நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.

இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை.












கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படுகொலைகள் யாவரும் அறிந்ததே. ஆயிரக்கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனுடைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்தின் போதனை. உதாரணமாக இந்த வசனத்தை பாருங்கள் 

ஆதியாகமம்-4:11. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
12.
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.

தன் சகோதரனின் இரத்தத்தை சிந்தின காயீன் சாபத்தை கட்டிக் கொண்டான். தமிழர் சிங்களவருக்கிடையில் இடம்பெற்ற சண்டையில் இலங்கை நிலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்திற்காக நிச்சயம் இலங்கையில் சாபம் இருக்கும் . இரத்தம்  சிந்தப்பட்டது மட்டுமல்ல அநியாயங்கள், அக்கிரமங்கள், ஒடுக்குமுறைகள், என்பவற்றாலும் என் இலங்கை பெரும் சாபத்தை கட்டி வைத்து கொண்டிருக்கிறது. இந்த சாபம் இலங்கை மக்களை ஒரு போதும் நிம்மதியாக வாழ விடாது. அந்த சாபத்தின் விளைவு சுற்றி வளைத்து வந்துசாபத்திலிருந்து விடுதலை பெற்று விட்டதாக கூறிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களாகிய எம் வாழ்விலும் , எம் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். எனவே இந்த சாபத்திலிருந்து என் தாய் நாடு காக்கப்பட்டாக வேண்டும். அதற்கு ஒரு சிறிய ஆலோசனை.

நான் ஒரு தமிழன். சிங்கள, தமிழ் மக்களாகிய நாம் ஒருவருக்கொருவர் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ அநியாயங்களை செய்திருக்கிறோம். எவ்வளவோ தமிழ், சிங்கள சகோதரர்களின் ரத்தம் நம் நாட்டில் சிந்தப்பட்டுள்ளது. உலகின் பார்வையில் சிங்களவர்கள் கொடுமைக்காரர்களாகவும்தமிழர்கள் அப்பாவிகளாகவும் தெரிந்தாலும், தேவனின் பார்வையில் நாமும் குற்றவாளிகள். 

இரட்சிக்க படாதவர்கள் இதை ஏற்றுகொள்ள மறுக்கலாம். முதலில் கிறிஸ்தவர்களாகிய நாம் இதை ஏற்க வேண்டும்.

அடுத்ததாக நாம் செய்யவேண்டிய காரியம் என்ன தெரியுமா? நீ தமிழனாக இருந்தால் உனக்கு அநியாயம் செய்த சிங்களவனை நீ மன்னிக்க வேண்டும். நீ  சிங்களவனாயிருந்தால் உனக்கு அநியாயம் செய்த தமிழ் சகோதரனை நீ மன்னிக்க வேண்டும்.கடமைக்காக அல்ல, மனமார நீ மன்னிக்க வேண்டும். சிங்களவர் , தமிழர் , இஸ்லாமியர் ஆகிய யாவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து நீ ஒரு கிறிஸ்தவனாக மற்ற இனத்தவரை நீ மன்னிக்க வேண்டும்.இது மிகவும் கடினமானதுதான் ,ஆனால் கட்டாயமானது.

 நீ மன்னிக்காவிட்டால் நீ எப்படி தேவனின் பிள்ளையாயிருக்க முடியும்? அவர் சிலுவையில் நம்மை மன்னித்தாரே. ஏன் மன்னிக்க வேண்டும் தெரியுமா? நீங்களும் நானும் தேவனுடைய பிள்ளைகளாயிருப்பதால் நாம் யாரை மன்னிக்கிறோமோ அவர்களை நமது அப்பா மன்னித்து விட்டு விடுவார்.

யோவான் 20:23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்,

அதனால் அவர்களிநிமித்தம் நம் மண்ணுக்கு வரும் சாபம் நீக்கப்பட்டு விடும். இந்த உண்மையை எல்லாரும் ஏற்கா விட்டாலும் , இந்த நாட்டிலுள்ள எல்லா கிரிஸ்தவர்களும் ஏற்றுக்கொண்டு தங்களுக்கு அநியாயம் செய்த மற்ற இனத்தவரை  மனமார  மன்னித்தால்  தேசம்   சாபம்  நீங்கி  குணப்பட  முடியும்.

ஆனால் இன்று ''இரட்சிக்க பட்டவன் நான் '' என்று சொல்பவர்கள் கூட சிலர் தங்களுக்கு நடந்த அநியாயத்தை மனதில்  வைத்தவர்களாய் மன்னிக்க முடியாமல் இன்னும் குரோதத்தையும், பகையையும், பழி வாங்கும் எண்ணத்தையும்  அடி மனதில் வைத்து கொண்டு தேவனை ஆராதித்து அவருக்கு காணிக்கை கொடுக்கின்றனர்.

மத்தேயு-5:23. ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில்,
24.
அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.

எனவே கிறிஸ்தவர்களே ,தேவனுடைய பிள்ளைகளே மன்னியுங்கள். தேசம் வாழ்க்கைப்படும்.
                                                கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

---------------------------------------------------------By Robert Dinesh-----------
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்