நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் bible and science சரித்திரம் மிஷனரிகளின் வரலாறுSHORT STORIES கேள்வியும் பதிலும் ABOUT BIBLEABOUT HOLYSPIRIT
Home » , » தற்கொலையா தீர்வு?

தற்கொலையா தீர்வு?


சிந்திக்க வைக்கும் சம்பவம்

இருபத்திரண்டு வயதுடைய  அழகிய இளம்  பெண்ணொ ருத்தி பாலம் ஒன்றின் பக்கச்  சுவரில் சாய்ந்தபடி  கீழே ஓடும் தண்ணீரையே பார்த்துக்கொண் டிருக்கிறாள். 
                       தன்னந்தனியாக அவள் அங்கு என்ன செய்கிறாள்? அவள் தற்கொலை செய்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள். பல்கலைக்கழக மாணவியான அவள், திருமணமாகாமலே ஒரு மனிதனுடன் வாழ்ந்து வந்தாள். அவனும் அவளை அன்பு செய்வதாக காட்டிக்கொண்ட போதிலும் , அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள
விரும்பவில்லை. அந்த இளம் வயதிலே சோகத்தின் மிகுதியாலும் குற்ற உணர்வின் நெருக்கத்தாலும் மனமுடைந்த அவள்  தற்கொலை என்ற முடிவுக்கே வந்துவிட்டாள். 

அவ்வேளையில் தெய்வாதீனமாக இருவர் அவளைத் தேடிக்கொண்டு பாலத்தருகே வந்தார்கள். அதி ஒருவர் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அத்துடன் அவர் ஒரு திருமண ஆலோசகரும்  கூட .
                                                                                          அவர் அவளைக்கண்டதும் ஓடி வந்து அவளின் கையைப் பிடித்து , அவள் கீழே குதித்து விடாத படி தடுத்து,
என்ன முட்டாள் தனமான காரியத்தை செய்யப் பார்க்கிறாய்? என்று கத்தினார் . அவளோ அவர் கையை உதறிவிட்டு, மீண்டும் தண்ணீரைப் பார்த்தவண்ணம் மௌனமாக நின்றாள். 
                                  சிறிது நேரம் கழித்து அந்த ஆலோசகர் அமைதியான  குரலில் ; நீ இங்கே குதித்தால் எங்கே  போய் சேருவாய் தெரியுமா?  எனக் கேட்டார். 
      அதற்கு அப்பெண் "அதை பற்றி எனக்கு கவலை இல்லை.எனக்கு வேண்டியதெல்லாம் என் தொல்லை ஒழிய வேண்டும். " என்று பதில் கூறினாள்.
                அப்படியாக உன் தொல்லை ஒழிந்துவிடாது. ஆலோசகர் பதிலளித்தார்.
 
''நான் செத்து விட்டால் என் பாரம் எல்லாம் ஒழிந்து விடும்.'' என்றாள் அவள். 

''இல்லை மகளே உன் பாரங்களை மரணத்துக்குப் பின் நீ நித்தியத்துக்குள் எடுத்துச்செல்லப் போகிறாய். ஏற்கனவே உன் பாரச் சுமைகளோடு, தற்கொலைப் பாவமும் உன்னைச் சேர்த்து அழுத்தும். எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல. அதன் மூலம் எந்தப் பிரச்சினையும் தீராது ''. 

''ஏனெனில் மரணத்தோடு எம் வாழ்வு முடிந்து விடுவதில்லை. மரிக்கும் போது நம் சரீரம் அழியுமே தவிர நம் ஆத்துமா அழிவதில்லை. மரணத்தின் பின் ஒரு நாள் நீதிபதியாக வரப்போகும் ஆண்டவருக்கு முன்பாக நாம் நிற்க நேரிடும்''

 ''ஒரே தரம் மரிப்பதும் பின் நியாயத்தீர்ப்பு அடைவதும் நமக்கு நியமிக்கப் பட்டிருக்கிறது.'' என வேதாகமம் கூறுகிறது. ஆகவே பாவத்தோடு பிறந்து பாவத்தோடு வாழ்கின்ற நாம் இறந்த பின்பு எனது பாவத்திற்கு தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.  என்றார் ஆலோசகர்.  

அவளோ 'இப்படியே எத்தனை நாள்தான் என்னால் வாழ முடியும்? இனியும் இந்த வேதனை எனக்கு வேண்டாம்'.
அழுதாள்.
தொடர்ந்தார் ஆலோசகர்.  

''உன் வேதனையோடு அதில்  விழு என்று நான் சொல்லவில்லை. உன் பாரம் நீங்கி நீ சுகமாய் வாழ வேண்டும் என்றுதான் நான்  விரும்புகிறேன். ''
''நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள்  என் கஷ்ட்டங்களில் ஒன்று கூட உங்களுக்கு தெரியாது. எனக்கு ஏற்றது சாவு ஒன்றுதான்''
'' நீ சொல்வது சரி நீ சாகத்தான் வேண்டும். நானும் சாகத்தான் வேண்டும். மனிதர்களாகிய நம் அனைவருக்குமே மரணம் தகுதியானது. ஏனெனில் பாவத்தின் சம்பளம் மரணம் என வேதாகமம் கூறுகிறது. ''

''அப்படிஎன்றால் என்னை சாக விடுவது தானே. ?''
''இல்லை அதற்கான நேரம் பிந்தி விட்டது. உனக்காக இயேசுக்கிறிஸ்து ஏற்கனவே மரித்து விட்டார். உன்னுடைய பாவத்துக்கான தண்டணையையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். இனி நீ சாக வேண்டியதில்லை .''
''இல்லை சரியான நேரம் வந்து விட்டது. நன் சாகத்தான் வேண்டும்.''

''மகளே நீ செய்யப்போவது தவறான செயல் என்று உனக்குப் புரிந்தும் கூட, அதை ஏற்றுக்கொள்ள உனக்கு விருப்பம் இல்லை.''
''ஐயோ  நான் கறைப்பட்டவள். ஒரு மனிதனால் மட்டுமல்ல ஆறு மனிதர்களால் நான் கறைப்படுத்த்ப் பட்டிருக்கிறேன், எனக்காகவும் அந்த இயேசுக்கிறிஸ்து மரித்தார் என்றா கூறுகிறீர்கள்? என்னைப் போன்ற ஒரு கேடு கெட்ட பாவிக்கும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு என்றா கூறுகிறீர்கள் ? '' 

"ஆம் மகளே உனக்கும் வாழ்க்கையில் எதிபார்ப்பு உண்டு. அதனாலேயே இப்போது உன்னை தேடிக்கொண்டு வந்தேன். உன் பாவத்திற்கான தண்டனையை இயேசுக்கிறிஸ்து ஏற்றுக்கொண்டு விட்டார். ''

''இதை நான் கூறவில்லை. உன்னையும் என்னையும் படைத்த நம்முடைய கடவுள் கூறுகிறார். ''

''மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களை  சுமந்தார். ... நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.''(ஏசாயா-53 :45).  

எனவே உன் முடிவை மாற்றிக்கொள் . என்றார் ஆலோசகர்.

இவ்விதமாக இயேசுவையும்,அவர் தரும் பாவ மன்னிப்பு, புது வாழ்வு குறித்தும் அறிந்து கொண்ட அந்தப் பெண் தன்னுடைய முடிவை மாற்றி ஒரு புது வாழ்வைத் தொடங்கினாள். 

''ஒருவன் கிறிஸ்துவுக்குள்  இருந்தால் புது சிருஷ்டியாகிறான் , பழையவைகள் ஒழிந்து போயின , எல்லாம் புதிதாயின.''(2 கொரிந்தியர் -05 ;17 )
இறுதியில் ஒரு நல்ல மனிதர் அவளை திருமணம் முடித்து அவளுக்கு வாழ்வு கொடுக்க முன் வந்தார்.


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை எழுதுக ..

கேள்வியும் பதிலும்