கிறிஸ்தவின்
ஊழியக்காரர்கள் என அழைக்கப்பட வேண்டியவர்கள், உற்சவ மூர்த்திகளாக வலம்
வருகிறார்கள், பார்க்கிற திசைகளில் எல்லாம் ஏமாற்றுக்காரர்களே ஆதிக்கம்
செலுத்தி, தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுகிறார்கள்.
(மத்24:24)
இந்த செய்தியை உங்கள் பார்வைக்காக
தட்டச்சு செய்யும்போது மனதிலே ஒரு பாரம் ஏற்படுகிறது. எந்த ஒரு தனி
நபரையோ, நிர்வாகத்தையோ குறை சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும்,
உலகிற்கெல்லாம் மீட்பு உண்டாக்கும் தேவ திட்டத்தை, இவர்கள் வியாபரப்பொருளாக்கி, தேவனுடைய கிருபையை காமவிகாரத்துக்கேதுவாக புறட்டுகிறபடியினாலே, வாஞ்சையுள்ளவர்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்ற உணர்விலே…, கர்த்தருடையவன் என்ற உரிமையிலே…, கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டு தேவ பெலத்தோடு எழுதுகிறேன். “வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” மத் 19:11.

கிறிஸ்துவின் உபதேசம் தனி மனிதனுக்கு
மட்டுமே உரிமையானதல்ல…, ஆனால், எல்லா மனிதர்களும் அவ்வுபதேசத்திற்கு
கீழ்ப்படிய வேண்டும். அதுதான் தேவதிட்டம். அதற்காகத்தான் சீஷர்களை
உருவாக்க கர்த்தர் சொன்னார்.(மத்28:19) அதைத்தவிர, அதைத்
திரித்துப்பேசுவதற்கோ, திருத்துவதற்கோ, யாருக்குமே, எப்போதுமே
அனுமதியில்லை. (மத்5:18, மாற்13:31) என்பது என்றும் மாறாத தேவனுடைய
வார்த்தைகளாக இருக்க, தேவனுடைய வார்த்தைகளுக்கு முற்றிலும் எதிரானவைகளை,
அனைத்து தரப்பு கிறிஸ்தவர்களும் எவ்வித கேள்வியும் கேட்காதபடி, பின்பற்றும்
விதத்தில் போதித்து விட்டனரே எப்படி? உதாரணமாக, கிறிஸ்தவர்கள் என்று
தங்களைப் பல்வேறுப் பிரிவினர் அழைத்துக் கொண்டாலும், சத்தியத்தை சரியாகக்
கைக்கொள்ளுபவர்கள் மரியாதையாக ஆவிக்குரிய சபையினர் ,
பெந்தகோஸ்தேக்காரர்கள் விக்கிரஹம், சொருபம், ஓவியம், சின்னங்கள்
போன்றவைகளில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள். ஆனால் இன்று
96% ஆவிக்குரிய அல்லது பெந்தகோஸ்தேக்காரர்களுடைய வீடுகளில், போஸ்டர்கள்,
காலாண்டர்கள், பாடல் புத்தகங்கள், மாதப் பத்திரிக்கைகளில், கீச்
செயின்களில், ஜெப அட்டைகளில், வாக்குத்தத்த அட்டைகளில், தொலைக்காட்சியில்,
சி.டிக்களில், பைபிள் அட்டைகளில், ஆசீர்வாதமான இந்தியா 2010 எனும்
போஸ்டரில், கீழேக்காணும் இயேசு வந்து விட்டாரே…! எப்படி…!
யார் இந்த இயேசு…?
இந்த இயேசுவைப் படைத்தவர் (வரைந்தவர்) யார்..?
இந்த இயேசுவை நமக்கு அறிமுகப்படுத்தியவர் யார்.
இந்த இயேசு யார்?
எனச் சொல்லுகிறேன். தொடர்ந்து கவனமாய்
படியுங்கள்….!
படியுங்கள்….!
உலகெங்கும் உள்ள மனித இனங்களில் பெரும்பான்மையினர், அகிலத்தையெல்லாம்
படைத்த ஆண்டவரும் தாங்கள் விரும்புகிறபடிதான் இருக்க வேண்டும் என்று
நினைக்கிறார்கள்.
எனவே தங்களது நம்பிக்கையின்படியும் விருப்பத்தின்படியும் ஆண்டவரை உருவகப் படுத்துகிறார்கள். தங்களது சுய விருப்பதின்படி உருவான அந்தக்குறிப்பிட்ட ஒன்றை அனைத்து ஜனங்களும், இனங்களும் நம்பிக்கையாக கொண்டு வணங்க வேண்டுமென்பதற்காகப் பிரச்சாரமும் செய்கிறார்கள். விளைவு : தவறானக் கொள்கைகள் தடையே இல்லாமல் பரப்பப்படுகின்றது. இது கிறிஸ்தவ மார்க்கத்திலும் மலிந்து விட்டது.
எந்த ஒன்றையும் படமாக, சித்திரமாக வரைவதற்கு வேதத்தில் எங்கும் அனுமதி இல்லை. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். ( யாத் 20:4 ) என்று திருவிவிலியம் (பைபிள்) சொல்லியிருக்கிறது.
ஆனால் எவ்விதத்திலும் ஏற்கமுடியாத, உங்களையும் என்னையும் இந்த அண்டசராசரங்களையும், படைத்த இறைவன் இவர்தான் என, படம் வரைந்து பகடி செய்கிறார்களே.. எப்படி…?
சிலர் கேட்கலாம் அந்த நாட்களில் வாழ்ந்த எபிரேய மக்களுடைய முகச்சாயல் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து வரைந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த உலகில் உங்களையும் என்னையும் போல மனிதனாய் வாழ்ந்தவர்தானே ? எனவேதான், இதை நாங்களும் நம்புகிறோம். என்று பேசுகிறவர்கள், ஒன்றுமே படிக்காத முட்டாள்களாக இருந்தால் பரவாயில்லை. கொஞ்சம் போகட்டும் புரியவைத்துக் கொள்ளலாம் என விட்டு விடலாம்.
படித்தும் பரிதாபத்துக்குரியவர்களாக ஏமாளிகளாக இருக்கும் இவர்களைப் பார்க்கும்போதுதான்…, கோபம் இல்லை. நிச்சயமாக, கோபம் இல்லை வருத்தம் ஏற்படுகிறது.
இயேசுகிறிஸ்து யூத(எபிரேய) குடும்பத்தில் பிறந்தார், என்பது உண்மை. எனவே இயேசு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று, படம் வரைந்திருக்கிறோம். என்று தங்களுடைய செயலை நியாயப்படுத்தி படம் வரைகிறவர்கள் வாதிடுவார்களானால், இங்கே காணப்படும் படங்களில் இருக்கிற இவர்களெல்லாம் யார்?
(இன்னும் ஏராளமான படங்கள் இருக்கின்றன.
என்றாலும் நமது செய்திக்கு இங்கு இருக்கின்ற படங்களே போதும் என
நினைக்கின்றேன். கமென்ட் எழுதுங்கள். அல்லது, ஜீசஸ் என்று, கூகுளில் தேடிப்
பாருங்கள்.) சற்று மனசாட்சியின்படி சிந்தியுங்கள்…, இவர்களில் இயேசுகிறிஸ்து யார் ?
இங்கே காணப்படும் அனைத்துப் படங்களும்
இயேசுகிறிஸ்துவை கேலி செய்கிறவர்களால் கேலிபண்ணும் நோக்கத்துடன்
வரையப்பட்டதல்ல… இந்தப் படங்கள் எல்லாம், அநேக ஜனங்களுடைய வணக்கத்திற்கும்
வழிபாட்டிற்கும் உரியது. இதை இவர்கள் இயேசுகிறிஸ்து என்று நம்பி
வணங்குககிறார்கள்…! என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்எனவே தங்களது நம்பிக்கையின்படியும் விருப்பத்தின்படியும் ஆண்டவரை உருவகப் படுத்துகிறார்கள். தங்களது சுய விருப்பதின்படி உருவான அந்தக்குறிப்பிட்ட ஒன்றை அனைத்து ஜனங்களும், இனங்களும் நம்பிக்கையாக கொண்டு வணங்க வேண்டுமென்பதற்காகப் பிரச்சாரமும் செய்கிறார்கள். விளைவு : தவறானக் கொள்கைகள் தடையே இல்லாமல் பரப்பப்படுகின்றது. இது கிறிஸ்தவ மார்க்கத்திலும் மலிந்து விட்டது.
எந்த ஒன்றையும் படமாக, சித்திரமாக வரைவதற்கு வேதத்தில் எங்கும் அனுமதி இல்லை. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். ( யாத் 20:4 ) என்று திருவிவிலியம் (பைபிள்) சொல்லியிருக்கிறது.
ஆனால் எவ்விதத்திலும் ஏற்கமுடியாத, உங்களையும் என்னையும் இந்த அண்டசராசரங்களையும், படைத்த இறைவன் இவர்தான் என, படம் வரைந்து பகடி செய்கிறார்களே.. எப்படி…?
சிலர் கேட்கலாம் அந்த நாட்களில் வாழ்ந்த எபிரேய மக்களுடைய முகச்சாயல் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து வரைந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இந்த உலகில் உங்களையும் என்னையும் போல மனிதனாய் வாழ்ந்தவர்தானே ? எனவேதான், இதை நாங்களும் நம்புகிறோம். என்று பேசுகிறவர்கள், ஒன்றுமே படிக்காத முட்டாள்களாக இருந்தால் பரவாயில்லை. கொஞ்சம் போகட்டும் புரியவைத்துக் கொள்ளலாம் என விட்டு விடலாம்.
படித்தும் பரிதாபத்துக்குரியவர்களாக ஏமாளிகளாக இருக்கும் இவர்களைப் பார்க்கும்போதுதான்…, கோபம் இல்லை. நிச்சயமாக, கோபம் இல்லை வருத்தம் ஏற்படுகிறது.
இயேசுகிறிஸ்து யூத(எபிரேய) குடும்பத்தில் பிறந்தார், என்பது உண்மை. எனவே இயேசு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று, படம் வரைந்திருக்கிறோம். என்று தங்களுடைய செயலை நியாயப்படுத்தி படம் வரைகிறவர்கள் வாதிடுவார்களானால், இங்கே காணப்படும் படங்களில் இருக்கிற இவர்களெல்லாம் யார்?
(revivo தளத்தில் வெளியான கட்டுரை)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..