதுஎவ்வளவு தூரத்துக்கு ஒளிவுமறைவின்றி பேசுவது போன்றவைகளைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்நேரத்தில்இந்தவிதமாக தெரிவிக்க வேண்டும் என்பதை கடவுள்தான் திட்டம் பண்ணினார் என்பதை நான் தெளிந்த மனசாட்சியோடு உறுதியாக நம்புகிறேன்.

இதை ஆரம்பிப்பதற்கு முன்பாகநீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய மூன்று காரியங்களை நான் உங்களுக்கு  அறிமுகமாக சொல்ல விரும்புகிறேன். நான் கூறப்போவதற்கு இவை ஒரு நல்ல பின்னணியாகவும் இருக்கும். நான் முக்கியமான கருத்தை சொல்லிக் கொண்டு வரும்போது யாருக்காவது ஏதாவது தவறான அபிப்ராயம் ஏற்படுமானால் அதையும் இவைகள் தீர்த்து வைக்கும்.

முதலாவது அறிமுக காரியம்: நான் இப்போது சொல்லப் போகிற காரியம் அனைத்தையும் இந்த சபையை சேர்ந்த அங்கத்தினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் சொல்கிறேன். ஒருவேளை அடுத்த சிலமணி நேரங்களில்  கர்த்தர் வேறு யாராவது பார்வையாளர்களை இங்கு அழைத்துவர சித்தங் கொண்டிருக்கலாம். அப்படி வருகின்ற பெண்மணிகள் 21ஆம் நூற்றாண்டின் நவநாகரீக நங்கையர்களாக இருந்துபக்தியற்ற பெண்களைப் போல குட்டைப் பாவடையும்தொப்புள் தெரிகிறமாதிரியான மேற்சட்டையோ அல்லதுஉடலை இறுகக் கவ்விப் பிடித்தாற் போன்ற துணியிலான ஆடையோ உடுத்திக் கொண்டு வரலாம். உடனேநீங்கள் அவர்களை இந்த சபை கட்டிடத்திற்கு வெளியில் சந்தித்து, “பாருங்கள்நீங்கள் இப்படியெல்லாம் உடுத்திக் கொண்டு சுவிசேஷம் கேட்பதற்கு இந்த சபைக்கு வரக்கூடாது” என்று சொல்லக் கூடாது. அவர்களிடம் ஒரு சால்வையைக் கொடுத்து, “இதைக் கொண்டு உங்களை நன்றாக மூடிக் கொண்டு வாருங்கள். அப்போதுதான் நாங்கள் உங்களை வரவேற்போம்” என்று கூறக்கூடாது. அவர்கள் நிர்வாணமாக வராதபட்சத்தில்அவர்களை அவர்கள் வரும்வண்ணமாகவே வரவேற்றுகடவுளின் வசனத்திற்குக் கீழாகவும்சுவிசேஷத்திற்கு கீழாகவும் அமரச் செய்ய வேண்டும்.

அவர்கள் நம் மத்தியில் இருக்கும்போது சுற்றுமுற்றும் பார்ப்பார்கள். அவர்கள் கடவுளின் ஜனங்களாகிய உங்களோடு அளவளாவும்போதுநீங்கள் மிகவும் அன்போடும் உறுதியோடும் அவர்களோடு பேசுங்கள். கடவுளின் சாயலை அவர்களும் தரித்தவர்களாயிருப்பதால் அவர்களிடம் கரிசனையோடு பேசுங்கள். பாவிகள்தான்! ஆனாலும் கடவுளின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பவர்கள். அந்த மரியாதையையும் கௌரவத்தையும் அவர்களுக்குக் கொடுங்கள். அவர்கள் சீக்கிரமாகவே இப்படி நினைக்கத் தொடங்குவார்கள்: இந்த இடத்தில் பிரசங்கிக்கப்படுவதை நான் நம்பினேனாகில்இங்கு கற்றுக் கொடுக்கப்படும் காரியங்களை நானும் உணர்ந்து கொண்டேனென்றால்நானும் இங்கே இருக்கிற பெண்களைப் போல கௌரவமாகவும்பெண்மையின் நளினத்தோடும் உடை உடுத்தத் தொடங்குவேன் அல்லவா! என்பார்கள். வேறுவிதமாக சொல்வோமானால்கடவுள் சுவிசேஷத்தின் மூலமாகத் தங்களை எவ்விதமாக மாற்றுவார் என்பதை அவர்கள் காணும்படியாக செய்யுங்கள். இதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள். பாவிகள் இங்கு வருவதை மூப்பர்கள் விரும்ப மாட்டார்கள்” என்று ஒருபோதும் யாரிடமும் சொல்லாதீர்கள்.

இரண்டாவது அறிமுக காரியம்: நமது சபையின் அங்கத்தினர்களுக்கும்அவர்கள் குடும்பத்திற்கும் மூப்பர்களாகிய நாங்கள் கூறுவதுகவனமாகக் கேளுங்கள்இச்சபையின் பெண் அங்கத்தினர்கள் வேண்டுமென்றே இங்கிருக்கும் ஆண்களை மயக்கும் விதமாகவோ அல்லது அவர்கள் இச்சையைத் தூண்டத்தக்க வகையிலோ ஆடைகள் அணிந்து வருவதாக நாங்கள் கூறவில்லை. ஆண்பெண் வித்தியாசத்தை உடைகளின் மூலமாக பளிச்சென காண்பிக்கும் வகையிலான ஆடைகளை வேண்டுமென்றே அணிந்து வருவதாகவும் நாங்கள் சொல்லவில்லை. இந்த வார்த்தைகளை நாங்கள் மிகவும் கவனத்தோடு சிந்தித்துதான் எழுதினோம் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

இந்த வார்த்தைகளின்படியேசமூகமானது ஆடை சம்பந்தமான இவ்விரண்டு காரியங்களில் மிகவும் வழிவிலகிப் போய்விட்டது என்பதை நாங்கள் நம்புகிறோம். அதாவதுதீர்மானிக்கப்பட்டபடியான கௌரவமான ஆடை அணிதல்பெண்மையை வெளிப்படுத்திக் காட்டும் விதத்தில் அணிதல் ஆகிய காரியங்களில் வழிதவறிவிட்டது இந்த உலகம். உங்களிலும் சிலரை இது பற்றிக் கொண்டிருக்கிறது.  உலகத்தோடு ஒத்த வேஷம் தரியாதிருங்கள் என்று ரோம 12ல் எச்சரிக்கப்பட்டிருப்பதற்கு விரோதமாக நடந்து கொள்ளும்படியான தூண்டுதலை அடைந்திருக்கிறீர்கள். அதற்கு பதிலாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமடையுங்கள் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறீர்களே. ஆடை விஷயத்தில்உங்களில் சிலரை உலகமானது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது என்பது உங்களில் சிலரைப் பார்த்தால் நிருபணமாகிறது. ஆகவேஇன்றைக்கு நான் உங்கள் மத்தியிலே மிகவும் பாரமான இருதயத்தோடு பேச வந்திருக்கிறேன். இந்தக் காரியத்தில் உங்களில் ஆவியின் கனி ஏற்படும்படியாக தேவன்தாமே உங்கள் மனசாட்சியில் உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று கடவுளிடம் முழங்காற்படியிட்டு ஜெபித்து வந்திருக்கிறேன். சுவிசேஷத்தின் வல்லமை உங்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் என்கிற இந்த வாக்கியத்தை நான் ஆரம்ப முதற்கொண்டே சொல்லிக் கொண்டு வருவதை கவனியுங்கள். அதற்குத்தான் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. சுவிசேஷத்திற்கே ஆபத்து உருவாகியிருக்கிறது.

நம்மைச் சுற்றிலும் இருக்கிற ஆண்களைப் பாருங்கள். அவர்கள்மத் 5:28ஐ மிகவும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று“. எந்த மனிதனும் தனக்கு இச்சை உண்டாக்கக் கூடியதைப் பார்த்தாலே அவன் தனது பாவத்தினிமித்தமாகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவனாகிறான். அதை வசனம் தெளிவாகக் கூறுகிறது.

கிறிஸ்துவுக்குள்ளான சகோதரிகளே! பெண்களாகிய உங்களின் ஆழ்ந்த கவனத்திற்குக் கொண்டு வரவேண்டிய இன்னும் இரண்டு வேதபகுதிகள் இருக்கின்றன.

முதலாவது லூக் 17:1-2 “இடறல்கள் வராமல் போவது கூடாத காரியம்ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோஅவனுக்கு ஐயோ!” வேறுவிதமாக சொல்வோமானால்உலகம் எப்படி இருந்தாலும்மனிதனுடைய இருதயம் எப்படி இருந்தாலும்இடறல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். அவன் இந்த சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும்அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டுஅவன் சமுத்திரத்தில் தள்ளுண்டு போவது அவனுக்கு நலமாயிருக்கும்“. அவரை விசுவாசிப்பவர்களே இந்த சிறுவர் என அழைக்கப்படுகிறார்கள். என் அருமை சகோதரிகளேஇந்த வசனத்தை கவனமாகப் பார்க்கும்படியாக உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்களை யாரவதொரு ஆண்இச்சையோடு பார்த்தானென்றால் அவன் தன்னுடைய இருதயத்தில் விபச்சாரம் செய்தபடியால் அவன் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அதே சமயத்தில் உங்கள் ஆடைகளின் மூலமாக அவன் இந்த பாவத்தைச் செய்யும்படி நீங்கள் அவனைத் தூண்டியிருப்பதால் நீங்களும் கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

இரண்டாவது வசனம்: ரோம 14:13 – “இப்படியிருக்க நாம் இனிமேல் ஒருவரையருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாகஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்” இதில்தான் நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளான என் உடன் சகோதரரில் யாருக்காவது இடறலாக இருக்கும்படியாக நான் உடை அணிகிறேனா என உங்களையே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பெண்களேஇந்தக் கொள்கையை விடாமல் பற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய கபடற்ற எண்ணம்உங்கள் தோற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை நீக்கிவிடாது. உங்களுடைய எண்ணம் கபடற்றதாக இருக்கலாம். உங்களுடைய இருதயமானது பனியைப் போல வெகு சுத்தமாக இருக்கலாம். எந்த ஆணையும் கவருவது உங்களுடைய நோக்கமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால்கபடற்ற அந்த எண்ணம்உங்கள் தோற்றத்தினால் ஏற்படுத்தும் விளைவுகளை கட்டுப்படுத்தாதே. உங்கள் இருதயம் வெண்பனியாக இருக்கலாம். ஆனால்தொடை தெரியும்படியாக ஆடை அணிந்து நீங்கள் இங்கே உட்கார்ந்திருப்பதுஇன்னொரு ஆணின் இச்சையைத் தூண்டிவிடக்கூடியதாக இருக்கலாம் அல்லவா! டிரினிட்டி பாப்திஸ்து சபையின் அங்கத்தினர்களே! நான் இச்செய்தியை உங்களுக்குத்தான் பிரத்தியேகமாக கூறுகிறேன். எந்த ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய சக அங்கத்தினருக்கு முன் எந்தவிதத்திலும் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்”.

Mrs. Al Mohler  என்கிற பெண்மணி கூறுவதை கவனியுங்கள். இவருடைய கணவர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை ரேடியோவிலும்தனது இணையதளம் மூலமாகவும் கூறக்கூடிய வாய்ப்பை தேவன் அவருக்கு அளித்திருக்கிறார். அவருடைய மனைவி கூறுகிற இந்தக் காரியத்தை நீங்கள் கவனியுங்கள்:

உங்களை சுற்றிலும் இருக்கின்ற ஆண்களைக் குற்றப்படுத்தாதீர்கள். அவர்கள் துரதிருஷ்டசாலிகள். சாக்கடை போன்ற இந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் தங்கள் மனதை விடுவித்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று சுலபமாக சொல்லிவிடாதீர்கள். நீதி 30:20ல் ஒரு விபசார ஸ்திரீயைப் பற்றி கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். அப்படியே ஒரு விபசார ஸ்திரீயினுடைய  வழியும் இருக்கிறது. அவள் தின்றுதன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்”. பெண்களின் அரைகுறை ஆடை அலங்கார காட்சிகளினால்ஆண்கள் பரிசுத்தமாக இருப்பதற்கு எவ்வளவு போராட்டத்தை சந்திக்க வேண்டியதாயிருக்கிறது என்பதை பெண்களாகிய நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். அவர்களுடைய முகத்துக்கு முன்பாக நீங்கள் அகங்காரத்தோடு நடந்து கொள்ளாமலிருங்கள். அதுவும் சபையிலே வந்து நீங்கள் இப்படி நடந்து கொண்டீர்களானால் அது கடவுளுக்கு முன்பாக அறுவெறுப்பாயிருக்கும்”. – இதைக் கூறுவதும் ஒரு பெண்தான். அவர் தன் சபையிலுள்ள உடன் சகோதரிகளுக்கு இதை சொல்லுகிறார். ஆகவேஅறியாமையில் செய்தாலும் அது ஏற்படுத்தும் விளைவுகள் கொடியது என்பதை நினைவில் வையுங்கள்.

மூன்றாவது அறிமுக காரியம்: உங்களுடைய போதகர்கள் சார்பில் நான் பேசுகிறேன். சான்ஸ்கிஸ்மித்கார்ல்ஸன் ஆகிய அனைவரும் இந்த பாரத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சபையின் போதகர்களாகஇதைக் குறித்த பொறுப்பும் பாரமும் உடையவர்களாகஇந்த சபை அங்கத்தினர்களுக்கு மாத்திரமே இந்த செய்தியை நாங்கள் கொடுக்கிறோம். நீங்கள் ஒருவேளை வேறு சபைகளுக்குப் போக நேரிடலாம். நான் இங்குஇன்றுஇந்த சபைக்கு,  உடை அணிதல் சம்பந்தமாக கொடுக்கப் போகிற அறிவுரைகள் போல மற்ற சபைகளில் கடைப்பிடிக்கப்படாமல் இருக்கலாம். அது சம்பந்தமாக யாருக்கேனும் கேள்விகள் எழுமானால் நான் இயேசுக்கிறிஸ்துவுன் பாணியிலேயே பதில்கூற விரும்புகிறேன்: அதைப் பற்றி உனக்கென்னநீ என்னைப் பின்பற்றி வா”(யோவா 21). அந்தந்த சபையிலுள்ளவர்களைக் குறித்து கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பை அந்தந்த போதகர்களுக்கே நாம் விட்டுவிடுவோம். எங்களது எல்லைக்குட்பட்டவர்கள் சம்பந்தமாக உள்ள எங்களுடைய பொறுப்பைக் குறித்துதான் நாங்கள் அக்கறையுள்ளவர்களாக இருக்கிறோம்.

இத்தியானத்தில் நீங்கள் கேட்கப் போகிறவைகளில் உங்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து ஏதாவது இருக்குமானால்நீங்கள் உடனே உங்களைப் போலவே யோசிக்கிறவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்களிடம் வாருங்கள். உங்கள் வேதத்தோடு வாருங்கள். வேதத்தை மீறி நாங்கள் எதையேனும் கூறியிருந்தால்அதை வேதத்திலிருந்தே சுட்டிக் காண்பியுங்கள். நீங்கள் சுட்டிக் காண்பிப்பது வேதத்தின் பிரகாரம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தால்நாங்கள் இதே பிரசங்க மேடையில் வந்துஅந்த மாறுதல்களை பகிரங்கமாக அறிவிப்போம் அல்லது நாங்கள் கூறியதை வாபஸ் வாங்கிக் கொள்வோம்.

இந்த மூன்று காரியங்களைத்தான் அறிமுகமாக உங்களிடம் கூற விரும்பினேன். இப்போது தியானத்திற்கு வருவோம்.

தீர்மானிக்கப்பட்ட கண்ணியமான உடை

இந்த வார்த்தையின் மீது கவனத்தை செலுத்துவோம். தீர்மானிக்கப்பட்ட என்கிற இந்த வார்த்தையை அகராதியில் பார்த்தீர்களானால் அதற்கு, “நிச்சயிக்கப்பட்ட”. “தவறேயில்லாத”, “சந்தேகத்துக்கிடமில்லாத” என்கிற மாற்று அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய நாளில்கர்த்தருடைய வீட்டில் அணியும்படிக்குத் தீர்மானிக்கப்பட்டதான கௌரவமான உடையைக் குறித்து கவனமாக இருங்கள் என்று நான் உங்களுக்கு பிரசங்க மேடையிலிருந்து அழைப்பு விடுக்கிறேன். அந்தப் பெண்மணி மிகவும் கண்ணியமாக உடுத்தியிருக்கிறார்” என்பதைத் தவிர்த்துவேறு எந்த விதத்திலும் யாரும் உங்களுடைய ஆடையைக் குறித்து விமரிசிக்காத விதத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வேதாகமத்தைத் திறந்துநாம் எடுத்துக் கொண்டிருக்கிற இந்தக்  கருத்துக்கு வேதஆதாரம் என்ன என்பதைப் பார்ப்போம். 1தீமோ 3:14-15 – இதை முதலில் படிப்போம். பிற்பாடு நாம் 1தீமோ 2:9-10க்கு வரப்போகிறோம். ஏன் அவ்வசனத்தை முதலில் எடுத்துக் கொள்கிறோமென்றால்அதில் பவுல் தீமோத்தேயுவிடம் தான் எதற்காக இதை எழுதுகிறார் என்பதையும்என்ன எழுதுகிறார்எங்கிருந்து எழுதுகிறார் என்பதையும் விவரிக்கிறார்:

நான் உன்னிடத்திற்கு சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன்”. எபேசுவுக்கு விரைவாகத் திரும்பி வந்துவிட வேண்டுமென்று பவுல் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார். தாமதிப்பேனேயாகில் தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது”. சபைதான் சத்தியத்துக்குத் தூண்சபைதான் சத்தியத்துக்கு ஆதாரம். சபைதான் தேவனுடைய சத்தியத்தை அறிக்கையிடுகிறவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய சத்தியத்தின் மூலமாக சபையானது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். கடவுளின் கிருபையின் சுவிசேஷத்தை சபையானது அறிவிக்கவும் வேண்டும். அதே சமயத்தில் சபையானது தனது வாழ்க்கை முறைகளில் அந்த சுவிசேஷத்தை பிரதிபலித்துக் காட்டுவதாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவை இரண்டும் சபையில் காணப்பட வேண்டிய மிகவும் முக்கியமான அம்சங்கள்.  அப்படியிருந்தால்தான் சபையானது சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாய் விளங்கும்.

தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகை எவை என்று பவுல் கூறுகிறார்?  சபையில் காணப்பட்ட வேற்றுமையான உபதேசங்களை சரிப்படுத்தும்படிக்குபவுல் தீமோத்தேயுவை எபேசு பட்டணத்திலே விட்டு வந்திருக்கிறார். சபை சம்பந்தமான ஒழுங்கு முறைகளைக் குறித்து அவர் இரண்டாம் அதிகாரம் முதல் வசனத்திலிருந்து சொல்லத் தொடங்குகிறார். நான் பிரதானமாய் சொல்லுகிற புத்தியென்னவெனில்எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண வேண்டும்” பவுலின் முதலாவது கவலைஜெபத்தைக் குறித்தது. முதல் வசனங்கள் வரை அவர் அதைக் குறித்து பகிர்ந்து கொள்ளுகிறார். 8ஆம் வசனத்தில் அவர்சபையிலுள்ள ஆண் அங்கத்தினர்கள் அந்தவிதமான கரிசனை உடையவர்களாய் ஜெபத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அன்றியும் புருஷர்கள் கோபமும் தர்க்கமும் இல்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்திஎல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ண வேண்டுமென்று விரும்புகிறேன்”. இதற்குப் பின்னால் அவர் பெண்களை நோக்கி சில காரியங்களை 9-15 வரையுள்ள வசனங்களில் சொல்லுகிறார். அதை இப்போதைக்கு சற்றுத் தள்ளி வைத்துவிட்டுமேற்கொண்டு இருப்பவைகளைப் பார்த்துவிட்டுஇதற்கு வருவோம்.

3ஆம் அதிகாரத்தில் அவர் கண்காணிகள்உதவிக்காரர் ஆகியோருக்கு இருக்க  வேண்டிய வேதாகம தகுதிகளைப் பற்றி குறிப்பிடுகிறார். இப்படி அவர்களின் தகுதியை சொல்லிக் கொண்டு வருகையில்தேவனுடைய வீட்டிலே அவருடைய ஜனங்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை உறுதிப்படக் கூறுகிறார். தாமதிப்பேனாகில் தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன். நடக்க வேண்டிய” என்பதில் ஒரு கட்டாய தொனி ஒலிக்கிறது. முடிந்தால் நடக்கலாம் என்பதுபோல் அல்லாமல் நடந்தே ஆகவேண்டும் என்று உறுதிப்பட இருக்கும்படியாக மூல மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீமோத்தேயுவேஎபேசு சபையில் இவையெல்லாம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதற்கு நீதான் பொறுப்பு என்கிறார் பவுல். உங்களை சுற்றியுள்ள உலகத்திற்காக ஏறெடுக்கப்படுகின்ற சுவிசேஷம் ஆளுகின்ற ஜெபங்களோடும்வேதாகமம் குறிப்பிடுகின்ற தகுதிகளோடுகூடிய கண்காணிகள் உதவிக்காரர்கள் கொண்டவர்களாகவும் சபை நடக்க வேண்டியது அவசியம் என்று அவர் சொல்லிக் கொண்டு வருகின்ற பின்னணியிலே 9ஆம் வசனத்தைப் படியுங்கள். பெண்களைக் குறித்தும் சில காரியங்களில் இவ்விதமாகவே நான் விரும்புகிறேன் என்கிறார். இவ்விதமாகவேபெண்களும் தங்களை தகுதியான வஸ்திரத்தினால் அலங்கரிக்கவும் நான் விரும்புகிறேன் என்கிற தொனி அங்கு ஒலிக்கிறது.
ஆங்கில வேதாகமத்தின் நான்குவிதமான மொழி பெயர்ப்புகளில் இவ்வசனத்தை படிப்போம்.

NIV  - பெண்கள் கண்ணியமாகவும்மரியாதைக்குகந்த விதத்திலும் ஆடை அணிய வேண்டுமென நான் விரும்புகிறேன்

ESV – அதேவிதமாகபெண்களும்மதிப்பளிக்கும் விதத்திலான ஆடைகளை கண்ணியத்தோடும்அடக்கத்தோடும் அணிய வேண்டும்

New King James Version – அதேவிதமாக பெண்களும் கௌரவமான உடைகளால் தங்களை கண்ணியத்தோடும் இயல்பாகவும் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

New American Standard Bible – பெண்கள் சரியான உடைகளைஅடக்கத்தோடும்ஜாக்கிரதையோடும் அணிந்து கொள்ளவேண்டும்.

இந்த வார்த்தைகள் மூலமொழியில் என்ன அர்த்தத்தைக் கொடுக்கின்றது என்பதைக் குறித்து ஜான் ஸ்டாட்(John Stott) என்பவர் தமது விளக்கவுரையில் எழுதியிருப்பதின் சுருக்கத்தை உங்களுக்குத் தருகிறேன்: பெண்கள் கௌரவமாகவும்கண்ணியத்தோடும்ஒழுக்கத்தோடும் உடை அணிந்திருக்க வேண்டும் என்பதை பவுல் முதலாவதாகக் குறிப்பிடுகிறார். இந்த வார்த்தைகளிலுள்ள அர்த்தங்களை இதுதான் என்று ஆணித்தரமாகக் கூற முடியாது. ஆகவேதான் பலவிதமான மொழிபெயர்ப்புகளில் வெவ்வேறான வார்த்தைகளால் இவற்றை விளக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் தரும் பொதுவான கருத்து தெளிவாக இருக்கிறது. பெண்கள் உடை அணிதலில் ஜாக்கிரதையைக் கடைப்பிடிக்க வேண்டும். அது பிறரைக் கவர்ந்திழுக்கக் கூடியதாகவோஅல்லது மயக்கக் கூடியதாகவோ இருக்கக் கூடாது. இதுவே பெண்களின் உடை சம்பந்தமான முழுமையான கருத்தாகும்”.
அடுத்து வரும் வசனங்களில் பவுல்சிகை அலங்காரம் முதலானவைகளைக் குறித்தும் கூறுவதைக் காண்கிறோம். பவுல் முக்கியமாக எதைக் குறிப்பிட விரும்புகிறாரென்றால்பெண்கள்  கவர்ச்சிகரமாகவோமயக்குகிறவர்களாகவோவெளிப்பகட்டைக் காண்பிக்கிறவர்களாகவோ தங்களை வெளிப்படுத்தக் கூடாது என்கிறார். தலைமுடியை ஒரு விதமாக கவர்ச்சிகரமாக அலங்கரித்துபகட்டான ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு பெண் கர்த்தருடைய நாளில் கர்த்தருடைய வீட்டில் வருவாளென்றால்அங்கு கர்த்தரை ஆராதிக்க வந்திருந்த அனைவரின் பார்வையும் அவள் புறம் திரும்பும். கர்த்தரை ஆராதிக்க வந்தவர்கள்அவள் அழகை ஆராதிப்பவர்களாக காணப்படுவார்கள்.

இந்த வசனங்களுக்கு விளக்கவுரை எழுதிய ஸ்காட் மேலும் குறிப்பிடுவதாவது: கிறிஸ்தவப் பெண்கள்அவர்கள் எந்தக் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்அவரவர் கலாச்சாரத்திற்குட்பட்டதான எளிமையான கண்ணியமான ஆடைகளைத் தேர்ந்தெடுத்துதலை அலங்காரத்திலும் பிறர் கவனத்தை ஈர்க்கும்படியாக இல்லாமல் அலங்கரித்துக் கொண்டுநகைகள் விஷயத்திலும் அதிக விலையேறப்பெற்ற நகைகளால் தங்களை அலங்கரியாமல்ஆடம்பரமாக இல்லாமல்மரியாதைக்குரியவர்களாகவும்தெளிந்த புத்தியுடையவர்களாகவும்மாயையைப் பின்பற்றாதவர்களாகவும்கவர்ச்சிகரமாகத் தோன்றாமலும் பெண்கள் நடந்து கொள்வதையே கிறிஸ்தவப் பெண்களின் குணலட்சணமாக பவுல் தெரிவிக்கிறார்

மூப்பர்களாகிய நாங்கள் உங்கள் முன் நின்று கௌரவமாக உடை அணிதலைக் குறித்து உங்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருக்கும் நாங்களும் எங்களுக்குரிய கடமைகளில் தவறிவிட கூடாது. உலகத்துக்காகவும்எல்லா மனுஷருக்காகவும் செய்ய வேண்டிய ஜெபங்களிலும்சபையில் செய்ய வேண்டிய ஜெபங்களிலும் நாங்கள் அக்கறை காண்பிக்காமல்ஜெபக்கூட்டங்களிலும். ஆராதனையிலும் ஜெபிப்பதை விட்டுவிட்டோமானால் எங்களைக் குறித்து நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “நான் பிரதானமாக சொல்லுகிற புத்தியென்னவெனில்எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” என்று வேதாகமம் எங்களுக்கு புத்தி கூறும்போது அதை செய்யாமல் இருந்தால் நீங்கள் எங்களைக் குறித்து என்ன நினைப்பீர்கள்மூன்றாம் அதிகாரத்தில் வேதாகமம் வகுத்திருக்கின்ற மூப்பர் கண்காணிகளுடைய தகுதிகளை நாங்கள் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்ஆண்களும் பெண்களும் கலந்து கூடி வந்திருக்கின்ற இடத்திலே பெண்கள் போதிக்கக் கூடாது என்பதையும்ஆண்களே தலைமை வகிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் விட்டுக் கொடுத்துவிட்டுசில சபைகளில் இருப்பது போன்று பெண் மூப்பர்களையும் போதகிகளையும் ஏற்படுத்த அனுமதித்தோமானால் எங்களைக் குறித்து நீங்கள் என்ன எண்ணம் கொள்வீர்கள்இயேசுவின் நாமத்தினாலே நான் உங்களைக் கேட்கிறேன். பல சபைகளில் இது மாதிரி நடந்து கொண்டிருக்கிறதே. இவைகளில் நாங்கள் தவறினால் நீங்கள் என்ன செய்வீர்கள்அதுபோலவேதேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வழிவகையாக பவுல் கூறிக் கொண்டு வரும் புத்திமதிகளுக்கு இடையேதான் பெண்களின் உடைஅலங்காரம் பற்றிய புத்திமதியையும் அவர் கூறியிருக்கிறார். ஆகவே அதைக் குறித்தும் வலியுறுத்துவதை நாங்கள் தவிர்க்கப் போவதில்லை. நாங்கள் கூறுவது உங்கள் மனசாட்சியைத் தொடுகிறதாதொடும் என்று நம்புகிறேன். நாங்கள் கூறுகிற புத்திமதிக்கு வேதந்தான் ஆதாரம். இவைகளை சொல்வதைத் தவிர்த்து எங்களுக்கு வேறு வழியில்லை. ஆகவேதான் இவைகளைக் கூற வேண்டியதாக இருக்கிறது.

அடுத்தபடியாக நான் சொல்ல விரும்புவதுஆண்களைக் கவர்ச்சிக்கக் கூடிய 10 காரியங்கள். இவைகள் ஆணை அசுத்த சிந்தனைக்கு இட்டுச்சென்றுவிடும். இவைகளை என் உடன் மூப்பரோடு கலந்து ஆலோசித்தே உங்கள் முன்பாக வைக்கிறேன். ஆணின் இச்சையைத் தூண்டிவிடக்கூடிய 10 காரியங்களை நான் ஒரு காந்தமாக உருவகப்படுத்துகிறேன். பெண்களின் ஆடையில் இருக்கக் கூடிய 10விதமான காந்தங்கள் இவை. பெண்களுடைய உடலை நோக்கி ஆணின் கவனத்தைத் திருப்பக்கூடியவை.

முதலாவதாகபெண்களின் ஸ்கர்ட்டிலே காணப்படுகின்றதான பெரிய பிளவு(lengthy slits) அல்லது குட்டைப் பாவடை! நடக்கும்போதுகால்களும்தொடையும் வசீகரமாக வெளியில் தெரியும் வண்ணமாக அணிகிற உடை. அப்படி கவர்ச்சிகரமாகத் தெரிகிற கால்களையும் தொடையையும் பார்த்து ஆணின் மனம் சலனப்பட்டுஅவன் உள்ளத்தில் பாவம் செய்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறான். பிள்ளைகளேஉங்கள் தகப்பன்மார் இதை உங்களுக்கு சொல்லியிருக்காவிட்டால்நான் சொல்லுகிறேன் கேளுங்கள்இது உண்மை! கணவன்களேநீங்கள் இதை உங்கள் மனைவிகளுக்கு சொல்லியிருக்காவிட்டால் உங்களுக்குத்தான் கேவலம். இது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். கால்களும்தொடைகளும் வெளியே தெரியுமாறு உடை அணிதல் ஆண்களின் கண்களைக் கவர்ந்திழுக்கும் காந்தமாகும்.

இரண்டாவதாகஇடையையும் பின்பிறத்தையும் கவ்விப் பிடிக்குமாறு பெண்கள் அணியும் பேன்ட்ஜீன்ஸ்ஸ்கர்ட் போன்ற ஆடைகள். நான் என்ன சொல்கிறேன் என்பது விளங்குகிறதாபாருங்கள்நான் இப்போது சட்டை அணிந்திருக்கிறேன். இது எங்காவது என் உடலை இறுகக் கவ்விப் பிடித்திருக்கிறதாஇறுக்கமான கால்சட்டைஜீன்ஸ்ஸ்கர்ட் போன்றவை பெண்களின் பின்னழகை மிகைப்படுத்திக் காண்பித்துதொடை வரைக்கும் சென்று கால்களின் வனப்பையும் காண்பிப்பதாக இருக்கிறது. பிறரை தன் வசப்படுத்துவதற்காக கவர்ச்சி காண்பிக்கும் பெண்களின் விளம்பரப் படங்களைப் பார்த்தீர்களானால்அவர்களின் உடை எப்போதுமே அவர்கள் உடலை இறுகக் கவ்வியதாகவும்முன்னழகு பின்னழகு யாவையும் எடுத்துக் காண்பிப்பதாகவும் இருப்பதை காண்பீர்கள். அது ஜீன்ஸாக இருந்தாலும் சரிபேன்ட்ஸ்கர்ட்மினிஸ்கர்ட்மேற்சட்டை எதுவாக இருந்தாலும்இறுகக் கவ்வியதாகவே அணிவார்கள். ஏனென்றால் அவர்கள் தம் உடலை விற்கிறவர்கள். அழகைக் காண்பித்து பணம் சம்பாதிக்கிறவர்கள். ஆண் அதில் விழவேண்டுமென எதிர்பார்ப்பவர்கள். அதுவும் ஆணின் கண்ணைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக இருக்கிறது.

மூன்றாவதாகமார்பகங்களை இறுகப் பிடிக்குமாறு அணியும் மேற்சட்டை! இதைக் காட்டிலும் வேறு எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் உடலிலே நீங்கள் சற்றுத் தளர்ச்சியாக உடை அணிய வேண்டியது மேற்சட்டையைத்தான். ஆனால் மார்பகங்கள் எடுப்பாகத் தெரியுமாறு கவர்ச்சிகரமாக உடை அணிதல் ஆண்களின் கண்களைக் கவர்ந்திழுக்கும் காந்தமாகிவிடும். பெண்களாகிய நீங்கள் ஆடை அணியும் விதத்தினால் ஆண்கள் உடற்கூறு பற்றின பாடத்தைக் கற்றுக் கொள்கிறவர்களாகிவிடக் கூடாது. இதுவும் ஆணைக் கவரும் காந்தம்!

நான்காவதாகமேற்சட்டையில் ஒன்றிரண்டு பட்டன்களைப் போடாமல் அலட்சியமாக அணிந்து வருதல். நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் அணியும் மேற்சட்டையில் பட்டன்கள் அதன் காலரில் தொடங்கி கீழ் வரைக்கும் வருகிறதல்லவா. அவைகளில் மேலே இரண்டு மூன்று பட்டன்களைப் போடாமல் விட்டுஉடலின் கவர்ச்சிகரமான பகுதிகளைப் பட்டும் படாமலும் வெளியில் தெரியுமாறு அணிந்து வருவது. இது ஆண்களை இம்சிக்கிற விஷயம். இதோஇங்கே ஒரு இளம்பெண்ணைப் பார்க்கிறேன். தன் மேற்சட்டையின் அனைத்து பட்டன்களையும் சரியாக போட்டுகண்ணியமாக அமர்ந்திருப்பது ஆணுக்கு முன்பாக இடறலைப் போடாமல் இருப்பதை விளக்குகிறது. மினப்போலிஸ்(Minneapolis) என்கிற இடத்தில் ஊழியம் செய்துவருகின்ற ஜான் பைப்பர் இவ்விஷயத்தைக் குறித்து மிகுந்த பாரமுடையவராக இருக்கிறார். அவர் சமீபத்தில் தமது இணையதளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்: பெண்கள்கண்ணியமாக உடை அணிதலில் சபை இன்று அக்கறை காண்பிக்கிறதாஎன்பதே அந்தக் கட்டுரை. அவர் கூறுவதை கவனியுங்கள்: பெண்கள் அணியும் ஆடையின் கழுத்துப் பகுதி கவலைப்பட வேண்டிய விஷயமாயிருக்கிறது. எங்கே பார்த்தாலும்விமானதளத்திலோகடைகளிலோசபையிலோ பார்த்தாலும் பெண்கள் அணியும் ஜாக்கெட்டின் கழுத்துப்பகுதி மிகவும் இறக்கமாக இருக்கிறது. உலகிலுள்ள ஆடை வடிவமைப்பாளர்கள் எல்லா பெண்களிடமும் உங்கள் ஜாக்கெட்டின் முன்புற திறப்பு எவ்வளவு இறக்கமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அழகு என்று சொல்லிவிட்டார்கள் போலும். இறக்கமான ஜாக்கெட்பட்டன் இல்லாத ஜாக்கெட்உள்ளே முன்கழுத்துப் பகுதி மிகவும் இறங்கியிருக்கும்படியாக ஒரு சட்டையை அணிந்து அதன் மேலே பட்டன் இல்லாத இன்னொரு சட்டையைப் போடுதல்உடலை இறுகக் கவ்விப் பிடித்தாற்போன்ற ஜாக்கெட் அல்லது பனியன் அணிதல். பெண்களே நீங்கள் சபையின் சூழ்நிலையில் இருந்தால்கூட பல நேரங்களில் நீங்கள் முன்புறமாக குனிந்து சில வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தையை குனிந்து தூக்க நேரிடலாம். அல்லது கீழே விழுந்த எதையேனும் எடுக்க நேரிடலாம். நீங்கள் வீட்டை விட்டுக் கிளம்பி சபைக்கு வருமுன்னதாகஉங்கள் வீட்டிலேயே கண்ணாடி முன்னால் நின்று குனிந்து பார்த்துவிட்டு வாருங்கள். நீங்கள் நின்று கொண்டிருக்கும்போது உங்கள் உடலை சரியாக மூடியிருப்பது போலத் தோன்றும் உடைஒருவேளை நீங்கள் குனிகையில் போதுமான விதத்தில் உங்கள் உடலை மூடாமல் இருக்கலாம்”. இவ்வாறாக அவர் எழுதியிருக்கிறார்.

ஐந்தாவதாககையில்லாத ஆடை! அக்குள் பக்கம் மிகப் பெரிய இடைவெளியோடு உருவாக்கப்பட்டவை! கையில்லாத ஆடையில் தோள்கள் வெளிப்படையாகத் தெரியும். அக்குள் புறம் பெரும் இடைவெளி இருக்குமானால்அது உள்ளே அணிந்திருக்கிற ஆடைகளை வெளிப்படுத்திஆணின் சிந்தனைகளைத் தவறான கோணத்தில் திருப்பிவிடும். இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து சபைக்கு வருதல் மரியாதைக் குறைச்சலாகும். உள்ளாடைகள் தெரியாத வகையில் நான் அணிந்து கொள்வேன் என்று நீங்கள் சொல்வீர்களானால்அது கடவுளுக்கு முன்பாக உங்களுடைய உரிமை!

ஆறாவதாகஇடுப்புக்கு மிகவும் கீழே அணியும் ஸ்கர்ட்பேன்ட் போன்ற உடைகள். சினிமா நட்சத்திரங்கள் இந்த மாதிரியான ஆடைகளை இளைய சமுதாயத்தினரின் மத்தியில் பரப்பி விட்டார்கள். ஸ்கர்ட்இடுப்புக்கு மிகவும் கீழேஇடுப்பெலும்பில் தொங்கிக் கொண்டிருப்பது போல அமைந்துள்ளது. ஜீன்ஸ் பேன்ட்கள்உள்ளே அணியும் ஜட்டியின் விளிம்பு தெரியும் வகையில் அணியப்படுகிறது. கிறிஸ்தவப் பெண்களிலுங்கூட அநேகர் அந்த மாதிரியான ஆடை அணிவதை நான் பார்த்திருக்கிறேன். இடுப்புதொப்புள்வயிறு பகுதிகளைக் காண்பித்துக் கொண்டு உடையணிதல் கண்ணியமான உடைகள் அல்ல.

ஏழாவதாகஉள்ளாடைகள் வெளியே பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய துணிகளால் ஆடை அணிதல். உள்ளாடைகள் வெளியில் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணியப்பட வேண்டும்.

எட்டாவதாகமிகவும் குட்டையான ஆடைகளை அணிதல். அவ்வளவு குட்டையாக நீங்கள் ஸ்கர்ட்டிரவுசர்ஸ் போன்றவை அணிந்தால்நீங்கள் உட்காரும்போது அவை உங்கள் உடலை சரிவர மூடுவதில்லை. பொதுஇடங்களில் நீங்கள் சுறுசுறுப்பாக ஏதோவொரு வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில்உங்கள் உடலைவிட்டு விலகும் ஆடையின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகும். ஆனால்மற்றவர்கள் அங்கு கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். இதுவும் ஆண்களின் கவனத்தைக் கவருகிற காரியங்களுள் ஒன்று. இப்படிப்பட்ட ஆடைகள் கௌரவமானவை அல்லகண்ணியமானவை அல்ல. இவைகள் விரசமான ஆடைகள். திருமதி. மோக்லர் சொல்வதை மீண்டும் கவனியுங்கள்: நீங்கள் சபைக்கு வரும்போது இவ்வளவு குட்டையானஇறுக்கமான ஆடைகளை அணிந்து வந்தீர்களானால்சபை ஆராதனை முடிவதற்கு முன்பாக உங்களைச் சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களுக்கு உங்களுடைய உள்ளாடைகள் என்ன நிறத்திலுள்ளது என்பது தெரியாமற் போகாது. அப்படி தெரிவது அவர்களுடைய தவறு அல்ல. ஆராதனையில் நீங்கள் உட்காரும்போதும்எழுந்திருக்கும்போதும்குனியும் போதும் நீங்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறவர்கள்போலக் காணப்படுவீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவ்வளவு குட்டையானஇறுக்கமான உடையை நீங்கள் சரிப்படுத்திக் கொள்ள செய்யும் முயற்சி நடனமாடுவது போலத்தான் தோற்றமளிக்கும்”. இந்தப் பெண்மணி கூறுவதிலிருக்கும் நகைச்சுவை இரசிக்கத்தக்கதாக இருக்கிறது. ஆம்! நீங்கள் சபையில் நடனந்தான் ஆடிக் கொண்டிருப்பீர்கள்! பெண்களேஉடை விஷயத்தில் அவ்வளவு அலட்சியாக இருந்துவிடாதீர்கள். பெண்கள் இன்னவிதமாக உடை அணியவேண்டுமென நான் விரும்புகிறேன் என்று பவுல் கூறுகிற வேதாகம வரையறைக்குள் இவ்வித உடைகள் அடங்குவதில்லை.

நாகரீகம் என்கிற பெயரில் உடலைக் கவ்வுகின்ற விதத்தில் அணிகிற ஆடைகள் கண்ணியமானவை அல்ல. பின்புறம்வயிறுஇடுப்புதொடை ஆகிய பகுதிகளை இறுகக் கவ்விப்பிடித்தாற்போன்று உருவாக்கப்படும் ஆடைகள்பெண்களின் உடலின் அப்பாகங்களில் ஆண்களின் கண்கள் பாயவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு அமைத்தாற் போல இருக்கிறது. இதில்தான் டிரினிட்டி பாப்திஸ்து சபையின் பெண்களில் சிலர் தவறுகிறீர்கள் என்பதை மிகவும் பாரத்தோடு நான் கூறுகிறேன். அது என்னவிதமான துணியோ எனக்குத் தெரியவில்லை. நான் அதைக் குறித்து கேட்டதுமில்லை. அப்படியே உடலோடு ஒட்டி இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், “பெண்கள் தகுந்த வஸ்திரத்தினால் தங்களை அலங்கரித்துக் கொள்வதை நான் விரும்புகிறேன்” என்று சொல்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

பத்தாவதாகமேற்சட்டையை குட்டையாகவும்கீழே அணியும் ஸ்கர்ட் அல்லது பேன்ட் போன்றவற்றை இடுப்பு எலும்புகளின் மேல் இருப்பது போலவும் உடை அணிந்தால் உங்கள் வயிற்றுப் பகுதி காட்சிப் பொருளாகிறது. முதுகைக் காட்டுவது போன்ற உடைகள்வயிற்று பாகத்தை காண்பிப்பது போன்ற உடைகள் இவை யாவும் நீங்கள் குனிந்து நிமிருகையில் உள்ளாடைகளை வெளிப்படுத்தும்விதமாக இருப்பதை கவனியுங்கள். நமது சபையிலேயே நான் அந்த மாதிரியாக உடையணிந்து வருகின்ற பெண்களைப் பார்த்து வெட்கியிருக்கிறேன். நல்ல வேளையாக நான் இச்சைக்குள்ளாகாமல்இப்படிப்பட்டவைகளையும் டிரினிட்டி பாப்திஸ்து சபை பொறுத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறதே என்று அங்கலாய்த்திருக்கிறேன். இங்குள்ள பக்தியுள்ள இளம் வாலிபப்பிள்ளைகள் இச்சைக்குள்ளாகி விடாமல் இருப்பதற்காக எவ்வளவு போராட வேண்டியதாயிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமாசில காரியங்களை அவர்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்டுஆலோசனை கேட்க வரும்போது அவர்கள் நிலை எவ்வளவு பரிதாபகரமாயிருக்கிறது என்பது விளங்குகிறது.  பெண்கள் வேண்டுமென்றே இங்கு அப்படியாக உடுத்தி வந்துஆண்களைக் கவர்ந்துஇச்சைக்கு ஆளாக்குகிறார்கள் என்று நான் குற்றஞ்சாட்டுகிறேனாஇல்லைசகோதரிகளே! நீங்கள் ஒருவேளை அறியாமல் அவ்விதமாக உடுத்தி வந்திருக்கலாம். ஆனால் உங்களுடைய அறியாத்தனம்அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒருபோதும் இல்லாமற் போகச் செய்வதில்லையே.

இப்போது நான் ஒரு காரியம் செய்யப் போகிறேன். இங்கு அமர்ந்திருக்கும் ஆண்களையும்வாலிபர்களையும் கேட்கப் போகிறேன். நான் இதுவரை சொல்லிக் கொண்டு வந்த 10 காந்தசக்திகளில் எதுவாவது உங்களுடைய கவனத்தைக் கவர்ந்துஉங்கள் இருதயத்தை பரிசுத்தக் குலைச்சலாக்கினதாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களாஉங்கள் கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். சகோதரிகளேஇளம் பெண்களேநீங்கள் திரும்பிப் பாருங்கள். எத்தனை பேர் தங்கள் கைகளை உயர்த்தியிருக்கிறார்கள்! பாருங்கள்கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரர்களாகிய இவர்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு போராட வேண்டியதாயிருந்திருக்கிறது! உங்களுடைய உரிமையை எடுத்துப்போடும்படியாககுறுகிய எண்ணம் படைத்த வயதான மனிதன் அல்ல நான். உங்களுடைய மூப்பராக நான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். கடவுளின் சந்நிதானத்திலே வருகின்ற பெண்கள் கடவுளின் நாமம் மகிமைப்படும்படியாகவும்தங்களுடைய சகோதரரின் நன்மையை கருத்தில் கொண்டவர்களாக கண்ணியமான உடை அணிந்தவர்களாக இங்கு வரவேண்டும் என்பதற்காக நான் இங்கு நிற்கிறேன். ஆகவேதான் நான் தகுதியான வஸ்திரம் அணிதலைக் குறித்த வேதாகம கட்டளைகளை உங்களுக்கு எடுத்துக் கூறினேன். அடுத்தபடியாகஆண்களின் கண்களைக் கவரக்கூடிய 10 காரியங்களை உங்களுக்கு விவரித்தேன். இதைக் கேட்ட பெண்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இதோஅதற்கான புத்திமதியையும் கூறுகிறேன்.  முதலாவதாக நீங்கள் மனந்திரும்புங்கள். அறிந்தோ அறியாமலோ நீங்கள் உலகத்தாரின் வழிகளில் போய்உங்கள் சகோதரருக்கு இடறலாக இருந்துவிட்டதைக் குறித்து மனந்திரும்புங்கள். கடவுளிடம் மன்னிப்பை வேண்டுங்கள். இயேசுக்கிறிஸ்துவிடம் போய், “கர்த்தாவேஉமது திருரத்தத்தினால் என் பாவங்களைக் கழுவும். எனக்கு வசதியாக இருக்கிறதென்று நான் நினைத்துக் கொண்டிருந்த என்னுடைய பேன்டஎன் சகோதரன் பாவம் செய்வதற்கு தூண்டுதலாயிருந்திருக்கிறது என்பதை நான் அறியாமல் இருந்திருக்கிறேன். கர்த்தாவேஎன்னை மன்னியும்”. கேளுங்கள்பெண்களேஉங்களில் அநேகம் பேருக்கு இன்றைக்கு கடவுளின் முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வேண்டிய வேலை இருக்கிறது. கர்த்தாவேநான் மிகவும் இறுக்கமாக அணிந்து கொண்டிருந்த என்னுடைய மேற்சட்டையின் காரணமாக பலர் இடறலடைய நான் காரணமாக இருந்திருக்கிறேன். ஆண்டவராகிய இயேசுவேஎன்னை மன்னித்துபரிசுத்தப்படுத்தும். உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே என்னைக் கழுவியருளும்” என்று ஜெபித்து மன்றாடுங்கள். மனந்திரும்புங்கள். விசுவாசமுடையவர்களாக இயேசுக்கிறிஸ்துவிடம் செல்லுங்கள். அவருடைய ரத்தம் உங்களை சுத்திகரிப்பதை உணருங்கள். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்”. “பின்பு மனந்திரும்புதலுக்கேற்ற கனியைக் கொடுங்கள்”. உங்களுடைய அலமாரிக்குச் செல்லுங்கள். மேற்கூறிய 10 விதங்களில் ஆண்களைக் கவர்ச்சிக்கக்கூடிய உடைகள் எது உங்கள் அலமாரியில் இருந்தாலும்அவைகளைத் தூக்கியெறிந்துவிடுங்கள். பாஸ்டர்அப்படியானால் என்னிடம் மீதியாக ஒரேயரு உடை மாத்திரமே இருக்கும். இனி வரும் ஐந்து வாரங்களுக்கும் நான் அதையேதான் திரும்பத் திரும்ப உடுத்திக் கொண்டு வர வேண்டியதாயிருக்கும்” என்று சொல்வீர்களானால், “அல்லேலூயா! கண்ணியமான உடையே முக்கியம். அதற்காக நாம் மகிழுவோம்” என்று நான் ஆனந்திப்பேன். யாராவது உங்களிடம் வந்து இதைத் தவிர உன்னிடம் வேறு உடையே இல்லையா என்று கேட்டார்களானால்அப்படிப்பட்டவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம். உண்மையாகத்தான் கூறுகிறேன்பெண்களேஉங்களுடைய  மனந்திரும்புதலை செயலில் காட்டுங்கள்.

இரண்டாவதாகஇந்த விஷயத்தைக் குறித்து நல்ல மனசாட்சியை அடையும்படிக்கு கடவுளிடம் ஜெபித்து பிரயாசைப்படுங்கள். நான் மீண்டுமாக உங்களை கைகளை உயர்த்திக் காட்டும்படி கூறினேனாகில் நூற்றுக்கு 99 சதவீத பெண்கள்ஆம்இந்தக் காரியங்களைக் குறித்து நாங்கள் இதுவரை நினைத்துப் பார்க்கவில்லைஇது எங்களுக்குத் தோன்றவே இல்லைஇப்படியாக இருக்கும் என்று நாங்கள் எண்ணிப்பார்த்ததில்லை என்றுதான் கூறுவீர்கள் என்பது நிச்சயம். இந்த பத்து காரியங்களிலும் எவ்வளவு உண்மை இருக்கிறதென்பதை ஒத்துக் கொள்வீர்கள். இப்போது உங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுவிட்டது. நன்மை செய்ய அறிந்தவனாக இருந்தும் ஒருவன் அதை செய்யாமல் போவானாகில் அது அவனுக்கு பாவமாக கருதப்படும். இந்த செய்திக்குப் பிறகுஎங்களுக்குத் தெரியாது என்று சாக்குபோக்கு சொல்வதற்கு உங்களுக்கு இடமேயில்லை. இதோசில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன். பெண்களேஎன்னை நேரிடையாகப் பாருங்கள். உங்களிடம்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று நான் உங்கள் மனசாட்சியைத் தொட்டிருக்கிறேனாநீங்கள் கடவுளிடம் ஜெபித்து உதவி பெறுங்கள். உடையணிதலைக் குறித்த இந்த விஷயத்தில் கடவுளுக்கு முன்பாக நீங்கள் சுத்த மனசாட்சியோடு இருக்கும்படியானஉணர்வுள்ள இருதயத்தைத் தரும்படி ஜெபித்துக் கேளுங்கள். லூக்கா 17ஆம் அதிகாரத்தின் வசனபகுதியைக் கொண்டு ஜெபியுங்கள். ரோமர் 14:13 வசனத்தை வைத்து ஜெபியுங்கள். ஜான் பைப்பர் என்கிற போதகர் சொல்லுவதை கவனியுங்கள்: உலகத்திலுள்ள கிறிஸ்தவப் பெண்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடுத்துவதைக் குறித்து உலகம் கூறுவதை கவனித்துப் பாருங்கள். கர்த்தரைப் பிரியப்படுத்தும்படியாக உடுத்துங்கள். கர்த்தருக்குப் பிரியமாக உடுத்தினாலும்நீங்கள் மிக அழகாகவும் உடுத்த முடியும்.  நீங்கள் முட்டாள்தனமாகவோநாகரீகமாக இல்லாமலோ உடுத்துவதுதான் கண்ணியமான உடையென நான் கூறவில்லை. கண்ணியமாக உடுத்தியும்மிகவும் அழகாகத் தென்படுகிற நூற்றுக்கணக்கான பெண்கள் இங்கு சபையிலே இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கௌரவமாக உடுத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய உடை ஆண்களுக்கு இடறலாக இருப்பதில்லை. அவர்கள் பட்டிக்காடு போல நாகரீகமற்றவர்களாகவும் காட்சியளிப்பதில்லை”. இதைத்தான் நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்புங்கள். மனந்திரும்புதலுக்கேற்ற கனியை நீங்கள் உடுத்துவதில் காண்பியுங்கள். கடவுளிடம் ஜெபித்துஅதற்கேற்ற நல்மனசாட்சியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாககண்ணியமாக உடையணிதலைக் குறித்து உங்களுக்கு அறிவுரை வழங்குகிறவர்களை வெறுக்காமல்அவர்கள் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கணவனோதகப்பனோதாயோகடவுள் பக்தியுள்ளவர்களோஉங்களுடைய போதகர்களோ கண்ணியமான உடையின் தரத்தைக் குறித்து உங்களுக்குக் கூறுவதை வரவேற்று ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சில உடைகளை கௌரவமானது என்று நீங்களே தீர்மானித்துக் கொள்வீர்கள். ஏனென்றால் அதை உங்களுடைய சொந்த அபிப்ராயத்தின்படியாக பார்க்கிறீர்கள். ஆனால்மற்றவர்களின் கண்களால் நீங்கள் எப்படி பார்க்கப்படுகிறீர்கள் என்பதே இங்கு முக்கியம். நீங்கள் ஒரு முஸ்லீம் பெண்ணைப் போல முழுவதும் மூடும் பர்தா அணிந்து வந்தால்தான் எனக்கு இடறலாக இருக்காது என்று யாராவது ஒரு ஆண் கூறினால்அவரை எங்களிடம் அழைத்து வாருங்கள். அவருடைய பிரச்சனை என்ன என்பதைக் கண்டுபிடித்து அதை சரிப்படுத்துவோம். சாக்கு போன்ற ஒரு துணியை வாங்கிகண்களுக்கு மாத்திரம் ஒரு துவாரமிட்டுமீதி உடல் முழுவதையும் மூடும்படியாக உடை தைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களுக்குக் கூறவில்லை. ஆனால்நீங்கள் உடுத்துவதில் தரம் இருக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.

கணவன்மார்களேஉங்கள் கண்களுக்கு இடறலாக இருப்பது எதுவென்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனைவி எப்படி உடுத்துகிறாள் என்பதை கவனியுங்கள். என் மனைவி என் படிப்பு அறைக்கு வந்து, “மார்டீன்இந்த உடை  எனக்கு எப்படியிருக்கிறது?” என்று கேட்கும்போதுசிலவேளைகளில் எனக்கு சங்கடமாக இருந்ததுண்டு. அந்த உடை கண்ணியக்குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றினால்மிகவும் இனிமையாக, “உடை உனக்கு நன்றாகத்தான் இருக்கிறதுஆனால் பிறரைக் கவரும் அளவுக்கு ரொம்பவுமே நன்றாக இருக்கிறதே” எனக்கூறி தடுத்துவிடுவேன். ஆண்களேஉங்கள் மனைவியின் உடையின் தரத்தை நீங்கள்தான் கண்காணிக்க வேண்டும். அவள் ஆணாக இல்லாததால்அவளுக்கு ஆணின் பார்வை தெரியாது. ஆணைப் போல அவள் உணர வேண்டும் என்று நீங்கள் அவளிடம் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் ஆண்கள் அல்லவாஆண்களைப் போல நடந்து கொள்ளுங்கள். மிகவும் மென்மையாக, “அன்பேஇந்த உடையில் இடைவெளி(slit) மிகவும் அதிகமாக இருக்கிறது” என்று சொல்லத் தொடங்குங்கள். அவர்கள் அதற்கு எதிர்மாறாக பதில் கூற முனைந்தால்,

இல்லைஇது கண்ணியமான ஆடை அல்ல. இது வேண்டாம். நான் உனக்கு கணவனாக இருக்கும் வரை நீ இந்தவிதமாக உடை அணிந்து இந்த வீட்டை விட்டுவெளியே செல்லக்கூடாது” என்று உறுதியாகத் தடை விதித்து விடுங்கள்.

ஆண்களேஉங்களைக் கேட்கிறேன்உங்களுக்கு அந்தவிதமான பரிசுத்த உணர்வு இருக்கிறதாஇல்லையென்றால்கடவுளிடம் சென்று அவ்விதமான பரிசுத்த உணர்ச்சியை அளிக்குமாறு கேளுங்கள். பெண்களிடம் மென்மையாக பேசுங்கள்இனிமையாகப் பேசுங்கள்உணர்வோடு பேசுங்கள். ஆனால்அவர்கள் உங்களிடம் சிணுங்க ஆரம்பித்துநீங்கள் கூறுவதற்கு எதிர்த்துஅதைக் கேட்காமல் மீறிப் போவது போல ஆயிற்றென்றால்நீங்கள் உறுதியாக நில்லுங்கள். மகள்களுக்கும்மனைவிக்கும் உடையின் தரத்தை நிர்ணியிக்க வேண்டியது தகப்பனும்கணவனும் ஆவர். உங்கள் பிள்ளைகள் உங்கள் வீட்டிலே வாழும் வரைக்கும் அவர்கள் மீது உங்களுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. உரிமை மாத்திரம் அல்லாமல்அவர்களை கண்ணியமாக உடுத்தச் செய்ய வேண்டிய பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு.

கிறிஸ்துவிக்குள் உங்கள் சகோதரியாகிய இந்தப் பெண்மணி(Mrs. Mohler) கூறுவதை மறுபடியும் கவனியுங்கள். இந்தப் பெண்மணியை நான் சந்தித்தில்லை. ஒருவேளை என்றாவது காணலாம். அவர் கூறுகிறார்: மகன்களை மாத்திரம் உடைய பெண்கள் அநேகம் முறை என்னிடம் கேட்கிறார்கள், ‘நாங்கள் என்ன செய்வதுஎங்களுக்கு மகள்கள் இல்லையே. இருந்தாலாவது அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்போம். ஆனால்உங்கள் மகள்கள் எப்படி உடுத்துகிறார்கள் என்பதை கவனிக்கக் கூடிய மகன்கள் மாத்திரந்தானே எங்களுக்கு இருக்கிறார்கள்!’ என்பார்கள். எந்த வயதுடைய ஆணாக இருந்தாலும் இந்த விஷயத்தில் போராடுகிறார்கள்.  தங்களுடைய மகள்களின் உடையின் காரணமாக எந்த ஆணும் இடறலடைந்து விடாதபடிக்கு கவனித்துக் கொள்ள வேண்டியது மகள்களை உடைய தாய்மார்களின் பொறுப்பு. மேலும்தங்கள் மகளை ஒரு கெட்ட உதாரணமாக  மற்ற பெண்களும் சுட்டிக் காண்பித்துவிடாத அளவில் அவர்களுடைய கண்ணியமான உடையை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் தாய்மார்களுக்கு இருக்கிறது”.

ரிச்சர்ட் பாக்ஸ்டர் (Richard Baxter) என்கிற ஒரு தூய்மைவாதியும் இது குறித்து தன்னுடைய கருத்தை பெண்களிடம் கூறியிருக்கிறார். பெண்களேநீங்கள் ஆணுக்கு முன்பாக இடறலை வைக்கக் கூடாது. அவர்களுடைய இச்சையாகிய நெருப்பைத் தூண்டி விடுபவர்களாக இருக்கக் கூடாது. நெருப்பை ஏந்திக் கொண்டு வைக்கோல் போருக்கு மத்தியிலே நடப்பவர்களைப் போல நீங்கள் மிகவும் கவனமாக பாவிகளாகிய மனிதர்களின் முன் நடமாட வேண்டும். இல்லையென்றால்நீங்கள் உணருவதற்கு முன்பாகவே அது மடமடவென்று பற்றிஅணைக்க முடியாத அளவுக்கு பெரு நெருப்பாகிவிடும்”. நீங்கள் குறிப்பிடுகிற வரையரைக்கு உங்கள் மகள்கள் கட்டுப்பட மறுத்தார்களென்றால் என்ன செய்வீர்கள்சுருக்கமாக சொல்வதானால்இந்த வீட்டிற்கு தகப்பன்தான் தலைவன்தாயார்தான் தலைவி. நாங்கள் என்ன தீர்மானிக்கிறோமோ அதுதான் இங்கு நடக்க வேண்டும். இதற்கு மேல் இதைக் குறித்து விவாதிப்பதற்கில்லை என்று திட்டவட்டமாகக் கூறக் கூடியவர்களாக இருங்கள்.

சபையிலுள்ள உங்களில் சிலருக்கு பெற்றோர் இல்லைஅல்லது கணவன் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு யார் பொறுப்புயார் அவர்களுடைய உடையின தரத்தைக் குறித்து அறிவுரை வழங்குவதுஎபி 3:13 அதற்கு பதில் அளிக்கிறது. உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்குஇன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்”. பாவத்தின் வஞ்சனை  ஆம்பாவமானது வஞ்சிக்கக் கூடியது. நான் ஒழுங்காகத்தான் உடுத்திக் கொண்டிருக்கிறேன்” என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பாவமானது உங்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. இதற்குத்தான் கடவுளுடைய ஜனங்களின் உதவி உங்களுக்குத் தேவையாக இருக்கிறது. கடவுளின் மக்களேஅப்படிப்பட்டவர்களை நீங்கள் அன்போடு தனியே அழைத்துக் கொண்டு போய், “சகோதரியேஎந்த ஆணையும் பாவத்தில் விழ வைப்பது உன்னுடைய நோக்கம் இல்லை அல்லவா?” என்று கேளுங்கள். ஆம் என்று அவர்கள் ஒத்துக் கொள்ளும்போது, “பார்உன்னை அறியாமலேயே நீ அணிந்திருக்கும் இவ்வித உடையானது அநேகருக்கு அசுத்த எண்ணங்களை உருவாக்குகிறது” என்று அன்போடு அவர்களுக்கு புத்தி கூறுங்கள்.

புருஷனுக்கோதாய்க்கோதகப்பனுக்கோதேவபக்தியுள்ளவர்களுக்கோ அடங்காத மிகவும் தரக்குறைவான நடத்தை ஏதும் சபையில் காணப்படுமானால்அதை உங்களுடைய மூப்பர்கள்தான் அணுக வேண்டியிருக்கும். நாங்கள் உங்களுக்கு எதிர்த்து நின்று, “வேதாகமம்பெண்களைத் தகுதியான வஸ்திரம் அணியும்படியாக கட்டளையிட்டிருக்கிறது. அது தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையாகவும் இருக்கிறது. ஆனால் உங்களுடைய உடை தரக்குறைவாக இருக்கிறது. ஆகவே நீங்கள் இப்படி உடுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று தடை செய்வோம். இது எங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பாக இருக்கிறது.

இந்த வேதவாக்கியமானது அநேக மாதங்களாக என்னை பாடுபடுத்திக் கொண்டிருந்தது. நான் அதோடு போராட வேண்டியதாக இருந்தது. இதைக் குறித்து என் மனைவி நன்றாக அறிவார். வேண்டுமானால்என் போராட்டத்தை உங்களுக்கும் சகமூப்பர்களுக்கும் என் மனைவி எடுத்துக் கூறக்கூடும். நான் மிகவும் சோர்ந்து போனேன். பல மாதங்களாக மனதில் சோர்வுற்றிருந்தேன். கர்த்தாவேஎன்ன தவறு நடக்கிறதென்று எனக்குத் தெரிகிறது. இதைக் குறித்து ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் எப்படி செய்வதுயார் முன்னிலையில்எந்த வகையில் செய்வதென்று எனக்குத் தெரியவில்லையே. கர்த்தாவேஎனக்கு ஞானத்தைத் தாரும் என்று ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு வசனம் என் செவியில் வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது. கள்ள தீர்க்கதரிசிகளைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி கூறுவது அது. அவர்கள் குரைக்க மாட்டாத ஊமை நாய்கள்” என்கிறார். ஊமை நாய்! காவலுக்கு வைக்கப்பட்ட நாயானதுதிருடன் வந்து திருடிக் கொண்டிருக்கையில்உட்கார்ந்து பார்த்துக் கொண்டுஅவன் கைகளை நக்கிக் கொண்டுகுரைக்காமல் இருந்தால் அது ஊமையான நாய்தான். நான் கடவுளிடம் ஜெபித்தேன், “ஓ! கர்த்தாவேகுரைக்காத ஊமை நாயாக இருந்த காரணத்திற்காக மூப்பராகிய நாங்கள் நியாயம் விசாரிக்கப்பட்டுவிடாதபடிக்கு காத்துக் கொள்ளும். உம்முடைய சபையின் பெண்கள் உலகத்தின் பாதிப்புகளின் காரணமாக உடையணிதலில் கண்ணியத்தையும்வேதாகமம் வரையறுக்கும் விதத்தையும் கடைப்பிடிக்காமல் இருப்பதை கண்டும் காணாமலும் இருக்கும்படியான உணர்ச்சியற்ற இருதயத்தை நாங்கள் கொண்டிராதபடிக்கு உதவி செய்யும்” என்று வேண்டிக் கொண்டோம். அதன் பலனாகவேஇந்த செய்தி உங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இதில், “தீர்மானிக்கப்பட்ட படியாக கண்ணியமான உடையணிதல்” என்பதைக் குறித்து பேசுவதற்கு மாத்திரமே நேரம் இடங்கொடுத்தது. பெண்களின் நளினமான உடை” என்பதைக் குறித்து பேசுவதற்கு இப்போது நேரமில்லை. அதை இந்த தியானத்தோடு சேர்த்துஅரைகுறையாக பேசி முடிக்க எனக்கு விருப்பமில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில்கடவுள் வழிநடத்தும் போது அதை கையாளலாம். அதற்குள்ளாக நான் அது சம்பந்தமாக என்னுடைய சிந்தனைகளை ஒருமுகப்படுத்திஇதைக் காட்டிலும் சிறப்பாக சொல்ல முயற்சிப்பேன்.

நாம் இதுவரை பார்த்ததை சுருக்கமாக சொல்வோமானால்நான் மூன்று விதிகளைக் கூறினேன். கடவுள்பாவிகளை நமது சபைக்கு அழைத்து வருவாரானால்அவர்கள் தங்களுடைய பாவநிலையிலே கண்ணியக்குறைவாக உடுத்தினவர்களாக இருந்தால்அந்தக் காரணத்துக்காக நாம் அவர்களை நம்மைவிட்டு விலக்கி விடக்கூடாது. அது ஒருபோதும் நமது கொள்கையல்ல. இரண்டாவதாகநான் கூறிய இந்த செய்தி நமது சபையில் அங்கத்தவர்களாக இருக்கும் பெண்களுக்குத்தான். உங்களில் சிலர்கவர்ச்சிகரமாக உடையணிந்து ஆண்களைக் கவருவதில் விருப்பம் உடையவர்களாக இருக்கிறீர்கள் என அறிவேன். இச்சபையிலுள்ள ஆண்களுள் ஒருவர் உங்களிடம் வந்துதிருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தால் அதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்ஆனால் ஆண்களைக் கவர வேண்டும் என்கிற விருப்பம் மாத்திரம் உங்களிடம் இருக்கிறது. உங்கள் ஆடை அலங்காரத்தை ஆண்கள் இரசிக்க வேண்டும் என்கிற விருப்பம் உங்களிடம் இருக்கிறது. நான் இதை மிகைப்படுத்திக் கூறவில்லை. நீங்கள் வேண்டுமென்றே இப்படி செய்வதாக கூறவில்லை. அது  ஏற்படுத்தும் விளைவுகளை அறியாமையினாலும் செய்து கொண்டு வருகிறீர்கள். அடுத்தபடியாக கூறிய விதிநமது சபைக்கென்று தீர்மானிக்கப்பட்ட விதியாக இதைக் கூறுகிறோமேயழியமற்ற சபைகளுக்கு நீங்கள் போகும்போது அங்கு இப்படியாந விதியில்லையே என ஆச்சரியப்பட வேண்டாம். அந்தந்த சபையின் போதகர்கள் அந்தந்த சபைக்கு பொறுப்பு.

உடை சம்பந்தமாக நாங்கள் கூறும் காரியங்களுக்கு வேதஆதாரம் என்ன என்பதை 1தீமோத்தேயுவிலிருந்து விளக்கினேன். பின்னர் ஆண்களின் கண்களைக் கவருகின்ற 10 காந்தங்கள் உங்கள் உடைகளில் இருப்பதை சுட்டிக் காண்பித்தேன். அது உண்மைதான் என்பதை நிருபிக்கும் விதமாக உங்கள் சகோதரரில் அநேகர் தங்கள் கைகளை உயர்த்திக் காண்பித்ததை நீங்களே பார்த்தீர்கள். இந்த இடறலைக் குறித்து நான் மாத்திரம் தனி ஆளாக நின்று போர்க்கொடி உயர்த்தவில்லை. அநேகம் சகோதரரும் அப்படியே நினைக்கிறார்கள் என்பதைத் தெரிவித்தார்கள்.

இதுவரைக்கும் அறியாமல் இருந்துஇப்போது உணர்ந்து கொண்ட நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் குறிப்பிட்டேன். முதலாவது மனந்திரும்பிகடவுளிடம் மன்னிப்பை வேண்டுங்கள். நல்மனசாட்சியைக் கொடுக்குமாறு வேண்டுங்கள். அடுத்தபடியாக உங்கள் கணவரோதகப்பனோதாயோவிசுவாசியோமூப்பரோ நிர்ணயிக்கும் விதத்திலான கண்ணியமுள்ள உடைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையுங்கள்.  உங்களிடமுள்ள தரக்குறைவான ஆடைகளை தூக்கியெறிந்துவிடுங்கள்.

டிரினிட்டி பாப்திஸ்து சபைக்கு வருகிறவர்கள் இங்குள்ள பெண்கள் கண்ணியமாக உடையணிந்திருப்பதைக் கண்டுஅதில் சுவிசேஷம் பிரதிபலிப்பதைக் காணட்டும். என் அருமை சகோதரிகளேஉடை காரணமாக. சுவிசேஷத்திற்கே ஆபத்து வந்திருக்கிறது. நாம் அதை பாதுகாப்போமாக. வெளி உலகில் தரக்குறைவான உடைகளே பிரபலமடைந்து கொண்டிருக்கிற இந்நேரத்திலேகிறிஸ்துவுக்குள்ளான பெண்கள்உடையிலும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்களாகஅதிலும் வேதவசனத்தைக் காத்துக் கொள்கிறவர்களாகநல்ல அழகோடும் ரசனையோடும் உடுத்திக் கொண்டுகடவுளின் நாமம் மகிமைப்படும்படியாக வாழ்ந்து காட்டுவோம்.

ஜெபிப்போம்:

பிதாவேஉம்முடைய வசனம் எங்கள் கால்களுக்கு தீபமாகவும் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறபடியால் ஸ்தோத்தரிக்கிறோம். இன்று கேட்ட இந்த தியானத்தில்உம்முடைய வசனம் எங்களில் வல்லமையாக கிரியை செய்ய ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமம் மகிமைப்படுவதற்காக எங்களுடைய ஜெபத்தைக் கேட்டு பதில் அளித்தருளும். ஆமேன்.



Share this article :

4 கருத்துகள்:

Jeyakumar சொன்னது…

very nice and needy message. thank you so much

robert dinesh சொன்னது…

நன்றி சகோதரரே

Joyel Babu சொன்னது…

Excellent Message. Thank you so much for sharing this in the Internet. I am planning to print this and distribute to all our Church members. very wisely prepared content. May God bless this Church and the Leadership.

Yours in His Vineyard,
Joyel Babu,
City Harvest A.G. Church,
Coimbatore, Tamil Nadu

Joyel Babu சொன்னது…

Thank you very much for sharing this wonderful article. I praise God for such a discerning spirit that the Church leadership has. May God be glorified in all our being. I am going to make this article available to our Church members. God bless this Church.

Yours in His Vineyard,
Pastor. Joyel Babu.S
City Harvest A.G. Church
Coimbatore, India.

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்