''உனக்கில்லையம்மா உபதேசம் ஊருக்கு தானம்மா'' என்பதுதான் இன்றைய போதிப்பவர்கள் சிலரின் நிலை.
எல்லாருமல்ல……. சிலர்
''இயேசுவுக்காய் நீ சாதிக்க வேண்டும்'' என்று போதிப்பவர்கள் சிலரின் வேலையே போதிப்பதும் தூங்குவதுமே சாதிப்பது கிடையாது.
''பாவத்தை நீ வெல்ல வேண்டும்'' என்று போதிப்பவர்கள் சிலரின் வாழ்வே பாவத்தால் வெல்லப்பட்டுள்ளது.
“வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே செய்வதறியாரடி” என்று பாரதி இவர்களைப் பற்றிதான் பாடினாரோ?
பாவத்தைக் குறித்தும் பாவத்தால் வரும் நியாயத் தீர்ப்பை குறித்தும் போதிப்பவர்கள் பலர் அதே பாவத்தை செய்பவர்களாயிருப்பதால் அவர்கள் வாய்ச் சொல்லே அவர்களை நியாயம் தீர்க்கும்.
இதைத்தான் யாக்கோபு இவ்வாறு சொல்கிறார். “அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து போதகராகாதிருப்பீர்களாக”. யாக் .03.01
அப்படி போதகராயிருப்பதென்றால் பிரசங்கம் பண்ணுகிறவர்களே ஆகாதவர்களாய் போகாதபடி தங்கள் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்த வேண்டும். 1கொரி 09.27.
வாயிலொன்று வாழ்விலொன்று இறைவன் சித்தமல்ல சொல்வதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதுமே மேன்மை.
இதை வாசித்து விட்டு போவதல்ல நண்பரே முக்கியம். போதிக்கும், ஆலோசனை கொடுக்கும் நாம் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டாமோ?
போதிப்பவனாய் மட்டுமல்ல சாதிப்பவனாயும் இரு
-------------------------------------------------by robert dinesh-----------------------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..