நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT

நம்மால் என்ன பயன் ?

கடவுளைத் தேடுவதால் நமக்கு என்ன பயன் என்று கேட்கும் நாம் நம்மிடமும் ஒரு கேள்வியை நாமே கேட்டுப் பார்ப்போம்.

கடவுள் நமக்கு எவ்வளவோ நன்மைகளை செய்திருக்கிறார். நம்மை நரக நெருப்பிலிருந்து மீட்கும் படி தன்னையே பலியாகக் கொடுத்தார்.
அனுதினமும் நம்மை காக்கிறார், நடத்துகிறார், போஷிக்கிறார். இன்னும் எவ்வளவோ நன்மைகளை நமக்காய் அவர் செய்திருக்கிறார்.

இப்போது நாம் நம்மிடம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
நம்மால் தேவனுக்கு என்ன பயன்?

  • அழிந்து போகும் ஆத்துமாவுக்கு அவருடைய அன்பைக் கூறி நேர் வழியில் திருப்பும்படி நம்மை தேவன் அழைக்கவில்லையா?
  • போகும் திசை தெரியாமல் தவிப்பவனுக்கு திசை காட்டும் படி நம்மை தேவன் அழைக்கவில்லையா?
  • வேதத்தை போதிக்க நம்மை அவர் அழைக்கவில்லையா?

தேவனிடமிருந்து எப்போதுமே நன்மைகளையே பெற்று அனுபவிக்கும் நாம் தேவனுக்கு எதையாவது ஏன் கொடுக்கக் கூடாது?

காசு, பணம், காணிக்கையையா அவர் எதிர்பார்க்கிறார்?

தன்னுடைய அன்பை அடுத்தவருக்கும் காண்பித்து மக்களை அவர் அன்புக்குள் நடத்த வேண்டும் என்பதையல்லவா அவர் நம்மிடம் எதிர் பார்க்கிறார்?

சிந்திப்போம்……


நாம் இயேசுவை பயன் படுத்த அழைக்கப்பட்டவர்களல்ல
இயேசுவால் பயன்படுத்தப்பட அழைக்கப்பட்டவர்கள்

---------------------by Robert dinesh--------------------------
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்