நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-03

தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-03


நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்
தாழ்த்தப்பட்ட ஜாதியானான யூதன் கூட்டி சேர்க்கப்படுதல்


யூதர்கள் கி.பி. 70ம் ஆண்டிலும், கி.பி. 135ம் ஆண்டிலும் ரோம அரசாங்கத்தால் பலஸ்தீனா நாட்டிலிருந்து விரட்டப்பட்டு உலகத்தின் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்து குடியேறினர். அவர்கள் போய்ச் சேர்ந்த நாடுகளிலும் நிம்மதியாகக் குடியிருக்க முடியாதபடி ஆண்டவர்
அவர்களை தண்டித்தார். போய்ச் சேர்ந்த நாடுகளிலும் சித்திரவதை செய்யப்பட்டு, கொடுமைக்குள்ளாகி வேறு நாடுகளுக்குத் தப்பித்து ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

“கர்த்தர் உன்னைக் கொண்டு போய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும், பழமொழியும், பரியாசச் சொல்லுமாவாய்” (உபாகமம் 28.37) என்ற வாக்கு உண்மையாயிற்று.

அவர்கள் தள்ளப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது கீழ் ஜாதிக்ககாரா் (out casts) என்று கருதப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். இவர்களைப் பற்றி ஆண்டவர் எரேமியா தீர்க்கதரிசியின் மூலமாய்க் கீழ்கண்டவாறு உரைத்தார்.
முன்னுரைப்பு;- (கி.மு.606)

(எரேமியா 30.17) “அவர்கள் உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நிறைவேறுதல்;-
யூதர் போய்ச் சேர்ந்த சில நாடுகளில் மிகக் கேவலமாக எண்ணப்பட்டனர். அவர்கள் சொந்த நிலம் வாங்க முடியாது. சொந்த வீடு கட்ட முடியாது. மிருகத்தின் மேல் சவாரி போகும் யூதன் அந்நாட்டாரைக் கண்டால் இறங்கி ஒதுங்கிப் போக வேண்டும், அவன் யூதன் என்று அடையாளம் காட்டும் படியாக கறுப்பு உடை அணியவேண்டும்.
இவ்விதமாக கேவலப் படுத்தப்பட்டவர்களை எரேமியா 30.17 இன் படியும் மீகா 4.7 இன் படியும் “நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டு போனவளை பலத்த ஜபதியாகவும் வைப்பேன்” என்ற கர்த்தருடைய வாக்குப்படி கூட்டிச் சேர்க்கப்ட்டு பலத்த ஜாதியாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
விசேஷமாக அவர்கள் ஒடுக்கப்பட்ட கீழ் கண்ட நாடுகளிலிருந்து ஆகாயமார்க்கமாக இஸ்ரேல் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டனர்.

  •  ஜீன் 1949 முதல் ஜீன் 1950 வரை Operation Magic CarPet என்ற திட்டத்தின்படி 43.000 யூதர் ஏமான் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்னர்.
  •  1950ம் வருடம் “Operation Ali Baba” என்ற திட்டத்தின் கீழ் 1,21,000 யூதர் இராக் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.
  •   1985ம் வருடம் ஜனவரி மாதம் “Operation Moses” என்ற திட்டத்தின் கீழ் 20,000 யூதர் எத்தியோப்பியாவிலிருந்து கொண்டு வரப்பட்டனர்.
மற்ற அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள்.-


  • 1948க்கும் 1951க்கும் இடையில் லிபியாவிலிருந்து 30,500 யூதர் வந்தனர்.
  •  1955க்கும் 1957க்கும் இடையில் மொராக்கோ, டுனீஷியா முதலிய அரபு நாடுகளிலிருந்து 1,65,000 யூதர் வந்து சேர்ந்தனர்.

இப்படியாக இகழ்ச்சி அனுபவித்த அரபு நாடுகளாகிய இராக், ஏமான், எகிப்து, லிபியா, மொராக்கோ, டுனீஷியா முதலிய நாடுகளில் கடந்த 2000 ஆண்டுகளாக இருந்து வந்த யூத குடியிருப்புக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக ஒழிந்து, யூதருக்கு அத்தேசங்களிலிருந்த நிந்தை நீக்கப்பட்டு கா்த்தர் எரேமியா, மீகா தீா்க்கத்தரிசிகள் மூலமாக உரைத்த முன்னறிவிப்புகள் நிறைவேறிக் கொண்டு வருகின்றன.

  • ஜனுவரி 1990ல் ஒரு போயிங் 757 விமானம் மாஸ்கோவிலிருந்து டெல் அவீவிலுள்ள பென்கூரியன் விமானத்தளத்திற்கு 125 யூத மக்களுடன் வந்திறங்கியது. இதுவே மாஸ்கோவுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடியாக வந்த முதல் ஆகாய விமானம்.

ரஷ்ய அதிபர் மிக்காயில் கா்பஷேவின் புது கொள்கையின் படி 24,700 ரஷ்ய யூதர் 1989ம் ஆண்டு இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்தனர். 1988ம் ஆண்டு 4,400 ரஸ்ய யூதருக்குத் தான் ரஷ்யாவை விட்டு வெளியேற உத்தரவு கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு மத்தியிலிருந்து 1991ஆம் ஆண்டு முடிவு வரை  ரஷ்யாவிலிருந்து மட்டும் ரஷ்யா அதிபர் மிகாயில் கர்பஷேவின் தாராளக் கொள்கையினால் 1,50,000 ரஷ்ய யூதர் இஸ்ரேல் வந்து சேர்ந்திருக்கின்றனர்.


  •   ருமோனியாவிலுள்ள 30,000 யூதரில் 10,000 பேர் இஸ்ரேலுக்கு வந்து குடியேற ஆவலாயிருப்பதாக அதிகாரப் பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. (Source: News From Israel 1990 இது கடந்த தசாப்த தகவல்) 

ரஷ்யாவில் மாஸ்கோவிலிருந்து இஸ்ரேலில் டெல் அவிவிற்கு நேரடி ஆகாய மார்க்கப் பயணமும், ரஷ்யாவில் ஒடிசா என்ற துறைமுகத்திலிருந்து இஸ்ரேலில் ஹெய்ப்பா துறைமுகத்திற்கு நேரடி கப்பல் போக்குவரத்தும் நடத்தி ரஷ்ய யூத மக்களின் நாடு திருப்புதலை துரிதப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. (ஜனவரி 1990)

இவ்வாறு உலக நாடுகளில் உதாசீனப்படுத்தப்பட்டு “தள்ளுண்டவள்” என்று எண்ணப்பட்ட யூத மக்களுக்கு ஆண்டவர் விடுதலையின் காலத்தை கட்டளையிட்டு, தான் தெரிந்து கொண்ட நாட்டில் திரும்பவும் கூட்டிச் சேர்ந்து “அவர்களுக்கு ஆரோக்கியம் உண்டாக்குவேன்” என்று எரேமியா மூலம் கூறிய முன்னறிப்பை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.   

--------------------நன்றி இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்-----            
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்