நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » » சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

Brother Chariah’s Testimony



நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால்இஸ்லாமிய மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும்எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.

இஸ்லாமிய பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல்அரபி மொழி, குர்ஆன் கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள் (cleansing rituals), தொழுகை, நோம்பு (உபவாசம்) போன்றவைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன்.
அதே வேளையில் பல அயல் நாடுகளைச் சுற்றிப் பார்க்கவும், இதர கலாச்சாரங்களையும் சமயங்களையும் அறியவும் வாய்ப்பு கிட்டியது. புத்த, இந்துத்துவ, யூத, கிறிஸ்தவ பக்தர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது மற்றும், உண்மையான மார்க்கம் எது என்று அறிய வேட்கையும் ஏற்பட்டது. இறைவன் ஒருவராக இருக்கும்போது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போதனைகளையுடைய வெவ்வேறு மார்க்கங்கள் இருக்க முடியாது. எனவே, ஒரே இறைவன் வெவ்வேறான சமயக் கல்வியை மனிதனுக்குக் கொடுக்க வாய்ப்பில்லை. அவர் படைத்த உலகைப் பாருங்கள். இயற்பியல்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் அனுதினமும் இவ்வுலக படைப்பாளியின் இப்படைப்பைக் கண்டு, கற்பனைக்கு எட்டாத அவரின் ஞானத்தையும், அறிவையும் அனுபவிக்கமுடியும். இவ்வுலக மார்க்கங்களில் உள்ள குழப்பங்களைப் போல, படைப்பாளியாகிய இறைவன் குழம்பிப்போய இவ்வுலகை படைக்கவில்லை.

நான் ஆறு வயதாய் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அலுவல் காரணமாக என் தந்தை வெளியூருக்குச் சென்று விடுவதால், மாதக் கணக்கில் நான் அவரைச் சந்திக்க முடியாமல் போவதுண்டு. ஒரு நாள் அவர் மேல் எனக்கு அளவு கடந்த ஏக்கம் உண்டாகி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அல்லாஹ்விடம் என் தந்தையை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஜெபிக்க என் சிந்தனையில் தோன்றியது. ஆனால், அப்போது எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அரபி மொழியில் தொழுதுக் கொள்ளும் முறையையும், சுத்தம் செய்துக்கொள்ளும் சடங்குகளையும் அறிந்திருந்த நான், ஒரு குறிப்பிட்ட தேவைக்காக எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. அந்த விருப்பத்தை அல்லாஹ்விடம் தெரிவிக்க முறையாக ஜெபிப்பது எப்படி என்பதையும் வரிசைக்கிரமமாக வாக்கியங்களைக் கூறவும் எனக்குத் தெரியவில்லை. பரிசுத்தம் நிறைந்த அல்லாஹ் வெகு தொலைவில் இருக்கிறார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அல்குர்ஆனையும் அதன் கட்டளைகளையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, நம்மை சடங்குகளால் சுத்திகரித்துக் கொண்டு, சரியாக அரபி மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே அந்த பரிசுத்த அல்லாஹ்வை அடைய முடியும். மாறாக, கிறிஸ்தவம் அன்பையும் மன்னிப்பையும் அடிப்படையாகக் கொண்ட எளிய மதம் என்றும் பலவீனமான மற்றும் தகுதியில்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். இளம் வயதில் கிறிஸ்தவத் திரைப்படங்களைப் பார்த்து எப்போதும் வியப்பதுண்டு. குவோ வாடிஸ் (Quo Vadis) என்ற படத்தில்ரோமாபுரியர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தக் கேவலமான செயலை எப்படி முன் வந்து மன்னித்தார்கள் என்பது இந்த உதாரணங்களில் ஒன்று. பிறகு இந்தக் கிறிஸ்தவர்கள் பசியாக வாடும் சிங்கக் கெபியுக்குள் தூக்கி எறியப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள். உயிர் துறக்கும் நிலையிலும்கூட அவர்கள் தங்கள் தேவனைத் துதித்து வணங்கினார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களினால் நான் விவரிக்க முடியாத பலத்தை பெற்றதாக உணர்ந்தேன். பலவீனத்திலும் அவர்கள் பெலன் கொண்டார்கள். அவர்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், நித்தியத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எனக்கு இது வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. இறுதியில் எந்த மதமும் சாராமல், என் தந்தை தாமதமின்றி மறுநாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டினேன்.

மறுநாள் காலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது புன்முறுவலுடன் நின்ற என் தந்தையின் முகம் தெரிந்தது. எதிர்பாராத வருகை தந்து எங்களை இன்பக் கடலில் அழ்த்த வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்ததாக அவர் தெரிவித்தார். அல்லாஹ் எங்கள் ஜெபத்தைக் கேட்டார் என்றுணர்ந்து நான் பேரானந்தம் கொண்டேன். அப்போது அல்லாஹ் இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினாலும், அந்த அல்லாஹ் உண்மையில் யார் என்று அறியும் வேட்கை அதிகரித்தது.

மலேசியாவில் வாழும்போது, இஸ்லாமிய சாங்கியங்களும் (சடங்குகளும்) சட்டதிட்டங்களும் பின்பற்றுவதற்கு மிகவும் சிறமமாக இருந்தது. நோன்பு மாதமாகிய ரமலானில் (ரம்ஜான்) நான் உமிழ் நீரை விழுங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொழுகுகைக்கு முன்பு ஆசனவாயில் இருந்து துர்காற்று வெளியேறி விட்டால், மீண்டும் ஒருமுறை என்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். கொட்டாவி விட்டு விட்டால், வாய் வழியாக தீய ஆவிகள் நுழைந்து விடாமல் இருக்க, குர்ஆனிய வசனங்களை வாசிக்க வேண்டும். உயிருள்ள நாயைத் தொடுவதற்கும் குறைந்தபட்சம் பொம்மை நாயோடு விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. குர்‍ஆன் வசனங்களைக் கொண்ட தாயத்தை நான் அணிந்திருந்தேன். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு குர்ஆனிய வசனங்கள் கொண்ட சங்கிலியை (தாயத்தை) கட்டாயம் கழற்றி விட வேண்டும். அணுசரிக்க வேண்டிய ஆயிரக் கணக்கான சட்ட விதிகள் இருந்தன. அவற்றை மீறினால், என்ன விபரீதம் ஆகிவிடுமோ என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. இதனால் எனக்கு மன அமைதி கிட்டவில்லை.

ஒரு காலக் கட்டத்தில் நான் வாசிப்பதற்கு பைபிள் (வேதாகமப் புத்தகம்) கிடைத்தது. நான் அதை வாசிக்க தொடங்கினேன். புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களையும் வாசித்தேன். வாசித்த ஒவ்வொரு வசனமும் என் உள்ளத்தை தொட்டது.இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் என்று உணர்ந்தேன். எவ்வளவு தீவிரமாக சட்டதிட்டங்களைப் பின்பற்றினாலும், நம்மால் வெல்ல முடியாது. நாம் நினைத்துப் பார்த்ததை விட இறைவன் மிகவும் பரிசுத்தமானவர். ஒரே ஒரு சிறிய பாவம் கூட நாம் பரலோகம் செல்லும் பாக்கியத்தை இழக்கச் செய்கிறது. மேலும் என் வாழ்வில் ஒரு முறையாவது நான் பாவம் செய்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால், எபேசியல் 2.8இல் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல (நீங்கள் கட்டளைகளை பின்பற்றுவதினால் அல்ல), இது தேவனுடைய ஈவு; என்று சொல்லியிருக்கிறார்.
****
ஒரு நாள் நானும் என் தந்தையும் கடும் நோய்க்கு ஆளானோம். பல வைத்தியர்களைச் சந்தித்தும் அவர்களால் நோயைக் கண்டறிய முடியவில்லை. வழங்கப்பட்ட எல்லா மருந்துகளையும் சாப்பிட்டப் பிறகும் நாளுக்கு நாள் எனது நோய் அதிகரித்துக் கொண்டே போனது. எனது உடல் எடை 12 கிலோ குறைந்ததோடு மரணம் என்னை நெறுங்கி விட்டது என்றும் உணர்ந்தேன். நான் தேவனிடம் ஜெபிக்க தொடங்கினேன். என் பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டேன். என்னை மன்னிக்கும் படி அவரிடம் வேண்டினேன். என் பாவங்களுக்காக தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக கொடுத்த தியாக பலியை நான் அங்கீகரித்தேன். உண்ணவோ நிற்கவோ மற்ற எந்த சரீரப்பிரகாரமான காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும் கூட ஜெபித்து எனது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படும் நாளைச் சந்திக்கத் தயாரானேன். பரலோகத்திற்குச் செல்வதுதானே எனது குறிக்கோள்!

நான்கு ஐந்து வாரங்களாக சிகிச்சையின்றி படுக்கையில் இருந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அநே நேரத்தில் என் தந்தை சிறப்புக் கவனிப்புப் பிரிவில் (ICU – Incentive Care Unit) அனுமதிக்கப்பட்டார். ஒரு காலைப் பொழுதில் உறக்கத்தில் இருந்த என்னை உறவினர்கள் எழுப்பி, தந்தை மரித்தத் துயரச் செய்தியை அறிவித்தனர்.

இருதயம் செயலிழந்ததால் என் தந்தை மரித்தார் என்றுச் சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் எங்கள் இருவரின் நோயின் காரணத்தை அறியகூடாமற் போனது. நாங்கள் இருவரும் விஷமிடப்பட்டோம் அல்லது பில்லி சூனியத்திற்கு ஆளானோம் என்ற வதந்தியும் பரவியது. மாற்கு 16.17-18ல் வாக்கு அளித்தபடி
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
நான் இன்னும் உயிரோடு வாழ்கிறேன் என்று விசுவாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் நரம்பு தளர்ச்சி (Nervous breakdown) நோய்க்கு ஆளானேன். மனவியல் மருத்துவர்கள் (Psychologists) கூட எனக்கு உதவ முடியவில்லை. மிக நெறுக்கமான சூழ்நிலையிலும் கூட உதவக் கூடிய தேவனை என் மனதில் நினைத்துக் கொண்டேன். தங்களை துன்பப்படுத்தி கொல்லப்பார்க்கும் எதிரிகளையும் மன்னித்து, மரிக்கும் நேரத்திலும் தேவனை துதிக்கும் படி, தன் விசுவாசிகளை தேவன் தயார்படுத்துகிறார். விஷம் அருந்தி ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையிலும் கூட தேவன் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். தற்செயலாக என் மனைவி ரே ஜென்னிங்ஸ் (Ray Jennings) என்ற ஓர் அமெரிக்க சுவிசேஷகரின் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் நாங்கள் குடும்பமாக கிறிஸ்தவத்தை விசுவாசிக்கத் தொடங்கினோம். அந்த சுவிசேஷகர் என் மீது கரம் வைத்து சுகத்திற்காக ஜெபித்தார். தேவனின் வாக்குப்படியே, “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ...வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்உடனடியாக எனக்குச் சுகம் கிடைத்தது.

நான் இன்று தேவனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். அவர் என்னோடு இருக்கிறார். இஸ்லாமியர்களே, பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவை விசுவாசிக்கத் தீர்மானித்தால், அவர் உங்களையும் வழிநடத்துவார் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

Popular Posts

கேள்வியும் பதிலும்