♥ Praise The LOrd JESUS ♥ அன்பானவர்களே!.. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கவனித்துப்பாருங்கள் அவருக்கு நிகரானவர் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின ஆண்டவராக அவர் இருந்த போதிலும் கூட மனுமக்கள் மீதுவைத்த அன்பின் மூலமாக ஒரு சாதாரண மனிதராக இந்த உலகத்தில் இநங்கி வந்து கல்வாரி சிலுவையில் தன்னுடைய ரத்தத்தை சிந்தி நமக்காக மரித்தவர் நமக்காக மரணத்தை மூன்றாவது நாளிலே உயிரோடு கூட எழந்து இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார்.
. இப்படிப்பட்ட ஒருவரை இந்த உலகத்தில் வேறு எங்கு பார்க்கமுடியும் அவருக்கு நிகராக ஒருவரையும்
சொல்லமுடியாது. அவரைப்போல பரிசுத்தரென்று இன்னொருவரை காண்பிக்கமுடியாது.. அவரைப்போல வல்லமையுள்ளவரென்று அவருக்கு ஈடாக இன்னொருவரை சொல்லமுடியாது.யாரும் அவருக்கு ஈடாக முடியாது அவருக்கு நிகராக முடியாது.
அப்படிப்பட்டவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.. அன்புள்ளவர்களே!.. அந்த நிகரற்ற இயேசு இப்பொழுதும் உங்களை சந்தித்துக்கொண்டுஇருக்கிறா ர்.. இதை வாசிப்பவர்களும் விசேசமாக அவருடைய அன்பை எண்ணிப்பாருங்கள்.. அவருடைய அன்பை யாருடைய அன்பிற்கும் ஒப்பிட்டுச் சொல்லவே முடியாது இந்த உலகத்தில் உலகப்பிரகாரமாண அன்பைக்குறித்து சொல்லும் போது ( தாயினுடைய அன்புதான் மேலான அன்பு என்று சொல்லுவார்கள்..) ஆனால் அந்தத் தாயினுடைய அன்பைக்காட்டிலும் மேன்மையானது இயேசுவின் அன்பு அது என்றும் மாறாத அன்பு..
ஒரு தாய் தன்னுடைய சொந்த குழந்தையினிடத்தில் தான் அன்பு காண்பிக்கமுடியும் ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவரை சத்துருவாய் எண்ணி பகைத்த மக்களையும் நேசித்து அவர்களுக்காகவும் தன் ஜீவனை கொடுத்து தன்னை பலியாக கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினாரே.. அந்த அன்புக்கு ஈடாக ஒருவருடைய அன்பையும் ஒப்பிடவே முடியாது..
என் வாழ்க்கையில் அந்த அன்பை ருசித்திருக்கிறேன்.. ஒரு நேரத்தில் நான் இயேசுவை மறுதலித்தவன்.. அவரை நான் மதிக்காதவன்.. நான் கிறிஸ்தவனாக இருந்தும் கூட எல்லா கடவுளும் ஒன்று என வெறு தெய்வங்கள் பின்னால் சென்றவன்.. இயேசுவை அறிந்தும் பல பாவங்களில் கேவலமாக நடந்தவன் நான்.. அவருடைய உண்மையான அன்பை வெறுத்து ஒதுக்கியவன் நான்..இப்படியெல்லாம் இருந்த என்னை ..அன்புக்காக ஏங்கித்தவித்த போதும் . எல்லோராலும் வேறுத்து ஒதுக்கி தனிமையில் இருந்த போதும் என்னை வெறுக்காமல் என்னை மறக்காமல் தேடி வந்து என்மீது அன்பு காட்டியவர்..
என் வாழ்க்கையை மாற்றி அவருடைய அன்பில் மகிழச்செய்தவர்.. இன்று நான் உயிரோடு இருக்க காரணம் இயேசு கிறிஸ்துதான்... அவரின் அன்பை நான் எண்ணிப்பார்க்கும் போது இன்றைக்கும் கூட நினைத்து அழுதுகொண்டுஇருக்கிறேன்.. எனக்கு என்றும் உண்மையான அன்பை தந்தவர். இந்த அன்பிற்கு இணையாக யாருடைய அன்பை சொல்லமுடியும்?..
என் அன்பானவர்களே!.. அதே என் இயேசு உங்கள் ஒவ்வோருவரையும் நேசிக்கிறார்.. இப்போழுதும் கூட உங்களுக்காக பரிதபிக்கிறார்.. உங்களுக்காக தன் ஜீவனையும் கொடுத்தவரல்லவா?.. என்னை நேசிக்க யாருமில்லை.. என்னை புரிந்து கொள்ள யாருமில்லை எனக்கு உதவி செய்வார் யாருமில்லை?.. என்று கலங்குகிறீர்களா?... நிகரற்ற இயேசு உங்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்... எனக்கு அந்த அன்பை தந்தவர் உங்களையும் நேசிக்கிறார்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை எழுதுக ..