யுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை
அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.
என்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம்(விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.
மற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது?
*கிருபையும் கிரியையும்
பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்
நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார்
நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.
மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும் கரைகள் ஏராளம் என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக்கண்களை குருடாக்கி உள்ளான்.
இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.
யோபு பதினான்காம் அதிகாரத்தில் நான்காம் வசனம்
அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?
யோபு பதினைந்து அதிகாரம் பதினான்காம் வசனம்
மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?
இன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே கரை உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.
இன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம் கொடுக்கிரதினாலும் தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதி முதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..