நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , , » இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்

இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்

இஸ்லாமிய நண்பர் ஒருவரின் கேள்விக்கு நமது பதில்

இஸ்லாமிய சகோதரரின் கேள்வி
கிருஸ்துவ சகோதரர்களே நானும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் உங்களிடம்.. 
சர்வ வல்லமை படைத்த ஏசுவுக்கு ஏன் அவ்வளவு கொடுமையான மரணம்..



அவர் கடவுள் தானே
ஏன் அவரை கொன்றவர்களை இயேசு அந்த நிமிடமே தண்டிக்கவில்லை?
அவரை ஏன் காப்பாற்ற முடிய வில்லை..
தன்னை தானே காப்பாற்ற முடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?

கடவுளையே ஒரு தாய் பெற்று இருந்தால் அபோ அந்த தாய் தானே கடவுளாக இருக்க முடியும்
 
கடவுளை பெற்றெடுத்தவரை தானே நாம் கடவுள் என்று சொல்லமுடியும், அப்ப ஏன் அவர்களின் பிள்ளையை கடவுள் என்று சொல்லுகிறீர்கள்?
 

கடவுளையே பெற்றேடுத்தவர் தானே கடவுளாக இருக்க முடியும் ..
 
இது என்ன நியாயம்...
 
அப்படி பார்த்தல் கடவுள் அம்மாக்கு தானே மிக பெரிய சக்தி இருக்கனும்..?

நமது பதில்

சகோதரா நீங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
உங்கள் கேள்விகளுக்கு பதில் சுலபம்.  இது நான் தாழ்மையோடு தங்களுக்கு கூறும் பதில்..

////சர்வ வல்லமை படைத்த ஏசுவுக்கு ஏன் அவ்வளவு கொடுமையான மரணம்..////
சகோதரா இயேசு பூமிக்கு வந்ததே கொடுமையான மரணத்தை சந்திப்பதற்காகவே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் மனிதனின் பாவத்துக்கு தண்டணை கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் நீதி.
அதே போல அவனை அந்த தண்டணையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பது அவரது அன்பு.

கடவுள் என்றால் நீதியும் அன்பும் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கடவுள் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்? அன்பு , நீதி இவ்விரண்டையும் அவர் நிறைவேற்றித்தானே ஆக வேண்டும்? எப்படி நிறைவேற்ற முடியும் ? ஒன்றை நிறைவேற்றினால் ஒன்றை நிறைவேற்ற முடியாதே.

தேவன் அதற்கு ஒரு முடிவெடுத்தார். மனிதனின் பாவங்களுக்கான தண்டணையை தான் ஏற்றுக் கொண்டு மனிதனை மன்னிக்க முடிவெடுத்தார். அப்போது அன்பும் நீதியும் நிறைவேற்றப்படும் அல்லவா?

அதனால் தான் தேவன் தம்முடைய வார்த்தையை மனுவுருவாக்கினார் என்றும் அவ்வாறு மனுவுருவானவர்தான் இயேசு என்றும் வேதம் கூறுகின்றது ஐயா. அவருக்கு தேவத்துவத்தை கொடுத்தார்.

         யோவான்-01:01-03
1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

இப்படி மனுவுருவானவர் பூமியில் பிறக்க வேண்டுமல்லவா? அப்படி பிறப்பதற்கு கடவுள் தெரிந்தெடுத்த கர்ப்பம் தான் மரியாளின் கர்ப்பம். நீங்கள் நினைப்பது போல மரியாளுடன் கடவுள் உடலுறவு கொள்ளவில்லை. இதை சொல்லவே எனக்கு மேல் கூசுகிறது. கடவுள் மனித பெண்ணோடு உடலுறவு கொள்ள முடியுமா?
இயேசுவுக்கு  ஒரு போதும் மரியாள் தாயில்லை. மனுஷீகமாக வேண்டுமென்றால் தாயென்று நாம் விளங்கிகொள்ளலாம்.

அவர் இப்பூமியில் பாவமின்றி வாழ்ந்து நமக்காக தண்டிக்கப் பட்டார். மேலும் இந்த வேத வசனத்தை படியுங்கள். இவ்வார்த்தை இயேசு பிறப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாக எழுதப்பட்டது

ஏசாயா-53:3-5
 3.அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

 4.மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

 5.நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.


//////ஏன் அவரை கொன்றவர்களை அந்த நிமிடமேஇயேசு தண்டிக்கவில்லை
அவரை ஏன் காப்பாற்ற முடிய வில்லை.. தன்னை தானே காப்பாற்ற முடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்..//////

அவர்தான் அன்புள்ளவராச்சே? தன்னை அடித்த மனிதர்களை தண்டிக்க அவரது அன்பு இடங்கொடுக்கவில்லை சகோதரா. இயேசு எவ்வளவோ அற்புதங்களை செய்ததாக வேதம் கூறுகிறது. அப்படிப்பட்டவருக்கு மனிதர்களை தண்டிப்பது கடினமா சொல்லுங்கள்?

தன்னை காப்பாற்ற முடியாதவர் என்று கூறுகிறீர்கள். அவர் மரணித்த பின்  மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மேலும் இயேசு பூமிக்கு வந்ததே நம்முடைய பாவத்துக்காக தண்டிக்கப் படத்தானே ஐயா.
.
இந்த இறை வார்த்தையை பாருங்கள்

பிலிப்பியர்-02:07-08
7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்
.

நீங்கள் கேட்ட அனைத்த கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டேன் என்று நினைக்கிறேன் ஐயா. இதை நம்புவதும் நம்பாமல் போவதும் அவரவர் இஷ்டம்.

நான் கூறிய இக்கருத்துகளுக்கு ஆதாரமாக எக்கச்சக்கமான வசனங்கள் வேதாகமத்தில் உண்டு.

மேலும்
I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.

அவர் எமக்காக பலியானதை நம்பி அவரை ஏற்றுக்கொண்டு அவரிடம் பாவமன்னிப்பை பெறும் மனிதனே பரலோகம் போக முடியும்.
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
நாம் செய்யும் எல்லா பாவங்களையும் மன்னித்து கொண்டிருந்தால் அவர் நீதியுள்ள இறைவனாக இருக்க முடியாது. நாம் செய்யும் எல்லா பாவங்களுக்கும் தண்டித்து கொண்டிருந்தால் அவர் அன்புள்ள இறைவனாக இருக்க முடியாது.

Share this article :

2 கருத்துகள்:

soldierofjesus சொன்னது…

நான் இதை காப்பி பண்றேன் மன்னிக்கவும்

robert dinesh சொன்னது…

தாராளமாக.... ஒரே boss க்கு கீழ் வேலைபார்க்கும் நமக்குள் எதற்கு ஃபாமாலிட்டிஸ்?

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்